RSS

உடல் எடையை அதிகரிக்கும் சீதாப்பழம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய பழம் தான் சீதாப்பழம், இது தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது.

100 கிராம் சீதாப்பழத்தில் உள்ள சத்துக்கள்

நீர்ச்சத்து- 70.5%, புரதம்- 1.6%, கொழுப்பு- 0.4%, நார்ச்சத்து- 3.1%, கால்சியம்- 17 மில்லி கிராம், பாஸ்பரஸ்- 47 மில்லி கிராம், இரும்புச்சத்து- 4.31 மில்லி கிராம், வைட்டமின் சி-37 மில்லி கிராம், விட்டமின் பி காம்ப்ளக்ஸ் சிறிதளவு, மாவுச்சத்து- 23.5%, கலோரி அளவு- 10.4% ஆகும்.

மருத்துவ பயன்கள்

காய்ச்சலை குணப்படுத்தும். செரிமானம் மேம்படும், மலச்சிக்கல் நீங்கும்.
இதில் கால்சியம் சத்து இருப்பதால் எலும்புகள் பலப்படும்.
விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும், பேன்கள் ஒழிந்து விடும்.
சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது, பொடுகு மறைந்துவிடும்.
சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும்.
இதில் காப்பர் அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்றது, இதனை சாப்பிடுவதன் மூலம் விரைவிலேயே குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது.
கண்பார்வையை பலப்படுத்துதல், இரத்தசோகையில் இருந்து காப்பாற்றுதல் போன்ற பணிகளை செய்கிறது.
குறிப்பு

உடல் எடையை அதிகரிக்கும் பழம் என்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment