சில உடல் நலக் குறிப்புகள்


4. காலை உணவிற்கு முன் தினமும், ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். இப்படி சில மாதங்களுக்கு தொடர்ந்து இதைச்செய்தாலும் உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த, 10-, 12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். தொடர்ந்து இதனை, சில மாதங்களுக்கு கடைபிடித்து வந்தால், உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைத்துக்கொண்டு, அதற்கு பதிலாக, கோதுமை எடுத்துக் கொள்ளலாம் இதுவும் உடல் எடை குறைக்க உதவும்.
7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல், 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து, அதனை சில நாட்களுக்கு குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். உடனே வ‌லி குறையு‌ம்.
9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க, குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.
10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு, நீருடன் தேனைக் கலந்து கொடுத்தா‌ல், ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.
11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு ஆகியவற்றுடன், கொஞ்சம் தேன் கலந்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், உட‌ல் வ‌லிமை பெரும்.
12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த, கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது. இப்படியான சின்னச்சின்ன மருத்துவ பொருள்களில், நம் உடலை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
வர்மக்கலை's photo.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காயகல்பம்

காயகல்பம் என்பது மருந்தல்ல, ஒரு பயிற்சி...
காயகல்பம் பயின்றால் நிச்சயம் உங்கள் முக ஈர்ப்பு சக்தி அதிகரிக்கும் . காயகல்பம் ஆயுள் காக்கும் ஒரு அற்புதப் பயிற்சி. நம்மை என்றும் இளமையுடன் வைத்து இருப்பதுடன், நாம் விரும்பும் வரை நம் ஆயுளை நீட்டிக்கவும் உதவுகிறது. சித்தர்கள் சொல்வார்களே மரணமில்லா பெருவாழ்வு,காயகல்ப பயிற்சியினை கர்மமே கண்ணாக செய்தால் சாத்தியம் .
இன்று கல்யாணம் ஆனவர்களுக்கும் சரி...கல்யாணம் ஆகாதவர்களுக்கும் சரி பொதுவான சவால் பாலியல் உணர்ச்சிகள்.
கல்யாணம் ஆகாதவர்களுக்கு தூண்டுதல் சில தவறான செயல்களுக்கு அடிக்கோள்கிறது. கல்யாணம் ஆனவர்களுக்கும் பல நேரம் முழுமையான ஈடுபாடின்மை, ( Pre Ejaculation & Post Ejaculation ) போன்று வேறு ஏதேதோ குறைபாடுகளோ வருகிறது.
பாலுணர்வு இயற்கையான தூண்டுதல். அதனை இயற்கையாகவே நெறிப்படுத்த முடியும்.அத்தகைய யோகப் பயிற்சி தான் காயகல்பம் யோகம்.
காயகல்பம் என்பது எல்லோரும் மருந்தென நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அது மருந்து அல்ல,ஒரு உடற்பயிற்சி. நம் தமிழ் நாட்டில் வாழ்ந்து,தற்போது சூக்குமாக உலவிக் கொண்டிருக்கும் சித்தர்களின் அற்புத பயிற்சி.
இதன் அடிப்படை என்ன ?
நம் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. உடலைப் பகுத்துக் கொண்டே வந்தால் செல்கள் தான் அதன் நுண்ணிய பகுதி. செல்கள் அணுக்களின் தொகுப்பு. இந்த அணுக்களில் ஒரு சுழற்சி நடைபெற்று கொண்டே இருக்கிறது. அந்த சுழற்சியின் மூலமே உடல் எங்கும் ஜீவகாந்தம் என்ற சக்தி பரவுகிறது.
வயதாக வயதாக இந்த சுழற்சியின் வேகம் குறையும்.அப்போது ஜீவகாந்த உற்பத்தி குறையும். இதனால் நரம்பு மற்றும் தோல்களில் ஒரு தளர்ச்சி ஏற்படுகிறது. இதுவே வயோதிகத்திற்கு காரணமாக அமைகிறது. இந்த தளர்ச்சியை சமன் படுத்தவேண்டும்.
எப்படி ?
மிருதங்கம் என்ற ஒரு இசைக்கருவி இருக்கிறது. அதன் மேல் நார்களால் கட்டப்பட்டு இருக்கும்.வாசிக்க வாசிக்க நார்களில் தளர்ச்சி ஏற்படும்.அப்போது என்ன செய்வார்கள், அந்த நார்களை இறுக்குவார்கள். அவ்வாறு இறுக்கிய பின்னர் மீண்டும் மிருதங்கத்தில் ஒலி பிரமாதமாக வரும்.
மிருதங்கம் போன்று நம் நாடி நரம்புகளின் தளர்ச்சியை முறுக்கேற்றவேண்டும்.அது இயற்கையாக இருக்கவேண்டும். என்ன செய்யலாம் என்று சித்தர்கள் ஆராய்ந்தனர். குதிரை போன்ற அதிவேக மிருகங்களையும்,சீறும் பாம்பின் குணாதிசயங்களையும் கூர்ந்து கவனித்த போது,அவர்களுக்கு ஒரு சூட்சுமம் புலப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த காயகல்பம் என்ற பயிற்சியை வடிவமைத்தனர்.
இப்பயிற்சி இளம் வயதிலேயே ஆன்மிக வாழ்வில் ஈடுபடுபவர்கள் மத்தியில் மட்டும் கட்டாயமாக்கப்பட்டு பயிலப்பட்டு வந்தது.நாளடைவில் அவர்களும் பின்பற்றாமல் மற்றவர்களுக்கும் சொல்லித் தராமல் கிடப்பில் போட்டனர்.
பழங்கால ஓலைச்சுவடிகளை ஆராய்ந்த யோகிராஜ் வேதாத்ரி மகரிஷி இதன் நுட்பங்களை ஆராய்ந்து இப்பயிற்சியை உயிர்பித்து எளிமைபடுத்தினார். அவரது ஐம்பதாவது வயதில் கண்டறிந்த அவர் சுமார் இருபது ஆண்டுகள் இதனை தனியே பழகி,இதில் உள்ள உண்மை நிலை உணர்ந்து பின்னர் மக்களுக்கு கற்பித்தார்.
ஏழ்மையான நெசவாளர் குடும்பத்தில் பிறந்த வேதாத்ரிக்கு ஐம்பது வயதிலேயே வயோதிகம் தாண்டவமாடத் தொடங்கிவிட்டது. கண்கள் ஒட்டி கிடுகிடுவேன இருந்தார். இப்பயிற்சியை பழக தொடங்கிய நாள்முதல் வேதாத்ரி மகரிஷியின் கண்களிலும், தோல்களிலும்ஒரு பிரகாசம் வரத்தொடங்கியது.அவருக்குள் ஒரு உற்சாகம் எப்பொழுதும் இயங்கி கொண்டே இருந்தது. வயோதிகம் என்பது ஒரு பொருட்டல்ல என்பது போல துள்ளித் திரிந்தார்.எழுபது முதல் எண்பது வயதிற்குள் 27 முறை அமெரிக்க பறந்திருக்கிறார்.தொண்ணூற்றி ஆறு வயதிலும் முகத்தில் ஒரு சிறு சுருக்கம் இல்லை. மனவளக்கலையை முழுமையாக்கி பல்கலைக் கழகப் பாடமாக்கும் வரை பூமியில் வாழ்ந்தார்.
சமாதி அடையும் முன் குறிப்பால் கூறி, சொன்னது சொன்னபடி இப்பூவுலக வாழ்வை துறந்தார். அதாவது அவர் வந்த கடமையை அவர் முடிக்கும்வரை அவர் மரணத்தை நெருங்க விடவில்லை. காயகல்பம் மரணத்தை தள்ளிப் போட செய்யும் ஒரு ஆற்றல் மிகு யோகம்.
காயகல்பம் அறிவியல் பூர்வமான ஒரு ஆன்மிக யோகப் பயிற்சி.
நாம் உண்ணும் உணவு ஏழு தாதுக்களாக அதாவது இரசம், இரத்தம்,தசை,கொழுப்பு,எலும்பு,மஜ்ஜை,மற்றும் சுக்கிலம் என்ற வித்துவாக மாறுகிறது என்பதை நாம் அறிவோம்.அவ்வாறு மாறும் ஏழாவது தாது சுக்கிலம்.இதனை வீணாக்காமல் உயிர்சக்தியாக மாற்றி மீண்டும் மூளைக்கே திருப்பும் போது வயோதீகம் தள்ளிப் போகிறது, இளமை மீட்கப்படுகிறது என்பதை உணர்ந்தனர்.இதன் அடிப்படையில் காயகல்ப பயிற்சியை வடிவமைத்தனர்.
காயக்கல்பத்தில் இரண்டு விதமான பயிற்சிகள் உள்ளன ஒன்று அஸ்வினி முத்திரை என்ற நரம்பூக்கப் பயிற்சி,இரண்டு ஓஜஸ் என்ற மூச்சுப் பயிற்சி. இதனை காலையில் மூன்று நிலைகளில்.மாலையில் இரண்டு நிலைகளில் செய்ய வேண்டும். வெறும் ஆறு நிமிடம் தினம் ஒதுக்கினால் போது உங்கள் ஆயுள் நீட்டிப்பு சாத்தியம்.
சரி கல்யாணம் ஆனவர்களுக்கு என்ன பலன் பார்ப்போம்.
இல்லறவாழ்வில் ஈடுபடும் போது இந்த சுக்கிலம் கழிக்கப்படுவது இயல்பு.எனினும் குழந்தைப் பிறக்கவேண்டுமானால் அதனை உயிர் அணுக்களோடு வெளியாற்றலாம், குழந்தைவேண்டாம் என்று முடிவு செய்த சூழலில் இயற்கையாகவே அதன் உயிர்சக்தியை ஆற்றல் பதங்களாக மாற்றி உடல் முழுவது பரவசெய்து, பிறகு சுக்கிலத்தை வெளியேற்றி இயற்கையாகவே கருத்தரிப்பை தவிர்க்கும் நுட்பமும் காயகல்பத்தில் முடியும். இதனால இல்லறவாழ்வில் எந்த வித குறைபாடும் ஏற்படாது.
இங்கு ஒரு நுட்பம் இருக்கிறது. அதனை பயன்படுத்தும் போது இயற்கையாகவே பிள்ளைப் பேற்றை கவலையின்றி தள்ளிப் போடலாம். சில பெண்களுக்கு காப்பர் – டி உடலுக்கு ஒத்துக் கொள்வதில்லை. கருத்தடை மாத்திரைகளால் பக்கவிளைவுகள் வரும் வாய்ப்புகளும் தவிர்க்கப் படுகின்றது.
இல்லற வாழ்வில் ஈடுபடும் போது ஏற்படும் வெளியேறும் குறைபாடுகள், அதாவது Pre Mature edaculation போன்ற பிரச்சனைகள் படிபடியாக நீங்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் சரியாகும். பாலிஸிஸ் ஓவரியன் சிண்ரோம் ( Polysis Ovarian Syndrome ) போன்ற பிரச்சனைகள் தீர்வதாக ஆராய்ச்சிகள் மூலம் நிருபணமாகியுள்ளது.
கருமுட்டை கோளாறுகள் நீங்கி, குழந்தை பாக்கியம் எளிதில் கிடைக்க உதவுகிறது.
எல்லாருக்கும் அறிவார்ந்த பிள்ளைகள் பிறக்கவேண்டும் என்ற ஆவல் இருக்கும். நமது பழக்க வழக்கங்கள் மூன்றுவிதமான பதிவுகளால் தீர்மானிக்கப்படுகிறது. ஒன்று சஞ்சிதம் – நம் முன்னோர்களிடம் இருந்து வரும் பதிவுகள். இரண்டு ஆகாமியம் – நாம் பிறப்பெடுத்தது முதல் இன்றுவரை நாம் பழக்க வழக்கத்தால் வந்த பதிவுகள், மூன்று – பிராப்தம் – ஆகாமியமும் , சஞ்சிதமும் கலந்து தரும் விளைவுகள்.
வித்து அணு நீர்ம நிலையில் இருக்கும்போது, தவறான வினைப்பதிவுகள் அதுனூடே இருக்கும். அது கெட்டிப்படும் போது, அத்தகைய தீயப்பதிவுகள் அகன்று வலிமையான வித்துக்கள் மட்டுமே மிஞ்சும். காயக்கல்பம் பயிலும்போது வித்து வலிமைபெற்று அழகான, அறிவான, துறுதுறுப்பான குழந்தை பிறக்கின்றன.
அடுத்ததாக இயற்கையான குழந்தைப் பேறு. எப்படி ஹிப்னோபர்த்திங்கில் இயற்கையான பிள்ளைபேறு சாத்தியமோ அதே போல, காயக்கல்பம் பயின்ற பெண்களுக்கும் சிசேரியன் தவிர்க்கப்படுகிறது.
சரி கல்யாணம் ஆகாதவர்களுக்கும் என்ன நன்மை.?
எங்களுக்கு தானே , நிறையப் பிரச்சனை என்கிறீர்களா ?
உங்களுக்கு ஒரே பிரச்சனைதான். அதுதான் பாலியல் தூண்டுதல்.
திருமணத்தை ஆகும்வரை உங்கள் உயிர்சக்தியை சேமிக்க காயகல்பம் ஒரு வரப்பிரசாதம். சுக்கிலம் நிறையும் போது தான்,அது உடலில் தூண்டுதலை அதிகரிக்கச் செய்து, சுய இன்பம் போன்ற செயல்களுக்கு வழிகோளுகிறது.
காயகல்பம் செய்யும் போது இப்படி நிரம்பும் உயிர் சக்தி ஒஜஸ் என்ற பதங்களாக மாற்றப்பட்டு உடல் சக்தியாக மாற்றபடுகிறது. இதனால் இத்தகைய தூண்டுதல்கள் கட்டுப் பாட்டில் இருக்கும். இளைய வயதில் திசை மாறுதல் நிகழாது. அறிவு மட்டுமே முன்னின்று முடிவெடுக்கும். உடலுக்கு இடம் தராது.
உள்ளுணர்வு தவறான நடவடிக்கைக்கு தூண்டுதல் தராது.
ஓஜஸ் பதம் மூளையில் நிறையும் போது ஆரோக்கியம் மேம்படும். நினைவு சக்தி அதிகரிக்கும்.படிக்கும்பாடம் விரைவில் மனதில் பதியும். படிக்கும் வேகம் அதிகரிக்கும். எப்போதும் உடலில் ஒருவித இன்பநிலை குறுகுறுவென ஓடிக்கொண்டிருக்கும். முகப்பருக்கள் fail and lovely இல்லாமலே உங்களுக்கு குட் பை சொல்லும்.
வாரம் ஒருமுறை அழகு நிலையம் செல்லாமலே ஒருவித பளபளப்பு உங்களின் முகத்தில் பிரகாசிக்கும்.
நாடி நரம்புகளின் தளர்ச்சிகள் கட்டுபடுத்தப் பட்டு இளமை முறுக்கு எப்போதும் உடலில் இருக்கும்.
இன்னும் பலபல நன்மைகள் உங்களுள் குடி கொள்ளும்.
ஆமாம் சுய இன்பம் நல்லதா ? கெட்டதா ?
நவீன மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள். அது ஒரு இயல்பான விஷயம். அதனைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.வித்து சக்தி எவ்வளவுதான் வெளியானாலும் மீண்டும் இரத்தம் போல் சுரந்துவிடும்.
எந்தத் தொலைக்காட்சியை திருப்பினாலும் கண்டிப்பான சித்தப்பா மனோபாவத்தில் பளபளப்பு விளக்கு வெளிச்சத்தில் ஒப்பனையோடு இருட்டு விவகாரங்களைத் திட்டும் இந்த சித்த வைத்தியர்கள் என்ன சொல்கிறார்கள்.
சுய இன்பம் தவறு !
சரி அறிவியல் மற்றும் உளவியல் என்ன சொல்கிறது.
நான் யோக பயிற்சி தர சென்றாலும் உளவியல் பயிற்சிக்குச் சென்றாலும் அங்கு வரும் பெரும்பாலானவர்களின் ( பெண்களும் தான் ) என்னிடம் கேட்கும் சந்தேகம் சுய இன்பம் பற்றியோ அல்லது பாலுணர்வு குறித்தோ இருக்கும். நேரிடையாக கேட்கமுடியாவிட்டாலும் கேள்வி ஒரு துண்டு சீட்டில் வந்து சேரும்.அவர்களின் உடல் மற்றும் மனோரீதியான பிரச்சனைகளுக்கு சுய இன்பம் தான் காரணம் என்ற குழப்பத்துடன் பேசுவார்கள்.
சரி சுய இன்பம் சரியா ? தவறா ?
ஒருவர் சுய இன்பத்தில் ஈடுப்படும் போது வித்து சக்தி வெளியேறி ஒரு பரவச நிலையைத் தருகிறது. ஆமாம்...! வித்து சக்தி என்றால் என்ன ? அது எப்படி உருவாகிறது ?
நம் உயிர் சக்தி அல்லது விந்து அணுவைத் தான் நாம் வித்து சக்தி என்கிறோம். நாம் சாப்பிடும் உணவு ஏழு விதமான தாதுக்களாக மாறுகிறது. அது இரசம்,இரத்தம்,மாமிசம்,கொழுப்பு, எலும்பு,மஜ்ஜை மற்றும் வித்துக் குழம்பு. இந்த வித்து குழம்பு தான் விந்து. இந்த வித்துக் குழம்பு நாளாக நாளாக நிறைந்து, வெளியேற யத்தனிக்கும்போது உடலில் ஒருவித தூண்டுதல் மற்றும் கிளர்ச்சி உண்டாகும்.
தாவணிகளை கண்டால் பட்டாம் பூச்சி பறக்கும். . ஆண்களுக்கு வித்து சக்தி உற்பத்தி அதிகரித்து திரவ நிலையில் நிறைந்து,எண்ணத்தில் ஒரு அழுத்தம் ஏற்பட இரவில் கனவில் ஏதோ நிகழ்ந்து நிஜத்தில் உங்கள் உள்ளாடை நனைக்கும். இது இயல்பாக எல்லோரும் எதிர்கொண்ட ஒரு அனுபவம் தான். இதில் யோகிகளும் விதிவிலக்கல்ல. இது இயல்பானது.
சரி ! இதற்கு மேல் இந்த அனுபவத்தில் ஒரு சுகத்தை உணர்ந்து அதனை செயற்கையாக செயல்படுத்தி பார்க்க தூண்டும் மனோபாவம்தான் சுய இன்பம்.
நவீன மருத்துவம் சொல்கிறது. இது இயல்பானது தான் என்று !
ஒரு துளி வித்து அணு உருவாக கோடானக் கோடி உயிர்சக்தி தேவைப்படும். இந்த சூழலில், செயற்கையாக வெளியேற்றும் போது உடனுக்குடன் உடல் வித்துக்குழம்பை வெளியேற்றும் அளவிற்கு உயிர் சக்தியை இருப்பில் வைத்திருக்க வேண்டும்.வித்தை தேவையின்றி வெளியேற்றுவது உயிர் சக்தியின் இருப்பை வீணாக்குவதுதான். !
ஒருவன் ஆரோக்கியமான உணவை உண்ணும்போது தான் இந்த ஆரோக்கியமான மாற்றம் நிகழும். உடன் மது,புகை போன்ற பழக்கம் இருந்தால், சாப்பிடும் உணவில் உற்பத்தியாகும் பாதி உயிர்ச் சக்தியில் மது,புகையால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்கவே சரியாகும். மீது உயிர்சக்தி என்னதான் முயன்றாலும் வித்து சக்தி நீர்த்துபோன தன்மையிலேயே இருக்கும்.
வித்துசக்தி கெட்டியாக கெட்டியாக உடல் மற்றும் மனவலிமைக் கூடும்.வித்து குழம்புதான் ஆரோக்கியத்தின் அடிப்படை ஏன் ஆயுளின் அடிப்படையும் கூட. வித்து எந்த அளவிற்கு அதிகமாக உடம்பில் தங்குகிறதோ அந்த அளவிற்கு உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம்,சுறுசுறுப்பு, நினைவுத்திறன், மகிழ்ச்சி எல்லாம் நிகழும்.உங்களைச் சுற்றி ஒரு ஈர்ப்புத் தன்மை பரவும்.
வித்து சக்திக் குறையும் போது சோம்பல்,அடிக்கடி உடல் அசதி, நினைவு மறதி,உடல் நடுக்கம்,நரம்பு தளர்ச்சி, மனதில் குற்ற உணர்ச்சி, கவலை வரும், ஒரு காலத்தில் கவலை மிகுந்து அச்சம் ஏற்படும்.இந்த அச்சம் தான் இன்று லாட்ஜில் ரூம் போட்டு லேகிய விற்கும் மருத்துவர்களின் முதலீடு.
தொடர்ந்து இத்தகைய செயலில் ஈடுபடும் போது உயிர்சக்தி நீர்த்துப் போகும். அதாவது திரவத் தன்மை அதிகமாக இருக்கும்.ஆனால் அதில் உயிர் அணுக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும்.அந்த சூழலில் பிறக்கும் குழந்தைகள் கொஞ்சம் நோஞ்சானாக தான் பிறக்கும். மேலும் நீர்த்துப் போன நிலையில் வாழ்க்கைத் துணையுடன் உறவில் ஈடுபடும் போது விரைவில் வெளியாகி உங்களை அசடுவழியச் செய்யும்.ஹி..ஹி...!
இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் . சுய இன்பம் நல்லதா ? கெட்டதா ?.
அடடா ! உடனே குழம்பி போய் கவலையுடன் நிற்கவேண்டாம்.
இந்த உணர்வு இயல்பானது. எப்படி சிறுநீர்,மலம் கழிப்பது இயல்பானதோ, அதே போன்று பால் உணர்வும் இயற்கையின் தூண்டுதலே. அதனால் தான் ஆண்-பெண் நட்பை திருமண பந்தத்தில் இணைத்தார்கள். அவ்வாறு மிகும் கழிவை வெளியேற்ற,இல்லற பந்தம் உறுதுணை புரிகிறது. அதுவரை பொறுமை காத்தல் நலம்.
பொறுத்தார் பூமி ஆள்வர். பொறுமையிழந்தால் பொண்டாட்டியை கூட ஆளமுடியாது !
அது எப்படி?என் சூழலுக்கு நான் உடனடியாக திருமணம் செய்ய முடியாது.அதுவரை நான் எப்படி தாக்கு பிடிப்பது?
நான் சும்மா இருந்தால் கூட அது தூக்கத்தில் வெளியாகிவிடுகிறதே என்ன செய்வது ? உங்கள் செல்லச் சிணுங்கல் கேட்கிறது.
கவலைவேண்டாம். இது உங்களுக்கு மட்டும் பிரச்சனையல்ல. வீரத்துறவி விவேகானந்தருக்கே இது பிரச்சனையாக இருந்திருக்கிறது.பாலியல் தொந்தரவை கட்டுப்படுத்த முடியாமல் தன் உறுப்புகளை எரியும் நெருப்பில் பொசுக்கிவிட முயற்சித்தார் என்று அவர் வாழ்க்கை வரலாறு புத்தகம் சொல்கிறது.
இதில் இருந்து என்ன தெரிகிறது. பாலியல் உணர்வை கட்டுபடுத்த முடியாது. ஆனால் நெறிப்படுத்த முடியும்.
பாலுணர்வை நெறிபடுத்த ஒரே வழி. நம் மனதை எப்போது ஆரோக்கியமாக அத்தகைய சிந்தனைகளில் விழாமல் வைத்திருப்பது தான். அதற்கு பெரிதும் உதவுகிறது தியானம். அவரவர் விரும்பிய வகையில் ஏதேனும் ஒரு தியானத்தை கற்றுக்கொண்டு பயிற்சி செய்து வந்தால் மனம் ஒருமைப்படும்.
உணவுமுறையில் ஒழுக்கம்.உடல் கிளர்ச்சியைத் தூண்டும் உணவு வகைகளை அளவோடு எடுத்துக் கொள்வது அல்லது முற்றிலும் தவிர்த்தல் நலம்.(Alcohol Increase the Sexual Desire: But not the pleasure).முட்டை சார்ந்த உணவுகள் புரத நிறைந்துக் காணப்படுவதால் அது உண்ணும் போது தூண்டுதல் அதிகமாக இருக்கும்.விவேகானந்தர் புகைப்பதை விரும்பினார்.மீன் உணவிலும் பிரியம் கொண்டிருந்தார் என்கிறது அவரின் சரிதை. அதனால் கூட அவருக்கு உடலியல் தூண்டுதல் அதிகமாக இருந்திருக்கலாம்.
உணவிற்கு அடுத்தபடியாக தனிமையை தவிருங்கள்.பெரும்பாலும் தனிமையான சூழலில் தான் இத்தகைய எண்ணங்கள் ஏற்படும்.
எது என்னவென்றாலும், எண்ணத்தின் அடிப்படையில் தான் எல்லா செயல்களும் எழுகின்றன. உங்களுக்கு இச்செயல் குற்ற உணர்ச்சித் தரும் எனில் அதில் நீங்கள் ஏன் ஈடுபடவேண்டும்?
ஒரு சங்கல்பத்தை “இது என் உடலுக்கும் மனதிற்கும் ஒவ்வாத செயல் ; இதில் இருந்து விடுபடுவேன்,என் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் காப்பேன்” என்று தினந்தோறும் விழிக்கும்போது எடுத்துக்கொள்ளலாம். இது நாளடைவில் மனதினுள் ஒரு கட்டளையாகவே பதிந்து உங்களைக் காக்கும்.
இன்னொன்றும் இருக்கிறது. அது தான் காயகல்பம் என்றொரு யோகமுறை.
காயகல்ப யோகம் என்ற சித்தர் பயிற்சி உயிர்சக்தியை பாதுக்காப்பதில் உறுதுணைப்புரிகிறது.
சிவவாக்கியர் என்னும் சித்தர் காயகல்பத்தின் அற்புதத்தை இவ்வாறு சொல்கிறார்.
“உருதரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தில் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரோ
விருத்தரும் பாலராவார் அருள் தரித்த
அம்மைப்பாதம் அய்யன் பாதம் உண்மையே “
காயகல்ப பயிற்சியின் மூலம் உயிர்சக்தி ஒஜஸ் பதங்களாக மாறும்போது மூப்பு வராது, என்றும் இளமையுடன் திகழ்வர், அதாவது கிழவனும் குமரனாவான் என்பது அதன் சாரம்சம்.
காயகல்பம் பிரம்மசாரிகளுக்கு மட்டுமல்ல இல்லற ஜோதிகளுக்கும் ஒரு வரப்பிரசாதம். வயக்கரா இல்லாமலே அதன் வேலையை காயகல்பம் செய்யும். அதே நேரம் காயகல்பத்தின் இன்னொரு யுக்தி பாலியல் உணர்வை கட்டுப்படுத்தி,வித்துசக்தியை கெட்டிபடுத்தி இளமை நோன்பு காக்கவும் உதவும். உடலில் வித்து சக்தி மிகும்போதெல்லாம் இந்த யுக்தியின் மூலம் கெட்டியாக்கி கொண்டே வரமுடியும். இதன் மூலம் வித்தில் நீர்ப்புத் தன்மை குறைந்து தூண்டுதல் சமன்படும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காரட்

காரட்டை நாம் சாப்பிட்டு வந்தால் நமது மேனி பளபளப்பாகும் என்பதனால் தான் காரட்டிற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது. அது மட்டுமல்ல வேறு எந்த காய் கனிக்கும் இல்லாத சிறப்பு குணம் காரட்டிற்கு மட்டுமே உள்ளது. உலகத்தில் இதுவரை மருந்தே கண்டு பிடிக்கப்படாத ஒரு நோய் உண்டென்றால் அது புற்று நோய் (கேன்சர்) தான். அந்த நோய் நமக்கு வராமல் செய்கின்ற ஆற்றல் வேறு எந்த காய் கறிக்கும் கிடையாது. அந்த சிறப்பு குணம் காரட்டிற்கு மட்டுமே உள்ளது. காரட்டில் கரோட்டின் என்கின்ற உயரிய சத்து உள்ளது தான் இதற்கு காரணமாகும். இதனை உயர்வாக சொல்வது என்றால் காரட்டில் பீட்டா கரோட்டின் என்கின்ற நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துகின்ற சத்து உள்ளது என்று சிறப்பித்து விஞ்ஞானிகள் கூறுவார்கள். இந்த பீட்டா கரோட்டினின் உள்ள சிறப்பு அணுக் கூறுகள்தான் புற்று நோய்க்கு எதிரியாக இருந்து செயல்படுகின்றது. இந்த சமயத் தில் உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். புற்று நோயை வரவிடாமல் செய்கின்ற ஆற்றல் மட்டும்தான் உள்ளதா? இல்லை-புற்று நோய் வந்தவர்களுக்கு குணம் அளிக்கின்ற ஆற்றல் காரட்டில் உள்ளதா? என்று நீங்கள் கேட்கலாம். காரட்டில் புற்று நோயை வரவிடாமல் செய்கின்ற நோய் தடுப்பு ஆற்றல் மட்டுமே உள்ளது. காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற சத்து வயிறு தொடர் பான எல்லாவித நோய்கள் அனைத்தையும் குணப்படுத்துகின்ற சக்தி பெற்றவை. உதாரணமாக பல காலமாக அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் காரட்டினை நன்கு சாறு பிழிந்து வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டால் போதும் வயிறு மற்றும் குடல் சம்மந்தமான நோய்கள் எல்லாம் குணம் அடைவதுடன் மறுபடியும் இதுபோன்ற பாதிப்புகள் வரவிடாமலும் செய்துவிடும் காரட்.
சிலருக்கு வாயில் எப்போதும் துர்நாற்றம் இருந்து கொண்டே இருக் கும் எத்தனை தடவை பல் துலக்கினாலும் அந்த துர்நாற்றம் சிலரு க்கு போகவே போகாது. அதற்கு காரணம் வாயோ, பற்களோ அல்ல. வயிற்றிலிருக்கும் கோளாறுதான் காரணம். எனவே வயிறு குறைபாட்டை ஒழித்தால்தான் அந்த வாய் துர்நாற்றம் போகும். வாய் துர் நாற்றம் உள்ளவர்கள் அத்தனை பேருக்கும் ஒரு இனிப்பான செய்தி இது. வாரம் ஐந்து நாட்கள் மட்டும் காரட் சாறினை சர்க்கரை மற் றும் உப்பு எதுவுமின்றி அருந்தி வாருங்கள். அப்புறம் பாருங்கள் வாய் துர்நாற்றம் போயே போயிந்து என்று நீங்கள் சொல்வீர்கள். காரட்டினை வாரத்தில் இரண்டு நாட்களாவது நமது சமையலில் பயன்படுத்துவது உடம்பிற்கு நல்லது. ஏனெனில் காரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியை தருகின்றது. காரட்டினை பச்சையாகவே நிறைய சாப்பிடலாம். பற்களில் கரை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக காரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கரைகள் போய்விடும். உங்களுக்கு தாங்க முடியாத பசியா? எதாவது கிடைத்தால் சாப்பிடலாம் என்று தோன்றுகின்றது… ஆனால் எதுவும் கிடைக்கவில்லை என்கின்ற சூழ்நிலையா? சற்றும் தயங்க வேண்டாம். அருகில் காய்கறி கடை உள்ளதா என்று பாருங்கள். ஒரே ஒரு காரட் வாங்கி பச்சையாக மென்று தின்று பாருங்கள். பசி காணாமல் போய் விடும். காய சண்டிகையின் தீரா பசியைகூட காரட் போக்கி விடும் சக்தி பெற்றது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சீரகத்தின் பயன்கள்

வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படும் 'சீரகம்', வாசனைப் பொருட்களில் தனி இடம் பெற்றுத் திகழ்ந்தாலும், ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அனேக வழிகளில்நமக்கு உபயோகப்படுகிறது. இத்தாவரத்தின் விதைகள்தான் நாம் பயன்படுத்தும் சீரகம். பண்டக்காலத்திலிருந்தேஇந்தியாவில் சீரகம் எளிய மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
* தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க ¬வத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைததுக் கொள்ளவும். இதை, நாள்முழுதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.
* சிறிது சீரகத்தை மென்றுதின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்¬ல நீங்கும்.
* சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக்கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம்மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமு¬ற தடுப்புமுறையாகக் கூட இதைச் சாப்பிடலாம்.
* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்குஉண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.
* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்தநோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்தஅழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்
.
* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.
* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டு வேளையாகசாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டுவர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சிகுணமாகும்.
* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.
* ஓமத்துடன் சிறிதுசீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
* பெண்களுக்கு ஏற்படும்வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.
* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
* சீரகத்தை தேயிலைத்தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்துசாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.
* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

துளசி

ன், பொடுகு தொல்லை நீங்கும்.
துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.
துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.
'துளசி

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.
பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.
துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.'

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இளநரை

1) பித்த இளநரை
இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம். பித்தப் பிரகிருதிகளுக்கு இளம் வயதிலேயே தலை நரைத்துவிடும். ஆனால் அதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. உணவில் கறிவேப்பிலையை நிறைய சேர்க்க வேண்டும். பசுவெண்ணெய்க்கு இளநரையை மாற்றும் தன்மை இருக்கின்றது. தினமும் பசு வெண்ணையைச் சிறிது சாப்பிட்டு வரவேண்டும். வெண்ணெயுடன் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். இதே வெண்ணையைத் தலை, கால்களில் அழுத்தித் தேய்க்க வேண்டும். தலைமுடியின் வளர்ச்சிக்கும் கருமைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காயை வெட்டி கொட்டை நீக்கி நிழலில் காயவைக்கவும். உலர்ந்த பிறகு தேங்காய் எண்ணெயில் வறுக்க வேண்டும். காய் நன்றாக கருகும்வரை வறுத்தால், எண்ணெய் நன்றாக கருநிறமாகிவிடும். இந்த எண்ணெய் தலைக்கு நல்லது. இளநரையைத் தடுக்கும். பித்தம் சமனமாகும். உலர்ந்த நெல்லிக்காயைத் தண்ணீரில் ஓரிரவு ஊறப்போட்டு அந்தத் தண்ணீரைத் தலையில் தேய்க்கலாம். இளநரைக்கு நல்லது.
2.மெலனின் பற்றாக்குறை
தலையில் பொடுகு அதிகம் தோன்றினால், அவை வேர்க்கால்களை அடைத்து, மெலனின் உற்பத்தியை குறைத்து, நரையை அதிகப்படுத்துகின்றன.
* தலையை அலசி குளிப்பதற்காக பயன்படுத்தும், சில வேதிப்பொருள் கலந்த வீரியமிக்க ஷாம்புகள் மற்றும் முடி அலசிகளிலுள்ள ஹைட்ரஜன் பெராக்சைடு, வேர்க் கால்களை சேதமடையச் செய்து, கறுப்பு நிறமிகளை அழித்து, நரைமுடிகளை அதிகப்படுத்துகின்றன. புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து குறைவினால், முடியின் கறுமை நிறம் மங்கி, செம்பட்டை நிறம் தோன்றுகிறது. நாளடைவில் இதுவே, நரைமுடிக்கு காரணமாக அமைகிறது. நரைமுடி அதிகரிப்பதற்கு, பி.சி.எல்., என்ற ஜீன்கள் காரணமாக இருப்பதாக, அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்களை விட ஆண்களுக்கே, முடி மிக கறுப்பாக காணப்படுகிறது.கரும்பூலாவின் குணம்முடிக் கால்களில் தோன்றும் மெலனின் பற்றாக்குறையை கட்டுப்படுத்தி, மெலனின் அழிவை தடுத்து, நரைமுடிகளை நெருங்க விடாமல் தடுக்கும் அற்புத மூலிகை கரும்பூலா.இந்தச் செடியின் இலைகள் மற்றும் பழங்களில் உள்ள குளோஜிடோனால், பிட்டுலின் மற்றும் பிரிடெலின் வேதிப்பொருட்கள், நரைமுடிகளுக்கு காரணமான மெலனின் அழிவை தடுத்து, கறுப்பு நிறத்தைக் கூட்டி, இளநரை ஏற்படாமல் தடுக்கின்றன.
கரும்பூலா பழம் மற்றும் இலைகள், நெல்லிக்காய், மருதோன்றி இலைகள், கறிவேப்பிலை இலைகள், அவுரி இலைகள் ஆகியவற்றை இடித்து, 500 மி.லி., சாறெடுத்துக் கொள்ள வேண்டும். கடுக்காய் தோலை, ஒன்றிரண்டாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். 500 மி.லி., தேங்காய் எண்ணெயுடன் சாறு மற்றும் கடுக்காய் தோல் பொடியை கலந்து, கொதிக்க வைத்து, சாறு வற்றியதும் வடிகட்டி, சூடு ஆறியபின், மூடிய பாத்திரத்தில் எடுத்து வைத்து, 15 நாட்கள் சென்றதும், மீண்டும் ஒருமுறை வடிகட்டி, தலையில் தேய்த்து வர, நரைமுடி வராமல் தடுக்கும் மற்றும் இளநரை மாறும்.
முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.
இளநரை போக்க மூலிகை எண்ணெய்
தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 3
கறிவேப்பிலை – 2 இணுக்கு
கொத்தமல்லலி – சிறிதளவு
நெல்லி வற்றல் – 10 கிராம்
வெட்டிவேர் – 5 கிராம்
இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பெண்களுக்கான அழகு குறிப்புகள்

பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது முகத்தில் தோன்றும் முடிகள்தான்.
சிறுசிறு முடிகள் முகத்தில் தோன்றி, முகத்தின் அழகை கெடுக்கும். இத்தகைய முடிகளை அகற்ற இக்காலத்தில் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் அதிகம்.
குறிப்பாக முடிகளை நீக்க ப்ளீசீங் முறையைப் பயன்படுத்துகின்றனர். ப்ளீச்சிங் முறையில் முடிகளை அகற்றுவது சிறந்தென்றாலும், இதனால் சருமம் உலர்ந்து வறட்சித் தன்மை ஏற்படும். வறட்சியான தோலில் பருக்கள், வெடிப்புகள் தோன்றும்.
ஆனால் இயற்கை முறையிலேயே கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி ப்ளீச்சிங் செய்யலாம். இதனால் முகத்திலுள்ள அழுக்குகள், தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, நல்ல ஆரோக்கியமான அழகையும் பெற முடியும்.
பழைய காலத்தில் வயதான பெண்கள் தேவையற்ற முடியை உடம்பிலிருந்து அகற்றுவதற்குச் சாம்பலையும் சர்க்கரையையும் பயன்படுத்துவார்களாம். என் பாட்டி சொன்ன விஷயம் இது. சர்க்கரையைக் காய்ச்சி அந்தப் பாகில் சாம்பலைக் கலப்பார்கள். இதனை முடியுள்ள பகுதியில் தடவி முடியைப் பிய்த்து எடுப்பார்கள். காஷ்மீரில் பெண்கள் வேறொரு வகையில் முடியை அகற்றுவார்கள். சாம்பலை களிமண் அல்லது உளுந்தமாவுடன் கலந்து கக்கம் மற்றும் மறைவிடங்களில் உள்ள முடியை அகற்றுவார்கள். இவ்வாறு எடுத்தபின் அந்த இடத்தில் முடி முளைக்காது என்கிறார்கள். குழந்தைகளுக்கு உள்ள மெல்லிய மயிர்களை எடுக்கவேண்டுமென்றால் கோதுமை மாவை உபயோகிக்கலாம். கோதுமை மாவைப் பிசைந்து அழுத்தமாகத் தேய்த்தால் மெல்லிய மயிர்கள் வந்துவிடும்.
இயற்கையாக ஸ்கரப்கள் தயார் செய்வது எப்படி?
கடலை, மஞ்சள்தூள்:
கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளுடன் கடுகு எண்ணையைச் சேர்த்து பசைபோல ஆக்கி, அதை முகத்தில் பூசவேண்டும். முடிகள் இருக்கும் இடத்தில் இந்த கலவையை நன்றாக தேய்த்து நீரில் கழுவ வேண்டும். இம்முறையை தொடர்ந்து வாரம் இருமுறை செய்துவர முகத்தில் இருக்கும் அழுக்கு, முடிகள் நீங்கும். தேவையில்லாமல் முகத்தில் தோன்றும் முடிகளின் வளர்ச்சி குறைந்து நாளடைவில் அவைகள் நீங்கிவிடும்.
தேன், எலுமிச்சை:
தேனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி இருபது நிமிடங்கள் ஊறவிட்டு, பிறகு குளிர்ந்த நீரில் முகம் கழுவ முகம் பட்டுப்போன்ற சருமத்தைப் பெற்று ஜொலிக்கும்.
முட்டை, சர்க்கரை, சோளமாவு:
முட்டையை உடைத்து ஒரு கோப்பையில் ஊற்றி, அதில் சர்க்கரை, சோளமாவை கலந்து நன்றாக கலக்கி, உருவான கலவையை எடுத்து முகத்தில் பூசி நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு ஐந்து நிமிடத்திற்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ முகம் பளிச்... பளிச் ....
கடலை மாவு, தயிர், மஞ்சள்:
இம்மூன்றையும் கலந்து பசைபோல் ஆக்கிக்கொள்ளுங்கள். பிறகு அதை இதமாக முகத்தில் நன்கு தடவி இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு பசும்பால் கொண்டு முகத்தை கழுவவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாக கழுவி, வெண்மைநிற துணியால் முகத்தை இதமாக துடைக்கவும். இப்பொழுது உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்க.. நீங்களே வியந்துபோவீர்கள்..!!! இம்முறையை வாரம் இருமுறை தொடர்ந்து செய்துவர உங்கள் முகம் பால்போல் வெண்மையாக ஜொலிக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS