RSS

தொப்பையை குறைத்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா?

இரண்டே வாரங்களில் பெற உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் நல்ல மாற்றத்தைக் காணலாம். குறிப்பாக இவைகளை தொப்பை குறையும் வரை மட்டுமின்றி, குறைந்த பின்னரும் பின்பற்ற வேண்டும். இப்போது இரண்டே வாரங்களில் தொப்பையைக் குறைத்து தட்டையான வயிற்றைப் பெற உதவும் சில வழிகளைப் பார்ப்போம்.
தண்ணீர் மற்றும் எலுமிச்சை
அதிகப்படியான வாய்வும் தொப்பை வருவதற்கு ஒரு காரணம். எனவே இத்தகைய பிரச்சனையை போக்கி, செரிமான மண்டலத்தை சீராக செயல்பட வைக்க, தினமும் காலையில் வெறும் வயிற்றில், வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், தொப்பை குறைந்து தட்டையான வயிற்றைப் பெறலாம்.
புரோட்டீன் உணவுகள்
உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை புரோட்டீன்கள் தான் உடைக்கும். எனவே புரோட்டீன் உணவுகளை அதிகம் உட்கொண்டு வந்தால், கொழுப்புக்கள் உடைக்கப்பட்டு, உடலில் இருந்து வெளியேறி, உடல் சிக்கென்று இருக்கும். ஆனால் டயட்டில் மாற்றங்களை கொண்டு வரும் போது, மருத்துவரிடம் ஆலோசித்து பின் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் தொப்பை குறைவதுடன், உடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.
காய்கறி மற்றும் பழங்களின் டயட்
விரைவில் தொப்பையைக் குறைக்க வேண்டுமானால், டயட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் காய்கறிகளில் தக்காளி, பசலைக்கீரை போன்றவற்றையும், பழங்களில் ஆப்பிள் மற்றும் அன்னாசியையும் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
சர்க்கரையை குறைக்கவும்
தொப்பை குறைந்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமானால், எடுத்துக் கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் போது, உடலில் தங்கியுள்ள கொழுப்பின் அளவும் குறையும். அதிலும் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து சர்க்கரையை உணவில் சேர்க்காமல் இருந்தால், நல்ல மாற்றம் தெரியும். குறிப்பாக பேக்கரி உணவுகள், ஜங்க் உணவுகள், ஐஸ் க்ரீம்கள் மற்றும் பால் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி
எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், தினமும் குறைந்தது 3-4 நிமிடம் உடற்பயிற்சி செய்து வந்தால், மன அழுத்தம் நீங்குவதுடன், வயிற்றில் தங்கியுள்ள கொழுப்புக்களும் கரைந்துவிடும். எனவே உங்களுக்குப் பிடித்த, உங்களால் முடிந்த உடற்பயிற்சிகளை காலையில் செய்து வாருங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

செவ்வாழை



திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.
பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தோல் தொற்று நோய்கள் குணமாக

*அகத்தி கீரைச்சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் விரைவில் உதிர்ந்து விடும்.
*அருகம்புல் வேர், சிறியாநங்கை வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து சாப்பிட்டால் தோல் நோய்கள் குணமாகும்.
*எலுமிச்சை பழச்சாற்றில் தேன் கலந்து முகத்தில் பூசி வந்தால் தோல் சுருக்கம் மறையும்.
*எலுமிச்சம்பழச்சாறு, பாதாம் பருப்பு, தயிர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் மறையும்.
*எலுமிச்சம்பழச் சாற்றில் லவங்கப் பொடியைக் கலந்து முகத்தில் பூசி வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.
*நல்லெண்ணெய்யை கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து பருக்கள் மீது பூசி வந்தால் விரைவில் மறையும்.
*குப்பை மேனி கீரையை பொடி செய்து தினமும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் இளமையில் ஏற்படும் தோல் சுருக்கத்தை தவிர்க்கலாம்.
*கொத்தமல்லியை அரைத்து 2 நாள்களுக்கு ஒரு முறை முகத்தில் தடவினால் பருக்கள் மறையும்.
*சோற்றுக் கற்றாழையின் சாறை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் உதிர்ந்து தோல் மென்மை அடையும்.
*முகத்தில் தேவையற்ற முடிவளர்வதைத் தடுக்க கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்திக் குளிக்கலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நரைத்த முடிக்கான 30 வீட்டு சிகிச்சைகள்!!!

நெல்லிக்காய் :

சீக்கிரமே நரை முடி பெறுவதற்கு சிறந்த சிகிச்சை அளித்திட நெல்லிக்காய் உதவுகிறது. நெல்லிக்காய் துண்டுகள் சிலவற்றை தேங்காய் எண்ணெயில் போட்டு, அதன் நிறம் கருமையாகும் வரை கொதிக்க வையுங்கள். பின் நரைத்த முடிக்கு சிகிச்சையளிக்க அதனை முடியின் மீது மசாஜ் செய்யவும். நெல்லிக்காயை எண்ணெய் அல்லது பேஸ்ட் வடிவிலும் பயன்படுத்தலாம். நெல்லிக்காய் கஷாயம் உங்கள் நரைத்த முடியை 15 நாட்களுக்குள் குணப்படுத்தும். இந்த கஷாயத்தை தயார் செய்ய, நெல்லிக்காய் துண்டுகள் சிலவற்றை சில மணி நேரங்களுக்கு ஊற வைத்து, அதனுடன் 1 டீஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையை இரும்பு பாத்திரம் ஒன்றில் இரவு முழுவதும் வைத்திடவும். மறுநாள் காலை முட்டை, எலுமிச்சை சாறு மற்றும் தயிருடன் சேர்த்து அந்த கஷாயத்தை தடவவும். முடியில் உள்ள நிறமியை புதுப்பிக்க சிறந்த ஆக்கக்கூறாக விளங்குகிறது நெல்லிக்காய். நெல்லிக்காய் சாறை அப்படியே பருகலாம். இது தலை முடி பிரச்சனைக்கு தீர்வு காண்பதோடு பிற உடல்நல பிரச்சனைகளுக்கும் வரப்பிரசாதமாக அமையும்.

இஞ்சி:

நறுக்கிய இஞ்சி துண்டுகளை ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து தினமும் உட்கொண்டு வந்தால் உங்கள் முடி நரைப்பது தடுக்கப்படும்

தேங்காய் எண்ணெய்:

பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்தாக அறியப்படும் தேங்காய் எண்ணெய், முடி நரைப்பதையும் தடுக்கும். உங்கள் தலைச்சருமத்தில் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறையும் சேர்த்து மசாஜ் செய்தால், கருமையான பளபளக்கும் முடியை பெறலாம்.

நெய்:

சுத்தமான நெய்யை கொண்டு வாரம் இருமுறை தலையில் மசாஜ் செய்தால், தலை முடி நரைக்கும் பிரச்சனை நிற்கும்.

கறிவேப்பிலை:

கொஞ்சம் கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் போட்டு, அது கருப்பாகும் வரை கொதிக்க வைக்கவும். இதனை தலை முடி டானிக்காக கருதி தலைச்சருமத்தில் தடவி வந்தால், முடி கொட்டுதல் மற்றும் நிறமி பிரச்சனை ஆகியவைகள் நீங்கும். கறிவேப்பிலையை தயிர் அல்லது மோருடன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

மருதாணி:

2 டீஸ்பூன் மருதாணி பொடி, 1 டீஸ்பூன் வெந்தய பேஸ்ட், 2 டீஸ்பூன் துளசி இலை பேஸ்ட், 3 டீஸ்பூன் காபி, 3 டீஸ்பூன் புதினா சாறு மற்றும் 1 டீஸ்பூன் தயிரை கலந்து கொள்ளவும். இந்த கலவை நரைத்த முடிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிக்கும். இதனை சீரான முறையில் தடவி வந்தால் நல்ல பயன் கிடைக்கும். மருதாணியை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தினால் கருமையான பழுப்பு நிற முடியைப் பெறலாம். மருதாணியை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் வால்நட் பசையுடன் சேர்த்து பயன்படுத்தினாலும் சிறப்பாக செயல்படும். இது நரை முடியை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், முடியை பளபளவென வைத்திருக்கவும் செய்யும்.

பீர்க்கங்காய்:

பீர்க்கங்காயை தேங்காய் எண்ணெயில் போட்டு, அது கருமையாகும் வரை 3-4 மணிநேரத்திற்கு கொதிக்க வைக்கவும். இந்த எண்ணெயை தலைச்சருமத்தில் மசாஜ் செய்தால், சீக்கிரத்திலே நரைக்கும் தலை முடியை குணப்படுத்தும்.

ப்ளாக்:

டீ ஒரு கப் ப்ளாக் டீயுடன் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் முடியையும், தலைச்சருமத்தையும் இதனை கொண்டு மசாஜ் செய்து, பின்பு 1 மணிநேரம் கழித்து அலசி விடவும். நரை முடி பிரச்சனைக்கு தீர்வு காண இதனை தொடர்ந்து பின்பற்றவும்.

வெங்காயம்:

இளம் வயதிலேயே முடி நரைத்தல், முடி கொட்டுதல் மற்றும் வழுக்கை விழுதல் ஆகிய பிரச்சனைகளை தடுக்க வெங்காய ஜூஸ் உதவும்.

கருப்பு:

மிளகு 1 கிராம் கருப்பு மிளகுடன் ½ கப் தயிரை கலந்து கொள்ளவும். சீக்கிரத்திலேயே முடி நரைத்தால், இந்த கலவையை கொண்டு தலைச்சருமத்திலும், முடியிலும் மசாஜ் செய்யுங்கள். இந்த கலவையில் எலுமிச்சை சாற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சீமைச்சாமந்தி:

சீமைச்சாமந்தியை தண்ணீரில் போட்டு 20 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். பின் அது ஆறிய பிறகு வடிகட்டவும். இந்த நீரை சீரான முறையில் தடவி வந்தால், முடி நரைத்தலுக்கு சிகிச்சையாக விளங்கும்.

ரோஸ்மேரி:

ரோஸ்மேரி மற்றும் வேம்பு இலைகளை சரிசமமான அளவில் எடுத்துக் கொண்டு, அதனை ஒரு கப் தண்ணீரில் போடுங்கள். இந்த நீரை வடிகட்டி, அதனை ஒரு இயற்கையான முடி சாயமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். ரோஸ்மேரி எண்ணெய்யை கூட நேரடியாக தடவிக் கொள்ளலாம்.

பாதாம் எண்ணெய்:

பாதாம் எண்ணெய், எலுமிச்சை ஜூஸ் மற்றும் நெல்லிக்காய் ஜூசை சரிசமமான அளவில் கலந்து கொள்ளவும். இந்த கலவையை கொண்டு மசாஜ் செய்து, முடி நரைத்தலுக்கு சிகிச்சை அளியுங்கள்.

சீகைக்காய்:

3-4 துண்டு சீகைக்காயை 10-12 பூந்தி கொட்டைகளுடன் ஒரு ஜாடி தண்ணீரில் முந்தைய நாள் இரவு போட்டு விடவும். இதனை கொதிக்க வைத்து ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து ஒரு இயற்கை ஷாம்புவாகப் பயன்படுத்துங்கள். கொஞ்சம் நெல்லிக்காயை எடுத்து தனியாக ஊற வைக்கவும். இதனை கொதிக்க வைத்து கண்டிஷனராக பயன்படுத்தலாம். இந்த சிகிச்சை முடி நரைத்தல், பொழிவின்மை, முடி கொட்டுதல் போன்ற பல முடி பிரச்சனைகளை தீர்க்கும்.

கொய்யாப்பழ:

இலைகள் நரைத்த முடிகளை மீண்டும் கறுப்பாக மாற்ற கொய்யாப்பழ இலைகள் உதவிடும். கொய்யா இலைகள் சிலவற்றை அரைத்து, அதனை உங்கள் தலைச்சருமத்தில் சீரான முறையில் தடவும்.

அரைக்கீரை:

நற்பதமான அரைக்கீரை சாறை தடவினால் தலை முடியின் இயற்கையான நிறத்தை பாதுகாத்து, அப்படியே பராமரிக்கவும் செய்யலாம். மிகவும் பயனுள்ள வீட்டு சிகிச்சை இது.

கடுகு எண்ணெய்:

250 கிராம் கடுகு எண்ணெயை 60 கிராம் மருதாணி இலைகளுடன் சேர்த்து கொள்ளவும். கடுகு எண்ணெய் முழுவதுமாக எரியும் வரை அதனை கொதிக்க வைக்கவும். இந்த கலவையை தலை முடியில் தடவினால், கருமையான பளபளக்கும் முடியைப் பெறலாம்.

அமுக்கிரா கிழங்கு:

நரைத்த முடிக்கு சிகிச்சை அளித்திட அமுக்கிரா கிழங்கை உங்கள் தலைச்சருமத்தின் மீது தடவவும். இது முடியில் உள்ள மெலனின் உள்ளடக்கத்தை அதிகரிக்க உதவும்.

பயோடின் பயோடின்:

அதிகமாக உள்ள உணவுகளை உட்கொண்டால் முடி நரைக்கும் செயல்முறை மெதுவாகும். முட்டை மஞ்சள் கரு, தக்காளி, ஈஸ்ட், சோயா பீன்ஸ், வால்நட், கேரட், பசும்பால், ஆட்டுப்பால், வெள்ளரிக்காய், ஓட்ஸ் மற்றும் பாதாம்களில் பயோடின் வளமையாக உள்ளது.

கரிசலாங்கண்ணி:

கரிசலாங்கண்ணியை எண்ணெய் வடிவில் பயன்படுத்தலாம் அல்லது வாயில் போட்டு விழுங்கலாம். இதனை பயன்படுத்தினால் அடர்த்தியான, கருமையான மற்றும் பளபளப்பான தலை முடியை பெறலாம்.

சுரக்காய் ஜூஸ்:

சுரக்காய் ஜூஸை ஆலிவ் எண்ணெய் அல்லது எள் எண்ணெயுடன் சேர்த்து தடவி வந்தால், சீக்கிரமே முடி நரைக்கும் பிரச்சனை நீங்கும்.

கிராம்பு எண்ணெய்:

முடி நரைத்தலை குணப்படுத்த கிராம்பு எண்ணெயும் மிகச்சிறந்த தேர்வாகும்.

வேப்ப எண்ணெய் முடி நரைத்தலை தடுக்க வேப்ப எண்ணெயையும் பயன்படுத்தலாம். அதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பி குணங்கள் பல்வேறு முடி பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும்.

கருப்பு வால்நட் :

கருப்பு வால்நாட்டின் வெளிப்புற தவிட்டை இயற்கை முடி சாயமாகவும் பயன்படுத்தலாம். கருப்பு வால்நாட் மற்றும் தண்ணீரை கொண்டு கஷாயம் தயார் செய்து, அதனை உங்கள் தலையில் தடவி 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். இது உங்கள் நரைத்த முடிக்கு நிறத்தை அளிக்கும்.

ஆர்னிகா எண்ணெய்:

ஆர்னிகா எண்ணெய்யை நரைத்த முடியில் தடவுங்கள். காய்ந்த ஆர்னிகா பூக்களால் தயார் செய்யப்பட்டதே இந்த எண்ணெய். இதிலுள்ள அழற்சி எதிர்ப்பி ஆற்றல்கள், சீக்கிரத்திலேயே முடி நரைப்பதையும், முடி கொட்டுதலையும் குணப்படுத்தும்.

மாங்காய் விதைகள்:

மாங்காய் விதைகளின் பொடியை நெல்லிக்காய் பொடியுடன் கலந்து முடியின் மீது தடவுங்கள். நரைத்த முடியை குணப்படுத்த இதுவும் ஒரு சிறந்த சிகிச்சையாகும்.

கேரட் ஜூஸ்:

தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்தால் தலைமுடி நரைக்கும் பிரச்சனை நீங்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பாட்டி வைத்தியம் :-

1. இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.
2. சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.
3. வயிற்றுவலியா? ஒரு டம்ளர் கொதிநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வலி பறந்துவிடும்.
4. காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் ஜீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.
5. உடல் அசதியா? முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.
6. காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.
7.மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.
8. இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.
9. சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.
10. கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.
11.தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.
12. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக் கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.
13. மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.
14. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தவ மூட்டுவலி குறையும்.
15. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.
16. கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பாத வெடிப்பு போவதற்கான இயற்கை வைத்தியம்


* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.

* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

* தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.

* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

* இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

* குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எளிய இயற்கை மருத்துவம் :-

மாதுளம்பழச் சாறுடன் சமமாக இஞ்சி சாறு கலந்து, இத்துடன் தேன் கலந்து சாப்பிட, நாள்பட்ட வறட்டு இருமல் குணமாகும்.

நன்றாகப் பழுத்த அரை நேந்திரம் பழத்தை தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமையாகும். மூச்சு சீராகும்.

சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு ஆப்பிள், அல்லது வாழைத்தண்டு ஜூஸ் சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும். ஆனால் வாழைத்தண்டு ஜூஸ் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதும் நல்லதல்ல.

மழைக்காலங்களில் கால் விரல்களுக்கு இடையே உண்டாகும் சேற்றுப் புண் குணமாக மஞ்சள் தூளுடன் தேனைக் கலந்து களிம்பு போல பூசலாம்.

இரண்டு டீஸ்பூன் தேனை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.

மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் கீழாநெல்லியை வேரோடு பிடுங்கி நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து 9 நாள் குடித்து வர நோய் குணமாகும்.

தினமும் சப்போட்டா பழ ஜூஸ் பருகி வர முடி நன்றாக வளரும். முடி உதிர்வது நிற்கும்.

பதினைந்து வில்வ இலையை கால் லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்துக் குடித்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

மோரில் இஞ்சியை நறுக்கிப் போட்டு, கொத்தமல்லி இலையைக் கிள்ளிப் போட்டு குடித்தால் நன்றாகப் பசி எடுக்கும்.

நெல்லிக்காய் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகப் பருக்கள் நீங்கி புத்துணர்ச்சி பொங்கும்.

தண்டுக்கீரைச் சாற்றைத் தலையில் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்; முடி உதிர்வதும் குறையும்.

மன அழுத்தத்துக்கு மக்னீசியம் சத்து குறைபாடும் ஒரு காரணம். பசலைக்கீரையில் அதிக மக்னீசிய சத்து உண்டு. வாரத்துக்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்தால் மன அழுத்தம் போயே போச்சு.

மாதுளை ஜூஸை 40 நாள் தொடர்ந்து அருந்தி வந்தால் பெண்களின் மாதாந்திரப் பிரச்னைகள் நீங்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

பேரீச்சம்பழம் நகங்களுக்கு வலு தரும். தினமும் இரண்டு பேரீச்சம்பழமும் ஒரு கப் பாலும் சாப்பிட்டால் அழகிய நகம் வளரும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கிரீன் டீ -Green tea

கிரீன் டீ உடலிலுள்ள கெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை அதிகப்படுத்துகிறது. கான்சர், ஆர்த்தரைடீஸ், இரத்தக் கொதிப்பு போன்றவற்றிற்கும் மருந்தாக இருக்கும் என்று சொல்கிறார்கள். ஸ்ட்ரோக், ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கிறது. உடல் எடை குறைய உதவுகிறது. தினமும் காலையில் டீக்கு பதில் கிரீன் டீ குடிக்கலாம். கிரீன் டீயை ரொம்ப சூடாகவோ, ரொம்ப ஆறியோ குடிக்கக் கூடாது. 56 - 62 சென்டிகிரேட் வெப்பத்தில் குடிப்பது நல்லது. எந்த ஒரு பொருளுக்கும் பிளஸ்ஸும் உண்டு, மைனஸும் உண்டு. கிட்னி ப்ராப்ளம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் குடிக்கவும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான். ஒரு நாளைக்கு 6 கப் டீக்கு மேல் குடிக்கக் கூடாது. ஆல்கஹாலுடன் சேர்த்து குடிக்கக் கூடாது. அல்சர் தொந்திரவு உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்க்கவும். உணவின் இடையிலும் குடிக்கக் கூடாது.
செய்முறை:
கிரீன் டீ சாதாரண டீ போடுவது போல் போடக் கூடாது. ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கும் போது இறக்கி, ஒரு தேக்கரண்டி அளவு கிரீன் டீ போட்டு நன்றாக மூடி வைக்கவும். 2 நிமிடம் கழித்து பார்த்தால், குருணை போல் நாம் போட்ட கிரீன் டீ இலை இலையாக இருக்கும். வடிகட்டி ஓரிரு சொட்டுகள் எலுமிச்சை சாறு கலந்து சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடிக்கலாம். சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது ரொம்ப நல்லது. குடிக்க கஷ்டமாக இருந்தால், தேன் கலந்தோ, சிறிதளவு சர்க்கரை சேர்த்தோ குடிக்கலாம். ரொம்ப துவர்ப்பது போல் இருந்தால், தூளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்



* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து……!
* பித்தத்தைப் போக்கும்……!
* உடலுக்குத் தென்பூட்டும்……!
* இதயத்திற்கு நல்லது……!
* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்……!
* கல்லீரலுக்கும் ஏற்றது……!
* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்……!
* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்…..!
* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்…..!
* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்……!
*இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்……!
* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது……!
* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள
வட்டப்புழுக்கள்வெளியேறும்…..!
* பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது……!
* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது……!
* இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்……!
* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது……!
* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்……!
* ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களைமீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்……!
* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது……!
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்……!
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்……!
அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை….
பின் குறிப்பு : நல்ல விதைகள் அதிகம் உள்ள நாட்டு பப்பாளி பார்த்து வாங்கவும் 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS