RSS

தலைவலி குணமாக

28 வகையான பாட்டி வைத்தியங்கள் :-
தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. தலைவலி என்ற உடன் பலர்மாத்திரையை சாப்பிடும் பழககம் கொண்டுள்ளனர். முடிந்தவரை தலைவலிக்கு மாத்திரைகளை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.

தலைவலி சரியாக சில பாட்டி வைத்தியங்கள் :-
1) கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விலகும்.
2) திருநீற்றுப பச்சிலைச் சாறு, தும்பைச்சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து நெற்றியில் தடவ தலைவலி தீரும்.
3) துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும்.
4) கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று போட தலைபாரம் குறையும்.
5) நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
6) துளசி இலைகளோடு ஒரு துண்டு சுக்கு, லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குறையும்.
7) கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.,
8) வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.
9) முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும்.
10) கீழாநெல்லிச்சாறு, குப்பைமேனி இலைச் சாறு இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி நெற்றியில் தடவி வர தலைவலிஎலுமிச்சைப் பழச் சாற்றை இரும்பு சட்டியில் விட்டு காய்ச்சி நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.
11) இஞ்சிச் சாறை நல்லெண்ணெயில் காய்ச்சி தினமும் தலையில் தேய்த்து வர தலைவலி குறையும்.
12) ஓமவல்லி இலைச் சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை கலந்து நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.
13) அகத்தி இலையை அரைத்து நெற்றியில் பற்று போட தலை வலி குறையும்.
14) மிளகாய் , மிளகு, செம்மண் முன்றையும் சம அளவு எடுத்துத் தண்ணீர் விட்டு மைப்போல அரைத்துக் கொதிக்க வைத்து இளஞ் சூடாகப் பற்றுப் போட தலைவலி குறையும்.
15) இஞ்சியைத் தட்டி வலி உள்ள இடத்தில் பற்றுப் போட தலை வலி குறையும்.
16) வெற்றிலை, நொச்சி இலை, குப்பைமேனி இலை, மிளகு, சுக்கு இவற்றின் சாறை எடுத்து காய்ச்சி தலையில் தேய்த்து குளிக்க தலைவலி குணமாகும்.
17) சுக்குப் பொடியை பாலில் குழைத்து நெற்றியில் தடவ தலை வலி குறையும்.
18) மிளகை அரைத்து பாலுடன் கலந்து தலையில் தேய்த்து குளிக்க தலை வலி குறையும்.
19) கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையை நெற்றியில் தடவினால் தலைவலி குறையும்.
20) அகத்தி இலைச் சாறெடுத்து நெற்றியில் தொடர்ந்து தடவி வர தலை வலி குறையும்.
21) எலுமிச்சைப்பழச் சாற்றில் மிளகை மைய அரைத்து நெற்றியில் போட தலைவலி குறையும் .
22) குங்குமப்பூவை மைய அரைத்து நெற்றிப்பொட்டில் தடவ தலைவலி குணமாகும்.
23) நெல்லிக்காயை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி நீங்கும்.
24) இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்று சேர்த்துக் காய்ச்சி சீசாவில் வைத்துக் கொள்ளவும். தைலத்தை தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின் குளிக்க
தலைவலி குணமாகும்.
25) ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி விலகும்.
26) ஜாதிக்காய் விதைகளை அரைத்து அடிக்கடி தலையில் தேய்த்தால் தலைவலி நீங்கும்.
27) மிளகு, துளசி இரண்டையும் வாயில் போட்டு கொண்டால் தலை வலி விரைவில் குறையும் .
28) உப்பு,மிளகு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விரைவில் நீங்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment