ஆண்மையை அதிகரித்து குழந்தை பாக்கியம் பெற

இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள்.
ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் குல்கந்து இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.
பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.
சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும். மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

விக்கல் :

சுத்தமான பொலிதீன் அல்லது பேப்பர் பையை எடுத்து அதற்குள் முகத்தைப் புதைத்துச் சற்று நேரம் தொடர்ந்து அதனுள்ளே சுவாசிப்பது. அதாவது சுவாசிக்கும் காற்றை வெளியே விடாது அதனையே திரும்பத் திரும்ப சற்றுநேரம் சுவாசிக்க விக்கல் நின்றுவிடும்.
அதேபோல விக்கும் போது ஐஸ்வாட்டர் போன்ற குளிர்ந்த நீரைக் குடிப்பதும் விக்கலை நிறுத்த உதவலாம்.
விக்கல் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தால், பிரண்டையைத் தணலில் வாட்டி எடுத்து, அதைப் பிழிந்து சாறு எடுக்கவும். அத்துடன் அரைத் தேக்கரண்டி தேனை விட்டு கலந்து சாப்பிட்டால், விக்கல் நின்று விடும்.
சர்க்கரையை எடுத்து, சிறிது சிறிதாக வாயில் போட்டு சுவைத்தால் விக்கல் நிற்கும்.
* எலுமிச்சை சாற்றுடன், சிறிது சர்க்கரையை கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.
* சிறிது தேனை தனியாக சாப்பிட்டாலும் விக்கல் நிற்கும்.
* கொத்தமல்லி விதையை கஷாயம் போட்டு, சிறிது உட்கொண்டாலும் விக்கல் நிற்கும்.
ஆரஞ்சுப் பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால் விக்கல் நிற்கும்.
மேற் கூறியவாறு விக்கல்கள் குறுகிய நேரப் பிரச்சனையாக இருக்க சில வேளைகளில் மட்டுமே விக்கல்கள் நீண்ட நேரம் தொடர்வதுண்டு.
குறுகிய நேர விக்கல்கள் பொதுவாக Phrenic Nerve போன்ற நரம்பு மற்றும் பிரிமென்தகடு உறுத்தப்படுவதாலேயே ஏற்படுகின்றன.
நமது வயிற்றையும், மார்புப் பகுதியையும், 'டயபரம்' என்ற ஒரு பகுதி பிரிக்கிறது. சிலநேரங்களில், அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயல்படுகின்றன. அப்போது ஏற்படுவதுதான் விக்கல்.
தன்னிச்சையாக என்றால்...?
உங்கள் விரும்பமோ, தேவையோ இல்லாமல் உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி தானாகவே நடக்கும் செயல்பாடுதான் அது. அதாவது, அனிச்சைசெயல் போன்றது.
விக்கல் நமது உடலுக்கு தேவையான - பயனுள்ள ஒன்றுதானா என்றால், 'இல்லை' என்பதுதான் பதில். பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் நின்றுவிடுகின்றன. ஓரிரு நிமிடங்களுக்கு மேல் அது நீடிப்பது மிகக் குறைவே.
அவ்வாறு விக்கல் ஏற்படும்போது, பொதுவாக ஒருவர் நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் விக்கக் கூடும். குறைந்தளவு நேரம் மட்டும் நீடிக்கும் அத்தகைய விக்கல்களுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை.
ஆனால், சிலருக்கு சில நாட்கள்வரை இந்த விக்கல் விட்டுவிட்டு தொடரலாம். இதற்கு காரணம் ஏதாவது நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் உடனடியாக மருத்துவரை அணுகுவதுதான் நல்லது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதில் பூச்சி நுழைந்தால் ... எடுப்பது எப்படி?

காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.
காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும்.
தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும்.
பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது. இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும். அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப் பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும்.
ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு.
ஜாக்கிரதையாகக் கையாளா விட்டல் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே எச்சரிக்கையுடன் மேற்சொன்னவாறு செயல்படவும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மூலிகை குடிநீர்

ஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு சிறிது சூடாக்கி வடிக்கட்டி குடித்து வந்தால் குடலிறைச்சல், வயிற்றுப்பூச்சி, அடிக்கடி வாய்வு பிரிதல், வயிற்றுவலி குணமாகும்.
ஒருலிட்டர் தண்ணீரில் அரைதேக்கரண்டி சீரகம் போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அஜீரணக்கோளாறு,வயிற்று உப்புசம், உடல்சூடு தணியும்.!
ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது சுக்கு,மிளகு, கொத்தமல்லியை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் அதிக சோர்வு, சளித்தொல்லைமுகத்தில் ஏற்படும் கருவளையம்,
தொண்டைக்கட்டு குணமாகும்.!
ஒருலிட்டர் தண்ணீரில் ஒரு கடுக்காயை தட்டிப்போட்டு சூடாக்கி குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.!
ஒருலிட்டர் தண்ணீரில் நாவப்பழக் கொட்டைகளை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அதிக சக்கரை குறையும்.!
ஒருலிட்டர் தண்ணீரில் 10 கிராம் பால்காயத்தை தட்டிப்போட்டு சூடாக்காமல் 2 மணி நேரம் அப்படியே ஊறவைத்து பிறகு குடித்து வந்தால் வாய்வுபிடிப்பு, ஏப்பம், மூட்டுவலி குணப்படும்.!
ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, உப்பு போன்றவற்றை கலந்து அப்படியே குடித்துவந்தால் உடல்சோர்வு, அதிகதாகம் அடங்கும்.!
ஒருலிட்டர் தண்ணீரில் அரைமூடி எலுமிச்சைப்பழம், தேன், சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும் உடலில் உள்ள நாள்ப்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும்.!
*இதுபோன்ற இன்னும் பலவித மூலிகை நீர் சிகிட்சை உண்டு

*
ஒருவர் தொடர்ந்து ஒரேவிதமான நீர்சிகிட்சையை செய்யக்கூடாது.

*
ஒருலிட்டர் என்பது ஒரு அளவீடுதான் நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் தேவைப்படுமோ அவ்வளவு நீரையுமே இந்த முறையில் தயாரித்து குடித்து வந்தாலும் மிகவும் நல்லதுதான்.

*
ஒருமுறை தயாரித்த நீரை அதிகப்பட்சம் 9 மணிநேரம் வரையில் மட்டுமே வைத்துக்கொள்ளலாம்.

*
மூலிகை நீர் தயாரிப்பதற்கு சாதாரண குழாய் குடிநீரையே பயண்படுத்தலாம் அல்லது மண்பானை நீரை பயண்படுத்தலாம்.

சுத்திகரித்த நீரோ/ ஊட்டம் கலந்தநீரே தேவையில்லை.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கழுத்து வலி, மூட்டுவாத நோய்

கழுத்துவலி இளம் வயதினரையும் பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் உணவுப்பழக்கவழக்கம் மற்றும் நவீன வாழ்க்கைமுறை, பைக், கார் போன்றவற்றில் மோசமான ரோட்டில் பயணம் செய்வது, அதிகநேரம் குனிந்து அமர்ந்து கம்ப்யூட்டர் டைப் செய்வது, எடையுள்ள பொருட்களை திடீரென தூக்குவது, உயரமான தலையணை வைத்து அதிக நேரம் படிப்பது, டிவி பார்ப்பது போன்ற செயல்களால் கழுத்து பகுதியில் சவ்வு பலவீனமடைந்து வலி ஏற்படுகிறது.

டிஸ்க் விலகல்: டிஸ்க் விலகல் என்பது கழுத்துப்பகுதியில் மற்றும் இடுப்பில் முதுகு தண்டுவடத்தில் எலும்புகளுக்கு இடையே உள்ள சவ்வு Intervertebral Disc என்றழைக்கப்படுகிறது. இது சில சமயம் பிதுங்கி வெளிவருவதுண்டு. இதனை Disc Prolapse என்கிறோம். டிஸ்க் விலகலை MRI Scan எடுத்து பார்ப்பதால் உறுதி செய்யலாம். கழுத்தில் சி2சி3, சி3சி4, சி4சி5, சி5சி6 போன்ற இடங்களில் டிஸ்க் விலக வாய்ப்புள்ளது.

அப்படி ஏற்பட்டால் கழுத்தில் கடுமையான வலி மற்றும் திரும்ப சிரமம், வலி கழுத்திலிருந்து கைகளுக்கு பரவும். சில சமயம் கைவிரல்கள் மரத்தது போன்ற உணர்வும், படுக்கையில் படுக்கக் கூட சிரமத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் குனிந்து நிமிர்ந்தால் தலை சுற்றல் வரும். தலையின் பின்புறம் காதின் பக்கங்களில் வலி வரும். சில சமயம் முதுகின் பக்கவாட்டில் நெஞ்சுப்பகுதியில் குத்தல் போல வலி ஏற்படும்.

மூட்டுவாத நோய் 
இளம்பெண்கள் சிலருக்கு திடீரென கை விரல்கள்,மணிக்கட்டு, முழங்கை, முழங்கால், கணுக்கால், கால் விரல்களில் வீக்கம், கடுமையான வலி ஏற்படும். அதிகாலை படுக்கையை விட்டு எழும்போது கைவிரல்களை மடக்க முடியாமல் மணிக்கட்டில் கடுமையான வலி உணவு அருந்தும்போது உணவை பிசைய முடியாத அளவு வலி, தோள்பட்டையை மேலே தூக்க முடியாமல் சிரமம், முழுங்கால் மூட்டு வீக்கம் என திடீரென தோன்றும் அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்.

இது மூட்டுவாத நோயின் அறிகுறியாக இருக்கலாம். இதனை கண்டறிய சில ரத்த பரிசோதனைகள் உள்ளன. ரத்தத்தில் Ra Factor,Uric Acid, Asotire, ESR, Creactine Protein போன்ற பரிசோதனைகள் மூலம் இந்த நோயை கண்டறிய முடியும். மூட்டுவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் எடை படிப்படியாக குறைவது, பசியின்மை, மலகட்டு, பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வெப்பத்தன்மை, காய்ச்சல் வருவது போல உடல் முழுவதும் வலி, அசதி, தூக்கமின்மை என உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு, பின் மனரீதியாகவும் மிகவும் பலவீனமாக காணப்படுவார்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சருமஅரிப்பு

கொசுக்களை விரட்டுவதற்கு சருமத்தில் க்ரீம்களை தடவுவதால், ஒருவேளை இன்னும் அதிகமாக கொசுக்கடிக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்படலாம். குறிப்பாக வெப்பம் அதிகமாக இருக்கும் சமயத்தில் தூங்குவதற்கு முயற்சிக்கும்போது, சரும அரிப்பு காரணமாக நாம் சொறிய ஆரம்பிக்கிறோம்.

உடனடியாக அரிப்பிலிருந்து சுகம் கிடைப்பதற்கு, பாதிக்கப்பட்ட பகுதியை சொறிவதால், அந்த இடத்தில் இன்னும் வீக்கம் அதிகமாகிறது. இதனால் மேலும் சருமத்தில் அரிப்பு அதிகமாகி இரத்தம் வரும்வரை சொறியும் சமயத்தில், அழுக்கான விரல் நகங்களால் சருமத்தில் கீறல் ஏற்பட்டு, நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து உருவாகும்.

ஆகவே கொசு கடிக்கும்போது, எரிச்சலை உண்டாக்கும் அரிப்பிலிருந்து விடுதலைபெற இதோ சில ஆரோக்கியமான வழி முறைகள் உள்ளன. இவை அதிகமாக நாட்டு மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகின்ற நாட்டு வைத்தியக் குறிப்புகள் ஆகும். இவற்றில் அறிவியல் ரீதியான ஆதாரங்களும் அடங்கியுள்ளன. மேலும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி பலரும் பயனடைந்துள்ளனர். ஆகவே கொசுக்கடியால் அவஸ்தைப்படுவதற்குப் பதிலாக, இவற்றை பின்பற்றுவதன் மூலம் சுகம் பெறலாம்.

ஆல்கஹால்:
பீர் அல்லது மற்ற மதுவை அருந்துவதால், சருமத்தில் ஏற்படும் அரிப்பை மறந்து விடலாம். ஆனால் இந்த வகையான ஆல்கஹாலைப் பற்றி இங்கு பேசவில்லை. முதலுதவி பெட்டியிலிருந்து கொஞ்சம் ஆல்கஹாலை எடுத்து, கொசுக்கடியால் பாதிக்கப்பட்ட பகுதியில் தேய்த்து சுத்தம் செய்வதால், அரிப்புத் தொல்லையிலிருந்து நிவாரணம் பெற முடியும். ஒருவேளை ஆல்கஹால் இல்லாவிட்டால், சோப்புத் தண்ணீரால் கழுவுவதன் மூலம் பயன் பெற முடியும்.

எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான ஆன்டி இச், ஆன்டிபயோட்டிக் மற்றும் ஆன்டிமைக்ரோபயல் ஆகும். ஆகவே எலுமிச்சையைப் பிழிந்து, அதன் சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுவதன் மூலம், அரிப்பைக் குறைத்து தொற்று ஏற்படாமல் தடுக்கலாம். அதிலும் இதை வீட்டின் உள்ளே பயன்படுத்துங்கள். ஏனென்றால் இதனை தேய்த்துக் கொண்டு, வெயிலில் சென்றால், சூரியக்கதிர்களின் தாக்கத்தால், சருமத்தில் புண்கள் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு.

ஐஸ் கட்டி:
சரும அரிப்பு காரணமாக ஏற்படக்கூடிய வீக்கம் மற்றும் சரும மதப்பு தன்மையைக் குறைப்பதற்கு ஐஸ்கட்டி பெரிதும் உதவும். அதிலும் கொசுக்கடி அதிகமாக இருக்கும் சமயத்தில், மிகவும் குளிர்ச்சியான தண்ணீரில் குளியுங்கள் அல்லது குளிர்ச்சி நிறைந்த தண்ணீருள்ள குளத்தில் மூழ்கிக் குளியுங்கள்.

பேக்கிங் சோடா மற்றும் விட்ச் ஹாசில்:
செலவில்லாத கொசுக்கடித் தீர்வுக்கு, இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து பேஸ்ட் செய்து, கொசுக்கடி ஏற்பட்ட பகுதியில் தடவி, 15 நிமிடங்கள் உலர விடவும். இதனால் பேக்கிங் சோடாவில் உள்ள ஒரு காரத்தன்மையான (அல்கலைன்) பதார்த்தம் இருப்பதால், இது சருமத்தின் பிஎச் அளவை நடுநிலைப்படுத்த உதவி, வீக்கம் குறைய வாய்ப்புண்டு. விட்ச் ஹாசில் கிடைக்காவிட்டால், அதற்குப் பதிலாக தண்ணீர் பயன்படுத்தலாம்.

டீட்ரீ ஆயில்:
இது வீக்கத்தைக் குறைக்கும் ஒரு இயற்கை மருந்து என்பதால், பரு மற்றும் சருமத்தில் ஏற்படும் நச்சுப் படலம் ஆகியவற்றுக்கு சிறந்தது. அதிலும் சொறிவதால் ஏற்படக்கூடிய வீக்கத்தைக் குறைப்பதற்கும், நோய்த் தொற்றுகளைத் தடுப்பதற்கும் இந்த எண்ணெய் உதவும்.

டூத் பேஸ்ட்:
கொசுக்கடியால் சருமத்தில் சிறு சிறு வெள்ளைக் கொப்புளங்கள் ஏற்பட்டால், அதன் மீது கொஞ்சம் டூத் பேஸ்ட் தடவுங்கள். இதனால் அரிப்பிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

உப்பு:
கொசுக்கடியிலிருந்து சீக்கிரம் நிவாரணம் பெறுவதற்கு, உப்புடன் சிறிது தண்ணீர் சேர்த்து, பாதிக்கப்பட்ட இடத்தில் லேசாக தடவுங்கள். அரிப்பிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும். ஒருவேளை கடற்கரைக்கு அருகில் இருந்தால், உப்பு நீரில் நீச்சலடியுங்கள், சிறந்த பலனைப் பெறுவீர்கள்.

கற்றாழை:
சொறியும் போது சருமத்தில் கீறல்கள் ஏற்பட்டு வலி உண்டாகும். ஆனால் கற்றாழையில் உள்ள குளிர்விக்கும் தன்மை, இந்த வேதனையிலிருந்து சுகம் பெற உதவும்.

ஆப்பிள் சீடர் வினிகர்:
குளியல் தொட்டி நீரில், சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குளிப்பதால், வெயிலால் ஏற்படும் எரிச்சல் குறைவது மட்டுமன்றி, இதில் இருக்கும் ஒருவகை ஆசிட் சரும அரிப்பைத் தணிப்பதற்கும் வழி செய்யும். ஒருவேளை தண்ணீரில் கலந்து குளிக்க முடியாவிட்டால், ஒரு காட்டன் உருண்டையில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் நேரடியாக தடவுவதால் பயன் பெறுவீர்கள்.

வாழைப்பழத் தோல்:
வாழைப்பழத் தோலில் உள்ள இனிப்புப் பகுதி கொசுக்கடியிலிருந்து நிவாரணம் பெற உதவும். எனவே வாழைப்பழத் தோலின் உள் பகுதியை பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்ப்பதால் சுகம் பெறுவீர்கள்.

எச்சில்:
விரலில் சிறிது எச்சிலைத் தொட்டு, அதை கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் லேசாக தடவி உலரவிட்டாலும் சுகம் கிடைக்கும்.

உள்ளங்கையால் லேசாக அடித்தல்:
இது கொஞ்சம் வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றலாம். ஆனால், கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் லேசாக அடிக்கும் போது, மூளை நரம்புகளுக்கு வலி எது? அரிப்பு எது? என்ற குழப்பம் ஏற்படுவதால், அரிப்பிலிருத்து சுகம் பெற முடியும்.

அரிப்பு நோய் என்பது சராசரி வாழ் மனிதனை பாடாய் படுத்திவிடும். அதற்கு தகுந்த மருத்துவம் பார்க்காமல் இருந்து விட்டால் பக்க விளைவுகள் நம்மையே அழிக்கும் நிலைமைக்கும் கொண்டுபோய் விடும். அத்துடன் அரிப்பு நோயானது தன்னம்பிக்கையையும் குறைத்துவிடும்.

மருந்தில்லா மருத்துவம் என்பது போல் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களை (மேற் கூறப்பட்டவை) தகுந்த அளவு முறையாக பயன்படுத்தி வந்தாலே அரிப்பு நோயில் இருந்து முழுமையாக விடுபடலாம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சைனஸ் பிரச்னை வராமல் எப்படித் தடுப்பது?

1. சளி மற்றும் ஒவ்வாமை (அலர்ஜி)யால் ஏற்படும் மூக்கடைப்பு தொடர்ந்து இருக்குமானால் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்.
2. மதுப் பழக்கம், புகைப் பழக்கத்தைக் கைவிடவும். இது மூக்கில் உள்ள மெல்லிய சவ்வுகளைப் பாதித்து, வீங்கச் செய்யும்.
3. ஒவ்வாமை இருக்குமானால், எதனால் ஏற்படுகிறது என்று கவனிக்கவும்.
யோகா எவ்வாறு உதவுகிறது:
1) ‘அம்’ மந்திர உட்சாடனை சைனஸ் பிரச்சனைகள் தீர உதவுவதுடன், வராமலும் தடுக்கிறது. உட்சாடனையின்போது ஏற்படும் அதிர்வுகள் சைனஸ்களில் கிருமிகள் சேராவண்ணம் தடுத்து, சைனஸ்களை ஆரோக்கியமாக்குகின்றன. இதனால் மூக்குக்கும் சைனஸ்களுக்கும் எவ்விதத் தடையும் இல்லாமல் காற்று சென்று வருகிறது. காற்று தடையில்லாமல் செல்வதால் சுரக்கப்படும் திரவங்கள் சைனஸ்களில் இருந்து எளிதாக அகற்றப்படுகின்றன.
2) ஆசனம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள்: இவை அனைத்துமே உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், தளர்வு நிலையையும் அளிக்கின்றன. அது மட்டுமில்லாமல் உடலின் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிப்பதாக ஆரம்ப நிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றை உடற்பயிற்சிபோல் செய்யாமல், தகுந்த விழிப்பு உணர்வுடன் மூச்சு, உடல் மற்றும் மனம் ஒருங்கிணைந்தாற்போல் இருக்குமாறு செய்ய வேண்டும். இவை மேற்கூறியது போல் சைனஸ்களின் காற்றோட்டத்தைப் பாதுகாக்கின்றன.
3) யோகா, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்வதால் சைனஸ்களால் ஏற்படும் தலைபாரம், முகத்தில், கண்களில் வலி போன்றவற்றுக்கு உதவுகின்றன.
4) ஹடயோகாவில் உள்ள ஹடகிரியைகளில் ஒன்றாகக் கருதப்படும் நேத்திக் கிரியைகள் சைனஸ் வியாதிகள் வராமல் தடுப்பதற்கும், அதில் இருந்து நிவாரணம் பெறவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.
நேத்தி என்பது மூக்கு, தொண்டைப் பகுதியை, திரவம் அல்லது நூல்கொண்டு சுத்தம் செய்வது. இது சளியை அகற்றுவதுடன் சவ்வுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, மூக்குக்கும் சைனஸ்களுக்கும் உள்ள தடையை அகற்றுகிறது. நேத்திக் கிரியைகளை சரியான முறையில் பயின்று பின்பற்றவும்!
மிளகு, மஞ்சள், தேன்
சளிப் பிரச்சனையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள 10 முதல் 12 முழு மிளகு எடுத்துக்கொள்ள வேண்டும். அதை உடைத்துக்கொள்ள வேண்டும், பவுடராக்கக் கூடாது. அதை 2 ஸ்பூன் தேனில் ஓர் இரவு அல்லது எட்டரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். காலையில் அதை எடுத்து மென்று தின்றால் சளி கரைந்துவிடும்.
அல்லது மஞ்சளை இரண்டு ஸ்பூன் தேனில் கலந்து சாப்பிடலாம். அல்லது மிளகு, மஞ்சள் மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து சாப்பிடலாம். அனைத்துப் பால் பொருட்களையும் விட்டாலே சளி மிகவும் குறைந்துவிடும்.
எந்தவித அலர்ஜியாக இருந்தாலும், தோல் அலர்ஜி என்று மட்டுமல்ல, வேப்பிலையை உருண்டை செய்து தேனில் நனைத்து முழுங்கிவர ஒவ்வாமை சரியாகும்.
தினமும் தேன் சாப்பிடுவது சளி தொடர்பான பிரச்சனைகளுக்கு மிகவும் உதவி செய்யும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS