Showing posts with label dates. Show all posts
Showing posts with label dates. Show all posts

Dates - பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!
பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம்.
* வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும்.
* மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
* பேரிச்சம் பழம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒருவேளை உங்களுக்கு சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் அல்லது வேறு ஏதேனும் செரிமான பிரச்சனைகள் இருப்பின், பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வர, அதில் உள்ள நார்ச்சத்து இப்பிரச்சனைகளுக்கு தீர்வளித்து, குடல் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.
* பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
* பேரிச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம், தமனிகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைப்பதாக கூறுகின்றன.
* பேரிச்சம் பழத்தை கர்ப்ப காலத்தில் உட்கொண்டு வந்தால், பிரசவம் முடிந்த பின் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.
* பேரிச்சம் பழத்தில் உள்ள பொட்டாசியம், இதய செயல்பாட்டை மென்மையாக்கி, இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும். எனவே பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.
* தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்கும்.
* பேரிச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் அபாயத்தைக் குறைக்கும். எனவே உங்கள் உடலில் இரத்தத்தின் அளவு சீராக இருக்க, தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள்.
* சளி இருமலுக்கு பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.
* நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவைப்படுவதால் தினமும் இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பேரீச்சம்பழத்தின் 10 நன்மைகள்

பேரீச்சம்பழத்தில் புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், மாங்கனீசு,பொட்டாசியம்,தாமிரம்,மக்னீசியம், இரும்புச்சத்து, விட்டமின் -A, விட்டமின் -B, விட்டமின் -E, விட்டமின் -B2 விட்டமின் -,B5 போன்ற அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் குளுக்கோஸ், பிரக்டோஸ்,சுக்ரோஸ் போன்ற சத்துகள் நிறைந்து காணப்படுகிறது.

மருத்துவ பயன்கள்

மாலைக்கண் நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான எல்லா சத்துகளும் கிடைத்து கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாத விலக்கை நிவர்த்தி செய்ய பேரீச்சம் பழம் நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.

ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உடலின் எடையை அதிகரிக்க தினமும் காலையில் பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருவதால்,அப்பழத்தில் இருக்கும் விட்டமின் மற்றும் புரதம் போன்றவை உடல் எடையினை அதிகரிக்கச் செய்கிறது.

தினமும் பேரீச்சம் பழத்தை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

பேரீச்சம் பழத்தில் நிறைய விட்டமின் A,B இருப்பதால், இவை சருமத்தை மிருதுவாக்கி,சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் தழும்புகள் மறைவதற்கு பயன்படுகிறது.

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை பேரீச்சம் பழத்தில் இருப்பதால்,இவை ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

பேரீச்சம் பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து மற்றும் விட்டமின் C,B6 போன்றவை ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்து ரத்த சோகை பிரச்சனையை தீர்க்கிறது.

முதியவர்களுக்கு உண்டாகும் கை,கால் மூட்டு வலி போன்றவற்றை இந்த பேரீச்சம் பழம் குணப்படுத்துகிறது.

சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு பேரீச்சம் பழத்தை பாலில் போட்டு காய்ச்சிய பின் அதை குடித்து வந்தால் குணமாகும். கர்ப்பிணிப் பெண்கள் இந்த பேரீச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் குழந்தை மற்றும் தாய் நல்ல ஆரோக்கியத்தை பெறலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS