பற்கள் பளிச்சிட

புதினாவை அதிகம் வாங்கி விட்டு அல்லல்படுவதை விட, அதிகமாக இருக்கும் புதினாவில் இலையை மட்டும் தனியாக எடுத்து, கல் உப்பு போட்டு கசக்கி அதைப் பற்களில் தினமும் நன்றாகத் தேய்த்தால், வாயில் கெட்ட வாடை நீங்கி, பல் பளிச்சிடும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உடல் எடையை அதிகரிக்கும் சீதாப்பழம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய பழம் தான் சீதாப்பழம், இது தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது.

100 கிராம் சீதாப்பழத்தில் உள்ள சத்துக்கள்

நீர்ச்சத்து- 70.5%, புரதம்- 1.6%, கொழுப்பு- 0.4%, நார்ச்சத்து- 3.1%, கால்சியம்- 17 மில்லி கிராம், பாஸ்பரஸ்- 47 மில்லி கிராம், இரும்புச்சத்து- 4.31 மில்லி கிராம், வைட்டமின் சி-37 மில்லி கிராம், விட்டமின் பி காம்ப்ளக்ஸ் சிறிதளவு, மாவுச்சத்து- 23.5%, கலோரி அளவு- 10.4% ஆகும்.

மருத்துவ பயன்கள்

காய்ச்சலை குணப்படுத்தும். செரிமானம் மேம்படும், மலச்சிக்கல் நீங்கும்.
இதில் கால்சியம் சத்து இருப்பதால் எலும்புகள் பலப்படும்.
விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும், பேன்கள் ஒழிந்து விடும்.
சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது, பொடுகு மறைந்துவிடும்.
சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும்.
இதில் காப்பர் அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்றது, இதனை சாப்பிடுவதன் மூலம் விரைவிலேயே குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது.
கண்பார்வையை பலப்படுத்துதல், இரத்தசோகையில் இருந்து காப்பாற்றுதல் போன்ற பணிகளை செய்கிறது.
குறிப்பு

உடல் எடையை அதிகரிக்கும் பழம் என்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நரை முடி அகல முருங்கைக் கீரை

சாதாரணமாக வீடுகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவபொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்றவியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. முருங்கைக் கீரைவாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.

வெப்பத்தின் காரணமாக முடி உதிர்வது நிற்கும்.முடி நீண்டுவளரும்.நரை முடி அகலும்.தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைகீரையில்இரும்புச் சத்து, (iron)சுண்ணாம்புசத்து (calcium)கணிசமாக உள்ளது. அந்தவகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.

முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப்பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்துஅதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின்காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல்நீங்கும்.

முருங்கை காய் சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்கவல்லது.ஆதலால் இதை உண்டால் சிறுநீராகம் பலப்படும்தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்றபெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும்.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகுரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால்உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு,தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகைஉள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும்.முடி நீண்டுவளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும்.கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகியவியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்தசாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல்,வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும்பயன்படுகிறது.

வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயைஉணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன.வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப்காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிபதை ஊக்குவிக்கும்.பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டுதயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கைகீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையைஅகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உடல் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் மருந்து!

தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது. நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.

இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது.

இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது.

இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது,

இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.

தேவையான பொருள்கள் :
=======================
1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு
செய்முறை:
=======================
நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும்.

2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது.

சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.

இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும். அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பிரசவத்தின் போது ஏற்படும் தழும்பை மறைக்கணுமா?

 உங்களுக்கான டிப்ஸ்

பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கு அடிவயிற்றில் தழும்புகள் ஏற்படுகின்றன.

ஏனென்றால் நம் உடம்பில் உள்ள தசைகள் சுருங்கும் போது கொழுப்புகள் படிந்து டெர்மிஸ் உடைகிறது, இதனால் தழும்புகள் உண்டாகின்றன.

இத்தழும்புகள் வருவதற்கு முன் நாம் அன்றாடம் உணவில் விட்டமின் E உள்ள எண்ணெய் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை பயன்படுத்தி வந்தால் இதனை தடுக்கலாம்.

பிரசவத்திற்கு பின் தழும்புகளை தடுக்க சிம்பிளான டிப்ஸ் இதோ,

தேவையானவை

மாம்பழ பட்டர்- அரை கப்

தேங்காய் எண்ணெய்- கால் கப்

விட்டமின் E -1 கேப்ஸ்யூல்

Tamanu Oil - 2 டேபிள் ஸ்பூன்

பாதாம் போன்ற வாசனை எண்ணெய்- சில துளிகள்

செய்முறை

முதலில் மாம்பழ பட்டரை உருக்கி அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து அதை கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு வெந்நீரில் அந்த கிண்ணத்தை வைத்து சூடுபடுத்த வேண்டும்.

பின்னர் இதில் தமனு எண்ணெய், விட்டமின் E கேப்யூல் மற்றும் ஏதாவது ஒரு வாசனை எண்ணெயை கலந்து நன்றாக கலக்கி, காற்று புகாமல் ஒரு போத்தலில் வைக்கவும்.

தினமும் இதனை இரு வேளைகளிலும் தழும்பு உள்ள பகுதிகளில் தடவி வந்தால், தழும்புகள் விரைவில் மறையும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கொய்யா இலையின் மகத்துவங்கள்

கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் மிகுந்து காணப்படுகிறது.

கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் B6, கோலைன், விட்டமின் C, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி போன்ற தன்மைகளும் நிறைந்துள்ளது.

கொய்யா இலையில் உள்ள பயன்கள்

வயிற்றுப் போக்கினால் அவதிப்படுபவர்கள் 30கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து, 2 டம்ளர் நீரில் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் உடனே நல்ல தீர்வு கிடைக்கும்.

கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ தயாரித்து, பின் அதை 12 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை குறைக்கலாம்.

எட்டு கொய்யா இலையை ஒன்றரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி தினமும் மூன்று முறை குடித்து வர தீராத வயிற்று வலி காணாமல் போய்விடும்.

கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வருவதால் விரைவில் உங்கள் உங்கள் எடை குறைவதை நீங்கள் காணலாம்.

கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்றும் அல்லது கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தாலும், வாயில் ஏற்படும் பல் வலி, ஈறு பிரச்சனைகள்.வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றை உடனே சரி செய்கிறது.

மூக்கு அழற்சியால் தினமும் கஷ்டப்பட்டு வந்தால், கொய்யா இலையை டீ போல் செய்து குடித்து வர வேண்டும்.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள், கொய்யா இலையின் டீயை தொடர்ந்து குடித்து வந்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, வயிற்றில் உள்ள பக்டீரியாக்களை அழித்து, செரிமானம் நடைபெறும்.

கொய்யா இலையில் போடும் டீயானது உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை பராமரித்து கல்லீரலுக்கு சிறந்த டானிக்காக பயன்படுகிறது.

கொய்யா இலையில் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வினைத் தருகிறது.

கொய்யா இலையின் கஷாயம் செய்து தொடர்ந்து குடித்து வந்தால், உதிரப்போக்கு தடைபடும், மேலும் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சக்கரை நோய்க்கு மிக சிறந்த மருந்து

440இல் இருந்த சக்கரை அளவு 30தே நாளில் 240 ஆக ஆன அதிசயம். அவசியம் படிச்சி பார்த்துட்டு கண்டிப்பா செய்தும் பாருங்க
எனக்கு தெரிந்த உறவினர் ஒருவருக்கு ஏழு வருடங்களாக சக்கரை நோய் இருந்தது. உண்மையில் சக்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல. நமது உடலில் சக்கரையின் அளவு அதிகமானால் வரும் பாதிப்பு. சக்கரையின் அளவை சரி செய்தால் போதும்.
அதன் அந்த அளவை எப்படி சரி செய்வது. எவ்ளோ இன்சுலின் , எவ்ளோ மாத்திரைகள். எத்தினை ஆயிரங்கள், லக்ஷங்கள் மருந்திற்கு என்று செலவு செய்வது. சரி ஆகவே மாட்டேங்கர்தே. இதற்க்கு ஒரு தீர்வே இல்லையா.???
இருக்கிறது
like emoticon
எனக்கு தெரிந்தவருக்கு இருந்த சுகர் எவ்ளோ தெரியுமா. கேட்டால் ஷாக் ஆய்டுவீங்க. 440. ஒரே மாதத்தில் அது 240 ஆக ஆனது. எப்படி.!!?
எங்களது ஒரு குடும்ப நண்பரின் ஆலோசனைப்படி நிலவேம்பு என்னும் மூலிகையை அவர் தினமும் சாப்பிட்டு வந்தாங்க. அவருக்கு மட்டும் அல்லாமல் எனது அத்தைகளும் நிலவேம்பு கஷாயம் குடித்ததன் பலனாக இன்று சக்கரை வியாதி பூர்ணமாக குணம் அடைந்து விட்டது.
நிலவேம்பு வெறும் உடலில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துவதை மட்டும் செய்வதில்லை. உடல் வலிமை, குடல் பூச்சிகள் அழிய, டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற அனைத்து கொடிய வியாதிகளையும் தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி நிலவேம்பு. டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவிய சமயத்தில், அதற்க்கு நிலவேம்பு மிக சிறந்த மருந்து என்று தமிழக அரசாங்கமே அறிவிப்பு வெளியிட்டது உங்களில் சிலருக்கு நியாபகம் இருக்கலாம்.
இதை எவ்வாறு பயன் படுத்துவது- இவற்றோடு கொத்தமல்லி, கிச்சலி தோல் எல்லாம் சேர்க்க வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். அது தேவையில்லை. விருப்பபட்டால் சேர்க்கலாம். இரண்டு டம்ப்ளர் நீரில் அதிக பக்சம் 10, 15 கிராம் நிலவேம்பு போட வேண்டும். 15 கிராம்க்கு மேல் போட்டால் ஓவர் டோஸ். அவர், அவர் வயது, உடல் வாகிற்கு தகுந்தார் போல் டோஸேஜ் கொஞ்சும் கூடலாம், குறையலாம். ஆனால் டோஸேஜ் குறைந்தால் கூட பிரச்சனை இல்லை. அதிகரித்தால் ஆபத்து. பத்து கிராம் என்பது சிறுவர், பெரியவர் அனைவருக்கும் ஏற்று கொள்ளும் சரியான டோஸேஜ். வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்கள் சக்கரையின் அளவை சோதனை செய்யுங்கள். அதற்க்கு தகுந்தார் போல் நீங்கள் டோஸேஜ்ஜை அதிகரித்து கொள்ளலாம். ஆனால் அதிக பக்சம் 15 கிராம் தான். வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள வேண்டும்
இத்தகைய சிறப்பு வாய்ந்த நிலவேம்பின் ஆரம்ப விலை எவ்ளவு தெரியுமா. வெறும் 55 ரூபாய். சில நாட்டு மருந்து கடைகளில் இதை விட விலை குறைவாகவும் கிடைக்கலாம், கூடவும் கிடைக்கலாம்.
பின் குறிப்பு:-
உடல் ஆரோக்கியத்திற்கு இனிப்பாக இருக்கும் பெரும்பாலானவை நாவிற்க்கு கசப்பாகவே இருக்கும். நிலவேம்பும் அதற்க்கு விதி விலக்கல்ல. நிலவேம்போடு தேனை சிறிது கலந்து குடித்தால் அது இனிப்பாகவும் இருக்கும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை சற்று கூட்டுவதாகவும் இருக்கும். தேனில் நிறைய ட்யூப்லிகேட் வருகிறது. காதியில் சுத்தமான மலை தேன் கிடைக்கும்.
சரி. சக்கரை வியாதி உள்ளவர்கள் நிலவேம்பில் தேன் கலந்து குடித்தால் சக்கரை வியாதி குணம் அடையுமா. என்னும் சந்தேகம் வரலாம். நிச்சயம் குணம் அடையும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை முறிக்கும் அளவு சக்தி தேனிர்க்கு இல்லை. என்ன ஒரு ரெண்டு, மூணு நாள் முன்ன, பின்ன ஆலாம். தினமும் இன்சுலின் போட்டு கொள்ளும் அவஸ்தைக்கு மூக்கை பிடித்தவாறே மடக்குனு ஒரு 30, 50 மில்லி நிலவேம்பு நீரை குடிப்பது கஷ்ட்டமாக இருக்காது. முதல் 30 நாள் கஷ்ட்டமாக இருக்கும். 31 ஆவது நாள். சக்கரை வியாதியே உங்களுக்கு இருக்காது.
Special Tips For Sugar Problem :
நூக்கல் 2 எடுத்து மிக்சியில் அரைத்து அதில் 5 ஆவாரம் பூக்களை அரைமணிநேரம் ஊரவைத்து குடிக்க வேண்டும்.
5 வெண்டைக்காய்களை எடுத்து துண்டு துண்டாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு இரவு ஊற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS