நல்ல குடும்பத்திற்கு வேண்டிய 10 லட்சணங்கள்

1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய
இடம் நம் குடும்பமே...
2. கணவன் - மனைவி உறவுக்கு இணையாக உலகில்
வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.
3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள்
அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும்
உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.
4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப
அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய
வேண்டாம். அது குடும்ப அமைதியை குலைக்கும்.
5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும்
பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது,
பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன்
பெற்றிருத்தல் வேண்டும்.
சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம், சிலர் குறைவாக
சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது,
நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில்
சமமான பொறுப்பு வேண்டும்.
6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத்
தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும்,
செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக
இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம்தரும். மனதில்
ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால்
அங்கே தெய்வீக உறவு இருக்காது.
7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத்
தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகிய
மூன்றையும் கடைப்பிடித்து வர வேண்டும்.
8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல்
பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிவகுக்கும்.
9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும்
குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர்
அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.
10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப்
பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப
அமைதி இன்றியமையாததாகும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மூலிகை வைத்தியம்

மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்கு இருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே!
1. அருகம்புல்: மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமாசர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்
2. ஓரிதழ் தாமரை: வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்
3. ஆடா தோடை: இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு
4. தூதுவளை: சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு
5. நில ஆவாரை: மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்
6. நில வேம்பு: சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்
7. முடக்கத்தான்: மூட்டுப் பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்
8. வல்லாரை: ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை மலச்சிக்கல்
9. அஸ்வகந்தி: கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்
10. வில்வம்: பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்
11. நெல்லிக்காய்: பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்
12. நாவல் கொட்டை: சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்
13. சுக்கு: வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்
14. மிளகு: கபம், மூலவாயு, பித்தம், வாதம், அஜீரணம்
15. திப்பிலி: சளி, காசம், பீனிசம், வாயு
16. அதிமதுரம்: இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்
17. சித்தரத்தை: இருமல், சளி, பீனிசம், கோழைக்கட்டு
18. ஜாதிக்காய்: விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்
19. வெந்தயம்: பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்
20. வசம்பு: வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்
21. ஆவாரம்பூ: அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்
22. செம்பரத்தம்பூ: தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்
23. ரோஜாபூ: இருதயம், ஈரல், நுரையீரல் கிட்னி நோய்கள் நீங்கும்
24. முல்தானி மட்டி: முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)
25. திருபலாசூரணம்: வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்
26. திரி கடுகு சூரணம்: பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்
27. வசம்பு: வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்
28. கரிசலாங்கண்ணி: மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்
29. கண்டங்கத்திரி: சளி, இருமல், ஆஸ்துமா, ஈசினோபீலியா, பீனிசம்
30. கருந்துளசி: இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்
31. கறிவேப்பிலை: பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்
32. காசினி கீரை: ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்
33. கீழாவெல்லி: மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புதினா (MINT)

புதினா (Mint) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் புதினாக் கீரையை மக்கள் விரும்பி வளர்க்கின்றனர்.
புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது.
புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும்.
பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.
ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.
புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். இளைப்பு நோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினாக் கீரை குணப்படுத்துகிறது.
புதினாக் கீரையை வீட்டுத் தோட்டத்திலும், தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம். புதினாக் கீரை வாங்கும்போது இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை மண்ணில் ஊன்றி வைத்தால் அவை தளிர்த்துப் புதிய இலைகளைக் கொடுக்கும்.
வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது.
புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும். புதினாக்கீரையைக் கொண்டு ஓர் அருமையான பற்பொடி தயார் செய்யலாம். இந்தப் பற்பொடியை உபயோகித்து வந்தால் பல்லீரல் வேக்காடு, பல்லீரலில் இரத்தம் வருதல், பல் சொத்தை, பல் அசைவு இவைகளைக் குணப்படுத்தும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க இந்தப் பற்பொடி நன்கு பயன்படும்.
இந்தப் பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், அவர் ஆயுள்வரை பல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியினாலும் பீடிக்கப்பட மாட்டார்.
எவ்வளவு பற்பொடி தேவையோ அந்த அளவிற்கு புதினாக்கீரையைக் கொண்டு வந்து இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் பார்த்து, அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.
சருகுபோல காய்ந்தபின் அதை எடுத்து, உத்தேசமாக அந்த இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும்.
தூளான பின் எடுத்து, மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து எடுத்து, வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
இதைத் தினசரி உபயோகித்து வந்தால் பற்கள் முத்தைப்போல பிரகாசிக்கும். பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கொய்யா இலையின் பயன்கள்

கொய்யாப்பழம் நமது நாட்டின் பாரம்பரிய கனி வகைகளில் குறிப்பிடத்தக்கது. நமது நாட்டின் உணவு பழக்க வழக்கங்கள் என்பது ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற அடிப்படையில் ஆனதுதான். அதை விட்டு விலகி நாம் மேல்நாட்டு உணவு வகைகளின் மீதும், ஆயத்த உணவுகளின் மீதும் கொண்ட நாட்டம்தான் இன்று உலகளவில் சர்க்கரை நோயாளிகளை அதிகளவில் கொண்ட தேசமாக நாம் விளங்குகிறோம்.
அந்த வகையில் கனி வகைகளில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் கொய்யாப்பழம், பழம் மட்டும் இன்றி அதன் இலைகளும் மருத்துவ குணம் வாய்ந்தவையே. இந்த மரத்தின் இளம் இலைகள் வெப்பமண்டல நாடுகளில் பராம்பரிய மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகிறது. இந்த இலையின் மருத்துவ பலன்களான ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்களான வைட்டமின் சி, மற்றும் க்யூயர்சிடின், ஃபிளாவனாய்டுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.
கொய்யா இலைகளை நன்கு கழுவி சுடுதண்ணீரில் கொதிக்கவிட்டு தேநீர் போன்று அருந்தினால் கொழுப்பைக் குறைக்கும், நீரிழிவை தடுக்கும், மேலும் வயிற்றுப்போக்கினால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்கும்.
பாக்டீரியா காரணமாக வயிற்றுபோக்கு ஏற்பட்டால் கொய்யா இலையில் தேநீர் செய்து சாப்பிடவேண்டும். இந்த தேநீர் பருகினால் எந்த காரணத்தினால் வயிற்றுபோக்கு ஏற்பட்டிருந்தாலும் குணப்படுத்திவிடும். கொய்யா இலையில் செய்யப்பட்ட தேநீரை பருகுவதால் குறைவான வயிற்றுவலி, குறைவான தண்ணீரால் வெளியேற்றப்படும் மலம், அதிலிருந்து எளிதில் தீர்வு காண முடியும். கொய்யா இலை வயிற்று போக்கிற்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்று ரிவிஸ்டா இண்ஸ்ட்டியூட்டோ நிறுவனம் 2008 ஆய்வு செய்தனர். அதில் கொய்யா இலைச்சாறில் வயிற்றுப்போக்குக்கு பொதுவான காரணமாக இருக்கக்கூடிய ஏரொஸ் பாக்டீரியா வளர்ச்சி தடுக்கப்படுவதாக கண்டறியப்பட்டது.
அதேபோல், இளம் கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரை பருகுவதால் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடின் அளவுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்ற நிறுவனம் 2010ல் மேற்கொண்ட ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு கொய்யா இலையில் தயாரிக்கப்பட்ட தேநீரை பருக கொடுத்தனர். இதில் அதை பருகியவர்களுக்கு குறைந்த மொத்த கொழுப்பு, குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்புப்புரத நிலைகள் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருந்தது தெரியவந்தது. அடுத்த எட்டு வாரங்களுக்கு பிறகு கொழுப்பு அளவுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது எனவும் தெரிவித்துள்ளது.
கொய்யா இலையின் குடும்பம் ஆரோக்கியம் தரும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் நீரிழிவை தடுக்க கொய்யா இலையை மருந்தாக பயன்படுத்தலாம். இரண்டாவது வகை நீரிழிவு நோயாளிகள் 12 வாரங்கள் தொடர்ந்து இந்த தேநீரை பருகினால் சர்க்கரையின் அளவில் மாறுதல்கள் ஏற்படும். கொய்யா இலையை இளம் தளிர் இலைகளாக பார்த்து ஒரு கப் இலை எடுத்துக்கொள்ளுங்கள். இலைகளை நன்கு கழுவி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உங்களுக்கு என்ன நோய்?

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
கண் இமைகளில் வலி.. என்ன வியாதி?
அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி?
அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.
டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..
கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி?
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.
டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.
தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி?
இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.
டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.
முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி?
உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.
தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி?
கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.
டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.
பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி?
சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.
பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி?
நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி?
தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.
டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.
சிவந்த உள்ளங்கை என்ன வியாதி?
கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.
டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.
வெளுத்த நகங்கள் என்ன வியாதி?
இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.
டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.
விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி?
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.
டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.
நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி?
சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.
டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.
வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி?
பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.
சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி?
வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.
டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.
வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி?
உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.
டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வல்லாரை கீரை

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது.

காசம், மேகம், போன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் வல்லாரை கீரை நிகரற்றது. இந்த கீரையை பால் கலந்து அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட விழுதைநெல்லிக்காய் அளவு திரட்டி உண்ண வேண்டும். இப்படி இந்த விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து இளமை தோற்றம் திரும்பும்.

எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட மாத்திரை குணமாக்கும். உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புண்கள் ஆகியவற்றை வல்லாரை சரிசெய்து விடும் ஆற்றல் வாய்ந்தது. வல்லாரை இலையுடன் மிளகு, துளசி இலைஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து
மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்து கொண்டு சுடுநீரில் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.

யானைக்கால் நோய் உள்ளவர்கள் இந்த இலையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் எளிதில் குணமாகும். வல்லாரை இலையை அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் விரை வீக்கம், வாயு வீக்கம், தசை சிதைவு, போன்றவை குணமாகிவிடும். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து '', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரை யென்றும் அழைக்கின்றனர். இரத்த சுத்திகரிப்பு வேலையை சிறப்பாக செய்கிறது. தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது. இக்கீரையை கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தேமலுக்கு ஒரு நிரந்தர தீர்வு!

தேமலை தமிழ் வைத்தியத்தில் “மங்கு” என அழைக்கின்றனர். இதனை போக்கிட ஒரு எளிய மருத்துவ குறிப்பு தேரையரின் பாடலில் காணக் கிடைக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு...

கொள்ளவே யரிதாரப் பளிங்கு மாகுங் 
குறையாமல் பலமரைதான் நிறையோர் கட்டி 
உள்ளவே நற்கோவை ரசத்தை வாங்கி 
உறவாக யிழைத்து வழித்தெடுத்துக் கொண்டு 
மெள்ளவே ஐந்திருநாள் யிருபோதுந் தான் 
விளங்கவே அடுத்தடுத்துப் பூசும்போது 
துள்ளவே திருமுகத்தில் படரும் வங்கும்
தொந்தித்து நில்லரிது துலைந்து போமே.

இந்தப் பாடல் தேரையரின் மருத்துவ காவியம் என்கிற நூலில் இருந்து எடுக்கப் பட்டது. இதன் படி சருமத்தில் உண்டாகும் தேமல், தழும்புகள், அடையாளங்கள் நீங்கிட இந்த குறிப்பைத் தருகிறார்.

அரிதாரம் என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஒரு பொருள். பளிங்கு போல தோற்றமளிக்கும் இது கட்டியாகவும் தூளாகவும் கிடைக்கும். இதில் கட்டியான அரிதாரம் ஒரு அரைப் பலம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அத்துடன் கோவைக்காயின் சாறு விட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதனை ஒரு நாளைக்கு இரண்டு தடவை (காலை, மாலை) என பத்து நாட்களுக்கு பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்து பூசி வர அவை அனைத்தும் மறைந்து சருமம் அழகாயிருக்கும் என்கிறார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS