மலச்சிக்கலும், அஜீரணமும் மனித ஆரோக்கியத்தின் எதிரிகள். உணவை எப்போதும் நன்றாக மென்று மெதுவாகச் சாப்பிட வேண்டும். நாம் உண்ட உணவு முறையாக இரைப்பையில் ஜீரணிக்க 4 மணி நேரமாகும். அங்கு செரிமானம் ஆக நேரமே கொடுக்காமல் கோப்பி, தேனீர், நொறுக்கு தீனிகள் என்று மேலும் திணிப்போம். அளவிற்கதிகமாக இடைவேளையின்றி அடிக்கடி உள்ளே போகும் உணவால் இரைப்பை சுருங்கி விரிய வழியின்றி செயல்படாது ஸ்தம்பித்து விடும்.
குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் உணவு இரைப்பையில் ஜீரணிக்க முடியாத நிலையில் தங்கியிருந்தால் அது புளித்துக் கெட்டுப் போய்விடும். கோபம், பயம், கவலை அவசர மனோநிலையில் உணவை உண்ணக் கூடாது. இரவில் தூங்குவதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பாக, உணவை மிக கொஞ்சமாகவோ அல்லது பழங்களையோ உண்டால், உணவு வயிற்றில் தங்கி கெட்டுப் போகாமல் நன்கு செரிமானம் ஆகும்.
பசியின்மை, செரிமானமின்மை, ஏப்பம், புளியேப்பம், வாய் நாற்றம், நெஞ்செரிச்சல், வயிறு உப்பசம், மலச்சிக்கல் அஜிரண வாயுக்கோளாறு, நீடித்த ஓரு பக்கத்தலைவலி, தலைச்சுற்றல், கண்பார்வையில் மங்கல், நரம்புத்தளர்ச்சி, தூக்கக்குறைவு, பிடரி கழுத்து, முதுகு, இடுப்பு, தோள்பட்டைகளில் வலி, மூட்டுக்களில் வலியோடு சேர்ந்த வீக்கம், வறட்டு இருமல் என இத்தனையும் செரிமான உறுப்புகள் பாதிக்கப்பட்டதால் உண்டான இடையூறுகளே.
இந்த தொல்லை உள்ளவர்கள் முதலில் தொடர்ந்து மூன்று தினங்கள் பழச்சாறு (சர்க்கரை, பால் சேர்க்க கூடாது) மற்றும் பழங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். பழ உணவுகளால் அஜிரணம், மலச்சிக்கல் உண்டாகாது. உணவில் கீரைகள், நார்ப்பொருள் அடங்கிய காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
“முறையாக ஒன்றை ஆரம்பித்தால் கிடைக்கும் வெற்றியில் பாதி, முதலிலேயே கிடைத்துவிடும்” என்பது ஒரு சீனப் பழமொழி.
மேற்கூறிய அத்தனை வியாதிகளுக்கும் அக்குபிரஷர் மூலம் எளிய வழியில் தீர்வு காணலாம். இரண்டு கைகளிலும் மிகவும் அழுத்தமான ஒரு பந்தை (Ball) வைத்து ஒரு நிமிடத்திற்கு உருட்ட வேண்டும்.. இதே போல ஒரு நாளைக்கு நான்கைந்து முறை செய்து பாருங்கள்… முதல் நாளே உடலில் உண்டாகும் மாற்றங்களை நன்கு உணர முடியும்.
0 comments:
Post a Comment