பப்பாளி பழத்தின் அற்புதம்

பப்பாளி. இதன் பூர்வீகம் மெக்சிகோ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.
பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது.
… வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப் பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.
பப்பாளி
மருத்துவக் குணங்கள்:
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே பழுத்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் பழுத்ததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் ‘சி’ இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.
கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி.
அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து.
வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி.
முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்கவேண்டும்.இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும்
பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை!


பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.

கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.

முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும்.

எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.

மரம் முழுவதும் மருந்தாக இருக்கும் முருங்கையை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள மறவாதீர்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை

காலையில் எழுந்ததும் காபி குடிப்பதையே நாம் வழக்கமாக கொண்டிருப்போம்.

பொதுவாக, முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட்ட உணவின் மீதமோ, அதன் தாக்கமோ மறுநாள் காலை வரை நம் வயிற்றில் இருக்கும்.

மேலும் 'ஹைட்ரோகுளோரிக் அமிலம்’, காலை நேரத்தில்தான் சற்று அதிகமாகச் சுரக்கும். இதனுடன், முதல் நாள் சாப்பிட்ட உணவின் மீதம் சேரும்போது அசிடிட்டி பிரச்னை ஏற்படும்.

முறையான சில ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம், இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை

தண்ணீர்

ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும்.

தண்ணீரானது, அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து, வயிற்றைச் சீராக இயக்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீர் குடித்து வருவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாகக் குறைக்க முடியும்.

வெந்தயத் தண்ணீர்

வெந்தயத்தை, முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும்.

வெந்தயத்தை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதைச் சுற்றியுள்ள மேல் உறை செரிமானத்தைத் தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும்.

அருகம்புல் சாறு

அல்சருக்கு அருமருந்தே வெறும் வயிற்றில் பருகும் அருகம்புல் சாறுதான்.

அருகம்புல் தண்டு மட்டும்தான் மருத்துவக் குணமுடையது. இந்த இலையின் ஓரங்களில் உள்ள வெள்ளையான சுனைப் பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால், வயிற்றுப்போக்கைத் தூண்டிவிடும் அபாயம் கொண்டது.

வெள்ளைப்பூசணி சாறு

வெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடித்து வந்தால் தொப்பை, ஊளைச்சதை விரைவில் குறையும்.

கூடவே, இதனுடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடிப்பதற்கான முழுப் பலனும் கிடைக்கும்.

ஆனால், இது மிகவும் குளிர்ச்சி என்பதால் 7 மாதத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தவிர்க்கவேண்டியது அவசியம்.

நெல்லிக்காய்ச் சாறு

தினமும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதில் 'ஆன்டிஆக்சிடன்ட்ஸ்’ அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்றுநோய்களுக்கும் மிகவும் சிறந்தது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வசீகரிக்கும் வெள்ளை அழகு வேண்டுமா?

வெள்ளையாக இருக்க வேண்டும் என்று பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஆசைப்படுவார்கள்.
இதில், அதிகமாக ஆசைப்படுபவர்கள் யார் என்று பார்த்தால் பெண்கள்தான்.
கருமையாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக்க நிறைய பொருட்கள் நம் வீட்டு சமையலறையிலேயே உள்ளது.


அதில் முதன்மையானது தான் எலுமிச்சை. சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுப்பதோடு, கருமையாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக மாற்றலாம்.
1. எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதனை சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.
2. எலுமிச்சை சாற்றில் தயிர் சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
3. எலுமிச்சை சாற்றுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி 3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.
4. ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
5. பாலில் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை விட்டு நன்கு கலந்து, அந்த கலவையை முகத்தில் மற்றும் கருமையாக உள்ள இடங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், சரும வெள்ளையாக மாறும்.
6. வெள்ளையான சருமம் வேண்டுமானால், இரவில் படுக்கும் போது எலுமிச்சை சாற்றுடன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் முகத்தில் தடவ வேண்டும். இப்படி செய்து வர விரைவில் சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.
7. ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறைந்துவிடும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆகாயத்தாமரை!

வெப்பு தணித்து தாகம் குறைக்கும் !
நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறுசெடிகள். காம்பற்ற இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது. அந்தரத் தாமரை என்றும் குறிப்பிடுவதுண்டு. தமிழகமெங்கும் குளம் குட்டைகளில் வளர்வது. இலைகளே மருத்துவப் பயனுடையவை.
வெப்பு தணித்து தாகங் குறைக்கும் மருந்தாகவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகவும் பயன் படுத்தலாம்.
1. இலையை அரைத்துக் கரப்பான், தொழுநோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டிவர விரைவில் ஆறும். ஆசனவாயில் வைத்துக் கட்டிவர வெளிமூலம், ஆசனகுத்தல் ஆகியவை தீரும்.
2. 25 மி.லி. இலைச்சாற்றைச் சிறிது தேனுடன் காலை, மாலை 5 நாள்கள் கொடுக்க மார்பினுள் உண்டாகும் கிருமிக் கூடுகள் போகும். மேலும் நீர்ச்சுருக்கு, மூலம், சீதபேதி, இருமல் ஆகியவை தீரும்.
3. இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த ஆவியை 10 நிமிடம் ஆசனவாயில் பிடித்து வர மூல முளை அகலும்.
4. இலைச் சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் 1 லிட்டர் ஆகியவற்றைக் கலந்து சிறு தீயில் காய்ச்சி வண்டல் மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத் தூள், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி வகைக்கு 10 கிராம் பொடித்துப் போட்டு இறக்கி வடித்து (ஆகாயத் தாமரைத் தைலம்) வாரம் 1 முறை தலைக்கிட்டுக் குளித்து வர உட்சூடு, கண்ணெரிச்சல், மூல நோய் ஆகியவை தீரும்
வர்மக்கலை's photo.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காயத்திற்கு நல்ல எதிர்ப்பு சக்தி தரும் வெங்காயம்

காயம் என்பது உடல் என நமக்குத் தெரியும். இனி வெங்காயத்தை எந்தெந்த முறையில் பயன்படுத்தினால், என்னென்ன பயன்களை நாம் பெறலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.
1) நாலைந்து வெங்காயத்தை, தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட, பித்தம் குறையும். பித்த ஏப்பம் மறையும்.
2) சம அளவு வெங்காயச் சாறையும், வளர் பட்டைச் செடி இலைச் சாறையும் கலந்து, காதில் விட, காது வலி குறையும்.
3) வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துச் சூடாக்கி, இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும்.
4) வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டுத் தூளையும் இவற்றைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட, எல்லாவிதமான மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5) வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட, உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
6) வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாகச் சுட வைத்து, உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட, கட்டி உடனே பழுத்து உடையும்.
7) வெங்காயச் சாறு, சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். வெங்காயச் சாற்றை மோரில் விட்டுக் குடிக்க, இருமல் குறையும்.
8.) வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து, வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர, பல்வலி, ஈறுவலி குறையும்.
9) வெங்காயப்பூ, வெங்காயத்தைச் சமைத்து உண்ண, உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு குறையும்.
10) வெங்காயத்தை அவித்து, அதோடு தேன், கற்கண்டை சேர்த்துச் சாப்பிட, உடல் பலம் ஏறும்.
11) வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும்பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
12) வெங்காயத்தை வதக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
13) படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றைப் பூசிவர மறைந்துவிடும்.
14) திடீரென மூர்ச்சையானால், வெங்காயத்தைக் கசக்கி முகரவைத்தால், மூர்ச்சை தெளியும்.
15) வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால், சீதபேதி நிற்கும்.
16) வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க, நன்கு தூக்கம் வரும்.
17) பனைமரப் பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, சூடுபடுத்தி குடித்துவர, மேக நோய் நீங்கும்.
18) வெங்காயம், அவரை இலை இரண்டையும், சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட, மேகநோய் குறையும்.
19) வெங்காயம் குறைவான கொழுப்புச் சத்து கொண்டது. எனவே, குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20) பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும். பச்சை வெங்காயத்தைத் தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21) வெங்காயம் வயிற்றில் உள்ள சிறுகுடல் பாதையைச் சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்திற்கும் உதவுகிறது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அம்மாவாகும் பெண்களுக்கு

அம்மாவாகும் பெண்களுக்கு; அன்பான வழிகாட்டி!
அம்மா! எந்த ஒரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும் சொல் வேறு எதுவும் இருக்கமுடியாது.
கேட்டமாத்திரத்தில் உள்ளம் குளிரும். இதமான உணர்வு பொங்கி பிரவாகித்து, முகத்தில் சந்தோஷம் பூக்கும்.
பெண்குலத்துக்கென்றே இயற்கை அளித்திருக்கும் இணையற்றவரம் தாய்மை!
தனது குடும்ப வாரிசுக்கு உயிர்கொடுத்து, உருவமும் கொடுக்கும் பிரம்மாக்கள் பெண்கள்தானே!
ஆனாலும், இந்தப் பெருமையை அனுபவிக்கவிடாமல் பெண்களை பயமுறுத்துவதற்கென்றே ஏராளமான கட்டுக்கதைகள் உலா வருகின்றன.
இவற்றைக் கேட்டு தாய்மை என்பதையே திகிலான அனுபவமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள் பல பெண்கள்.
தாய்மை ரொம்ப சுலபமான விஷயமில்லைதான்.
கருவில் உதித்த சிசுவை பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து, உடலளவிலும் உள்ளத்து அளவிலும் பல மாற்றங்களை சந்தித்து, அதைப் பிரசவிக்கும்வரை அவள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் ஏராளம்தான்.
சொல்லப்போனால், பிரசவம் என்பதே ஒரு பெண்ணுக்கு மறுஜென்மம் போன்றதுதான்.
ஆனாலும், தாய்மைப்பேறு என்பது பயப்பட வேண்டிய விஷயம் இல்லை.
ஒவ்வொரு பெண்ணும் அனுபவித்து மகிழவேண்டிய அற்புதமான விஷயம்!
பத்து மாதங்கள் பட்ட கஷ்டமெல்லாம் பிரசவித்த நொடியில், தனது குலக்கொடியை பார்த்தமாத்திரத்தில் பஞ்சாகப் பறந்துவிடுமே!
கருத்தரித்த நாளில் இருந்து, பிரசவிக்கும் நாள் வரை இளம்தாய்களுக்கு தோன்றும் சந்தேகங்கள் ஏராளம்.
அம்மாவிடம், மாமியாரிடம், அண்டை அயலாரிடம் கேட்டுத் தெளிவுபெற்றாலும், விடை சிக்காத எத்தனையோ கேள்விகள் அவர்களின் உள்ளத்தை அரித்துக் கொண்டிருக்கும்.
அந்தக் கேள்விகள் அனைத்துக்கும் முழுமையான விளக்கங்கள் தருவதும், தாய்மைப் பேறு பற்றிய கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும்தான் இந்த இணைப்பின் நோக்கம்.
உங்கள் சார்பாக நாங்கள் கேள்விகளை தொடுக்க, பத்து மாத பராமரிப்பு பற்றி விளக்கங்களும் டிப்ஸ்களும் தந்தார்கள் மகப்பேறு மருத்துவத்தில் மிக நீண்டகால அனுபவம் பெற்ற டாக்டர் ஞானசெளந்தரி மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத் ஆகியோர்.
வாருங்கள்.. தாய்மைப்பேறின் மகத்துவத்தை அறிவோம்!
கருத்தரித்திருப்பதை எப்படி உறுதிப்படுத்திக் கொள்வது?
மாதவிலக்கு தள்ளிப் போவது கர்ப்பத்துக்கான முதல் அறிகுறி.
பிறகு, மருத்துவரை அணுகி சிறுநீர்ப் பரிசோதனை மூலம் அது கர்ப்பம்தானா என்பதை உறுதிசெய்துகொள்ளலாம்.
முன்புபோல 40, 45 நாட்களெல்லாம் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி, விலக்காக வேண்டிய நாளிலிருந்து இரண்டாவது நாளே சிறுநீர்ப் பரிசோதனை மூலம் கர்ப்பமா இல்லையா என்று சொல்லும் அளவுக்கு மருத்துவம் இப்போது முன்னேறியுள்ளது.
எந்த வயதில் கருத்தரித்தால் தாய்க்கும் சேய்க்கும் நலம்?
இருபத்தோரு வயதிலிருந்து முப்பத்தைந்து வயதுவரைதான் கருவுறுதலுக்கான சரியான காலகட்டம்.
அப்போதுதான் கருப்பை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்கும்.
கருவுறுதலுக்குக் கைகொடுக்கும் வகையில், மாதாமாதம் ஆரோக்கியமான சினைமுட்டை சீறிவருவதும் இந்த வயதில்தான்.
முப்பத்தைந்து வயதுக்குப் பிறகு கருத்தரித்தல் என்பது தாய்க்கும் அசெளகரியம். குழந்தையும் உடல் கோளாறுகளோடு பிறக்க அதிக வாய்ப்பிருக்கிறது.
மாதவிலக்குக்குப் பிறகு எந்தெந்த நாட்களில் தாம்பத்ய உறவு வைத்துக் கொண்டால் கரு தங்கும்?
மாதவிலக்கு ஆன தினத்திலிருந்து பதினான்கு அல்லது பதினைந்தாவது நாள்தான் அந்த சுபயோகத் திருநாள்.
அப்பொழுதுதான் சினைப் பையிலிருந்து சினை முட்டை வெடித்து வெளியே வரும்.
மாதத்துக்கு ஒரு முறை வெளிவரும் இந்த சினை முட்டை ஒரே ஒரு நாள்தான் உயிரோடு இருக்கும்.
அதற்குள் தாம்பத்ய உறவு நடந்தால்தான் பெண்ணின் வஜினாவில் சேரும் உயிரணு, சினை முட்டையோடு சேர்ந்து கருவாகும்.
இதில் ஆச்சரியமான விஷயம்.. சினைமுட்டை வெடிக்கும் அந்த நாளில் பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கும். அதை வைத்தும் இன்றுதான் ‘அந்த’ நாள் என்பதை கண்டுபிடிக்கலாம்.
ஆணும் பெண்ணும் உடலால் இணையும் உறவுதான் கருத்தரித்தலின் முதல் நிலை. ஓ.கே. அதன்பிறகு என்ன நடக்கிறது?
உடல் உறவின்போது பெண்ணின் வஜினாவை அடையும் ஆணின் விந்துவில் கோடிக்கணக்கான உயிரணுக்கள் இருக்கும்.
அவை அனைத்தும் பெண்ணின் சினை முட்டையைத் தொட்டுவிட வேண்டும் என்று முட்டி மோதினாலும், கடைசியில் வெற்றி வாய்ப்பு ஒரே ஒரு உயிரணுவுக்குத்தான்.
உடனே, மற்ற உயிரணுக்கள் உள்ளே நுழைய முடியாதபடி சினை முட்டையின் சவ்வுப் பகுதி இறுகிவிடும்.
இப்போது வெற்றி பெற்ற உயிரணுவும், சினை முட்டையில் இருக்கும் உட்கருவும் கைகோர்க்க, பெண் கர்ப்பிணி ஆகிறாள்.
பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பது எப்போது, எப்படி தீர்மானிக்கப்படுகிறது?
பெண்குழந்தை பெற்றாள் என்பதற்காகவே மனைவியை வெறுக்கும் கொடிய மனம்கொண்ட கணவர்களுக்கு இந்த பதில் அதிர்ச்சியைத் தரும்.
ஆமாம், குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தீர்மானிப்பதே கணவன்தான்.
சினைமுட்டையின் உள்ளே செல்லும் ஆணின் உயிரணுவில் உள்ள குரோமோசோம்தான் அதை தீர்மானிக்கிறது.. அதுவும்கூட உயிரணுவும் சினைமுட்டையும் சேரும் அந்த நொடியிலேயே!
கர்ப்பம் என்றதும் உடனே தலை காட்டும் மசக்கை எதனால் ஏற்படுகிறது?
புத்தம்புதிதாக ஒரு உயிரே உருவாகிறதே.. இதுபோன்ற அறிகுறிகள்கூட இல்லாவிட்டால் சுவாரஸ்யம் இருக்காதே!
இந்தக் காலகட்டத்தில் சில ஹார்மோன்கள் சுரக்கும். இந்தப் புது மாற்றங்களுக்கு உடல் பழக்கப் படும்வரை, வாந்தியும் மயக்கமும் ஏற்படும். இதைத்தான் மசக்கை என்கிறோம்.
கரு, கருப்பையில் தங்கி வளர ஆரம்பித்ததுமே மசக்கை தொடங்கிவிடும். பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களில் தான் இது அதிகமாக இருக்கும்.
எதையும் சாப்பிடப் பிடிக்காது. காபி, டீ, ரசம்.. என்று அதுவரை ‘கமகமக்குதே’ என்று சொல்ல வைத்த பல வாசனைகளும் இந்த சமயத்தில் வயிற்றைப் புரட்ட வைக்கும். தொட்டதற்கெல்லாம் வாந்தி வரும்.
அதற்காக வயிற்றை சும்மா காய விடக்கூடாது. அடிக்கடி ஜூஸ் வகையறாக்களை குடிக்கவேண்டும்.
வாய்க்கு என்ன பிடிக்கிறதோ அவற்றை கொஞ்சம் கொஞ்சமாகவாவது அடிக்கடி சாப்பிடவேண்டும்.
இந்தச் சமயத்தில் புளிப்புச் சுவையுள்ளவற்றை சாப்பிட நாக்கு ஏங்கும்.
அதனால்தான் மசக்கை காலங்களில் மாங்காய், புளியங்காய் போன்றவற்றைக் கூசாமல் சாப்பிடுகின்றனர்.
அதில் தவறில்லை. புளிப்புச் சுவை குமட்டலை தடுக்கும் என்பதால் ஒரு வகையில் அது மருந்தாகவும் பயன்படுகிறது.
டாக்டர்களின் ஆலோசனையோடு, வாந்தியைக் கட்டுப்படுத்த உள்ள மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
‘எதற்கும் அடங்க மாட்டேன்’ என்பதுபோல ஒரு துளி உணவு உள்ளே போனதும் உடனே வாந்தியாக வெளியே கொப்பளித்தால், மருத்துவமனையில் சேர்த்து ட்ரிப்ஸ் ஏற்றுவதைத் தவிர வேறுவழியே இல்லை.
இந்த காலகட்டத்தில் அதிக காய்ச்சலோ, சிறுநீர்த் தொற்று போன்ற தொந்தரவோ, ரத்தப்போக்கோ இருந்தால் உடனே மருத்துவரைப் பார்க்கவேண்டும்.
இன்னொரு விஷயம்.. சாதாரண மயக்கம், வாந்திதான் மசக்கை. அடிக்கடி தலைசுற்றல் வந்தாலோ, எழுந்துகொள்ள முடியாத அளவுக்கு மயக்கம் வந்தாலோ அலட்சியம் கூடாது.
கருப்பைக்கு பதில், கருக்குழாயில் கரு வளர்ந்தால் இதுபோல நேர வாய்ப்பிருக்கிறது.
இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக, மசக்கைக்கான எந்த அறிகுறியும் இல்லாத கர்ப்பிணிகளும் நிறையபேர் உண்டு.
அதிகமாக வாந்தி எடுத்தால், குழந்தை தலை நிறைய முடியோடு பிறக்கும் என்கிறார்களே.. உண்மையா?
கர்ப்ப காலம் பற்றி சொல்லப்படும் எத்தனையோ பொய்களில் இதுவும் ஒன்று.
வாந்தி பற்றி நினைக்காமல், குழந்தையின் முடி அழகு குறித்த கற்பனையில் தாயின் கவனம் திசைதிரும்பும் என்பதற்காக இப்படிச் சொல்கிறார்களோ என்னவோ..
ஆனால், குழந்தையின் முடிக்கும் தாயின் வாந்திக்கும் எந்த தொடர்பும் இல்லை.
வாந்தி, மயக்கம், தலை சுற்றல் வழக்கமானதுதான் என்றாலும், விடாமல் துரத்தும் அதிகபட்ச வாந்தி என்றால் கருவில் இருப்பது இரட்டைக் குழந்தைகளாகவும் இருக்கலாம்!
‘முத்துப்பிள்ளை கர்ப்பம்’ என்றாலும் இப்படி அதிகமாக வயிறு புரட்டும்!
முத்துப்பிள்ளை கர்ப்பமா? அப்படியென்றால்?
கருப்பையில் கரு ஒரேயொரு உருண்டையாக திரண்டிருக்காமல் குட்டிக் குட்டி உருண்டைகளாக மாறி, ஒன்றோடோன்று ஒட்டியபடி கருப்பை முழுக்க நிறைந்திருப்பதுதான் ‘முத்துப் பிள்ளை’ கர்ப்பம்.
இது குழந்தையாக உருவெடுக்க முடியாது. இதனை ஸ்கேன் மூலம் கண்டுபிடித்து சுத்தம் செய்துவிடலாம்.
‘ஃபெலோப்பியன் குழாய் கர்ப்பம்’ என்கிறார்களே.. அது என்ன? எதனால் ஏற்படுகிறது?
முதலில் ஒரேயொரு முழு ‘செல்’லாக இருக்கும் கரு, நாள்தோறும் வளர்ந்து, இரண்டு இரண்டாக பிரியும். அதேநேரம், ஃபெலோப்பியன் குழாய் வழியாக அவை மெல்ல மெல்ல கருப்பையை நோக்கி நகரும்.
கடைசியில் கருப்பையில் போய் அது உட்காரும்போது கிட்டத்தட்ட நூறு செல்களாக பிரிந்திருக்கும்! ஆரோக்கியமான கர்ப்பம் இப்படியிருக்கும்.
ஆனால் சில சமயங்களில், கரு கருப்பையை நோக்கி நகராமல், ஃபெலோப்பியன் குழாயிலேயே வளர ஆரம்பிக்கும். இதைத் தான் ‘ஃபெலோப்பியன் குழாய் கர்ப்பம்’ என்கிறார்கள்.
ஃபெலோப்பியன் குழாயில் நோய் தொற்று இருந்தால்தான் இப்படி ஆகும். பொதுவாக கரு தானாக நகராது. ஃபெலோப்பியன் குழாயின் தசைகள் சுருங்கி விரிந்து, அதன் மூலம்தான் கரு நகர்த்தப்படுகிறது.
நோய் தொற்று காரணமாக சேதமடைந்த ஃபெலோப்பியன் குழாய் என்றால் சுருங்கி விரியாது. அல்லது ஃபெலோப்பியன் குழாய் சுருங்கி கருவின் இயக்கத்தை தடுக்கலாம்.
சில பெண்களுக்கு ஃபெலோப்பியன் குழாயின் அமைப்பே வளைந்து நெளிந்து இருக்கும். இப்படிப்பட்ட குழாய்களால் ‘கரு’வின் இயக்கம் நிச்சயம் தடைபடும்.
அதுமட்டுமல்ல, இதனால் உயிருக்கே ஆபத்து வரலாம். ஊசி நுழையும் அளவுள்ள மெல்லிய ஃபெலோப்பியன் குழாயில் கரு வளர ஆரம்பித்தால் என்னாகும்?
முடிந்த வரை தாங்கி, முடியாத நிலை வரும்போது வெடித்துவிடும். உடனே கடுமையான வயிற்றுவலியும், ரத்தப்போக்கும் ஏற்படும். உடனடியாக டாக்டரை பார்க்க வேண்டிய விஷயமிது.
கர்ப்பம் என்று உறுதியானதுமே டாக்டரிடம் அடிக்கடி பரிசோதனை செய்து கொண்டால் இத்தகைய ஆபத்துக்களை சந்திக்காமலே தவிர்க்கலாம்.
மசக்கைக்கு பின் வேறு ஏதாவது உடல்ரீதியாக பிரச்னை வருமா?
கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்னை மலச்சிக்கல். அப்போது சிரமப்பட்டு மலம் கழிக்கக்கூடாது.
நிறைய கீரை சாப்பிடுவதும், பழங்கள் சாப்பிடுவதும்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு.
பழச்சாறு சாப்பிடுவதைவிட பழமாக சாப்பிடுவது நல்லது. அதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும்.
பழங்களில், பப்பாளியையும் அன்னாசியையும் தவிர்ப்பது நல்லது.
இந்தப் பழங்களால் கரு கலைந்துவிடும் என்ற கருத்து விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் படவில்லை என்றாலும், மருத்துவர்கள் இவற்றை பரிந்துரைப்பது இல்லை.
15 வாரங்கள் ஆனதும் நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும்.
கால்சியம் சத்து நிறைய தேவைப்படுகிறது என்பதால், கர்ப்பிணிகள் ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு லிட்டர் பால் அருந்த வேண்டும்.
கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இருந்தாலும், மாத்திரையைவிட பால் நல்லது. அதில் பால்புரதம், கால்சியம், தேவையான தாது உப்புகள் இருக்கின்றன.
தயிர், பால்பொருள்கள், கொண்டக்கடலை, பட்டாணி சாப்பிடலாம்.
பொதுவாக, எண்ணெய், அதிக மசாலா, காரம் இல்லாமல் உணவு இருப்பது நலம்.
ஊறுகாய் சாப்பிடவேண்டும் போல் இருந்தாலும் அதில் இருக்கும் அதிகப்படியான உப்பும் எண்ணெயும் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால் தவிர்ப்பது நல்லது.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிக உப்பு ஆகாது.
சிலருக்கு இந்த சமயத்தில் கால் வீங்கும். வீக்கம் இருப்பின் சிறிது உயரமான ஸ்டூலில் கால்களைத் தூக்கி வைத்துக் கொள்ளலாம்.
இதெல்லாம் கர்ப்பிணிகளுக்கு வரும் சாதாரண பிரச்னைதான். பயப்பட வேண்டாம்.
இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி இரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
ஆண் குழந்தை என்றால் சீக்கிரமே பிறந்துவிடும் என்கிறார்களே, உண்மையா?
‘பத்து மாத பந்தம்’ என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும் கருப்பை ஒரு கருவைச் சுமப்பது, மொத்தம் ஒன்பது மாதம் ஒரு வாரம்தான் (இதுகூட கரு உருவாவதற்கு முன்பு மாதவிலக்கு ஆன நாளிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும் கணக்குதான்).
இதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று எந்த வித்தியாசமும் கிடையாது. எந்தப் பாகுபாடும் இல்லாமல் இயற்கை இரு வகையான குழந்தைகளையும் சமமான நாட்கள்தான் தாயின் வயிற்றில் இருக்கச் செய்கிறது.
‘ட்ரைமெஸ்டர்’ என்கிறார்களே.. அதைப்பற்றி கொஞ்சம் விளக்குங்களேன்..
பத்து மாதம் என்று பொதுவாக சொன்னாலும் கர்ப்ப காலம் மூன்று மூன்று மாதங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் ட்ரைமெஸ்டர் (Trimester) என்கிறோம்.
முதல் மூன்று மாதங்கள் வரை ‘முதல் ட்ரைமெஸ்டர்’. நான்காவது மாதத்திலிருந்து ஆறாவது மாதம் வரை இரண்டாவது ட்ரைமெஸ்டர். ஏழாவது மாதத்திலிருந்து குழந்தை பிறக்கும்வரை ‘மூன்றாவது ட்ரைமெஸ்டர்!’
முதல் ட்ரைமெஸ்டரில் மசக்கையும், அதனால் உண்டாகும் சோர்வும்தான் முக்கியமான விஷயம். பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களில் மசக்கை நின்றுவிடும். வெகு சிலருக்குத்தான் அது மேலும் தொடரும். முதல் ட்ரைமெஸ்டரில் டாக்டரிடம் செக்கப் செய்துகொண்டால், பொய் கர்ப்பம், முத்துப்பிள்ளை கர்ப்பம் போன்றவற்றை தடுத்துவிடலாம்.
முதல் ட்ரைமெஸ்டரில் கரு, கருப்பையில் அழுத்தமாக தங்கியிருக்காது என்பதால் அதிர்வுகள் கொஞ்சம் அதிகரித்தாலும் கரு கலைந்துவிட வாய்ப்புகள் அதிகம். அதனால் இந்த காலகட்டத்தில் வெகுதூரம் பயணம் செய்வது என்பது கூடவே கூடாது.
சரி… இந்த ட்ரைமெஸ்டர் காலங்களில் கருவின் வளர்ச்சி எப்படியிருக்கிறது?
முதல் மாதத்திலேயே கருவுக்கு நரம்பு மண்டலம் உருவாகத் தொடங்கி விடும்.
நாற்பது நாட்களுக்குள் முதுகுத் தண்டு, இதயம் ஆகியவை ஓரளவு உருவாகி, கருவுக்கான ரத்த ஓட்டமும் ஆரம்பித்துவிடுகிறது.
கருவின் ரத்த ஓட்டத்தை தாயோடு இணைக்கும் ரத்தக் குழாயின் மற்றொரு பெயர்தான் தொப்புள்கொடி.
இரண்டாவது மாதத்தில் கருவின் இதயம் மெதுவாகத் துடிக்கவே துவங்கிவிடும்.
கை, கால்களும் காதுகளும் வடிவம் பெறுவது இப்போதுதான்.
மூன்றாவது மாதம், முகத்தின் அங்கங்கள் முறையாக வளர ஆரம்பிக்கும்.
இரண்டாவது ட்ரைமெஸ்டர் தொடக்கத்தில் அதாவது, நான்காவது மாதத்தில் வயிறு சற்றே மேடிடத் தொடங்கும்.
வயிற்றின் தசைகளும் தோலும், கருவின் வளர்ச்சிக்கு ஏற்ற மாதிரி விரிவடையும்.
(பிரசவத்துக்கு பிறகு, விரிவடைந்த தோல் மறுபடியும் சுருங்கிவிடும். இப்படி எலாஸ்டிக் போல சுருங்கி விரிவதால்தான் குழந்தை பெற்றுக் கொண்ட பெண் களுக்கு அடிவயிற்றில் வரிவரியாக கோடுகள் விழுகின்றன.
கருவுற்ற நான்காம் மாதத்திலிருந்து விட்டமின் ஈ எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற ஏதேனும் ஒன்றை அடிவயிறு முழுக்கத் தடவி, அரைமணி நேரம் ஊற விட்டு, பிறகு குளித்தால், வயிற்றில் வரிகள் விழாது.
சமையலுக்கு உபயோகிக்கும் மஞ்சள்தூளை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் கலந்து தடவினாலும் நல்ல பலன் இருக்கும்.
சில பெண்களுக்கு மார்பகம்கூட பெரிதாகி பிறகு சிறிதாகும். அதனால் மார்பகங்களிலும் இதேபோன்று வரிகள் விழலாம். அதற்கும் மேற்கூறிய ஆயில் மஸாஜ் பலனளிக்கும்)
தொல்லைகள் அற்ற கர்ப்ப காலம் என்றால் அது இரண்டாவது ட்ரைமெஸ்டர்தான்.
மசக்கை நீங்கி, நன்றாக சாப்பிட முடியும். உற்சாகமாக சுழல வைக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் நன்றாக சுரப்பதால் இந்த ட்ரைமெஸ்டரில் பெண்களின் முகம் பளீரென்று புதுப்பொலிவுடன் பிரகாசிக்கும்!
குழந்தை ஆண், பெண் என்பதை தீர்மானிக்கும் பிரத்யேக உறுப்புகள் வளர ஆரம்பிப்பது இந்த நான்காம் மாதத்தில்தான்!
ஐந்தாவது மாதத்தில், கிட்டத்தட்ட அரை குழந்தையாகிவிட்ட கரு, அசைந்து தன்னைச் சுற்றியுள்ள பனிக்குட நீரில் சுகமாக நீச்சலடிக்க ஆரம்பிக்கும்.
ஐந்தாவது மாதத்திற்கு மேல் கருவின் அதாவது குழந்தையின் உருவ, உள் உறுப்புகள் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். புருவ முடி வளர்ச்சி முதற்கொண்டு முகம் முழுமையாக உருப்பெறும்.
ஆறாவது மாதத்தில் அந்த குழந்தைக்கு மட்டுமேயான தனித்தன்மையாக கை விரல்களில் ரேகைகள் அமையும்.
மூன்றாவது ட்ரைமெஸ்டரின் தொடக்கத்தில் அதாவது, ஏழாம் மாதத்தில் வயிறு பெருத்து விடுவதால் சுலபமாக உட்கார்ந்து எழுந்துகொள்ள முடியாது.
மூச்சு வாங்கும். படுத்து எழுவது சிரமமாகத் தோன்றும். இடுப்பு, முதுகில் அவ்வப்போது வலிப்பது போல் இருக்கும். நேரத்துக்கு சாப்பிட்டு, வாக்கிங் போய்வருவது நல்லது.
எட்டாவது மாதத்தில் லேசான அசதி இருக்கும்தான். ஆனால், கை கால் வலி, தலை சுற்றல், கண் இருட்டிக்கொண்டு வருவது மாதிரி பிரச்னைகள் இருந்தால், டாக்டரிடம் போகவேண்டும்.
ரத்தப்போக்கு இருந்தாலோ, நீர் இறங்கிக்கொண்டே இருப்பது போலிருந்தாலோ, வலி அதிகம் இருந்தாலோ உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது.
மூன்றாவது ட்ரைமெஸ்டருக்கு முன்பே, அதாவது ஏழாவது மாதத்துக்கு முன்பே கருவிலிருக்கும் குழந்தை வெளியேறினால் அது ‘அபார்ஷன்’.
ஏழு மாதத்துக்குப் பிறகு, தவிர்க்க முடியாத நிலையில் வெளியேறினால் அந்தக் குழந்தையை இன்குபேட்டர் மாதிரி இயந்திரங்களில் வைத்து காப்பாற்றலாம்.
ஆனால் அந்தக் குழந்தைக்கு மூச்சுத் திணறல் போன்ற நுரையீரல் தொடர்பான சிக்கல்கள் வர வாய்ப்பு அதிகம்.
குழந்தை வெளியே வர ஏதுவாக ஒன்பதாவது மாதத்தில், தலைப் பாகம் கீழே இருக்கும்படி பொசிஷன் மாறுகிறது!
குழந்தையின் அசைவுகள் பற்றி?
ஐந்தாவது மாதத்திலேயே குழந்தையின் அசைவை நன்றாக உணரமுடியும்.
அப்போதிருந்து ஏழாவது மாதம் வரை பனிக்குட நீரில் விஸ்தாரமாக நீச்சலடிக்கும் குழந்தை, கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதால் பின்னாளில் இடநெருக்கடி காரணமாக சும்மா கை, கால்களை மட்டும் அசைக்கும்.
இதனால், ஐந்தாவது மாதத்தில் குழந்தை உதைத்ததற்கும் இப்போது உதைப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.
சிலர் இதனை புரிந்து கொள்ளாமல், ‘குழந்தை அசைவு அவ்வளவாக இல்லை’ என்று கவலையோடு வருவார்கள்.
அதிலும் பிரசவ காலம் நெருங்க நெருங்க இந்தப் புகார்கள் அதிகரிக்கும்!
ஒன்பதாம் மாதத்தில் குழந்தையின் துடிப்பு குறைவாக இருக்கும்.
கடைசி மாதத்தில் ஒரு மணி நேரத்துக்குக் குறைந்தபட்சம் ஐந்து முறை துடித்தாலே போதும்.
அதுவும் இல்லை என்று தோன்றினால், சிறிதுநேரம் இடது புறமாக ஒருக்களித்துப் படுத்து கணக்கிட்டுப் பார்க்கலாம்.
அப்போதும் குறைவாக இருந்தால் டாக்டரிடம் செல்வது நல்லது. ஒருவேளை குழந்தையை தொப்புள் கொடி சுத்தியிருக்கலாம்.
கர்ப்ப காலத்தில் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ளலாமா?
கரு உருவான முதல் மூன்று மாதங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று முன்பே சொல்லியிருப்பது இதற்கும் பொருந்தும்.
கரு, கருப்பையில் சரியாகப் பொருந்தியிருக்காது என்பதால் அந்த நேரத்தில் அபார்ஷன் ஏற்பட வாய்ப்புகள் நிறைய.
செக்ஸ் வைத்துக் கொள்வ தால்கூட சில சமயங்களில் அபார்ஷன் ஆகலாம். அதனால் முதல் மூன்று மாதங்களில் அந்த உறவு வேண்டாமே.
அதேபோல், ஒன்பதாவது மாதத்திலும் தாம்பத்ய உறவைத் தவிர்த்துவிடுங்கள்.
‘இன்பெக்ஷன்’ ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாதே என்பதற்காகத்தான் இந்த அட்வைஸ்!
அப்படியானால் மற்ற ஐந்து மாதங்களில் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளலாமா?
எந்த பிரச்னையும் இல்லாமல் நார்மலான கர்ப்பமுற்றிருக்கும் பெண்கள் என்றால் அதிக அலட்டல் இல்லாமல் உறவு வைத்துக்கொள்ளலாம்.
கருப்பையில் கரு தங்காமல் அடிக்கடி அபார்ஷன் ஏற்படும் பெண்கள், கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டரால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள பெண்கள் ஆகியோருக்கு இது பொருந்தாது.
அப்படிப்பட்ட பெண்கள், பிரசவம் வரையிலுமே தாம்பத்ய உறவைத் தவிர்ப்பது நல்லது.
கருவைச் சுமந்திருக்கும் பெண்கள் மல்லாக்கப் படுத்தால் கருவை நஞ்சுக்கொடி சுற்றிக்கொள்ளும் என்கிறார்களே; உண்மையா? எப்படி படுக்க வேண்டும்?
மல்லாந்த நிலையில் படுக்கக்கூடாது என்பது சரிதான். ஆனால், அதற்காக கூறப்படும் காரணம்தான் சரியல்ல.
மல்லாந்த நிலையில் படுத்தால், கனமான கருப்பை இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களை அழுத்தும்.
இதயத்துக்கு தேவையான ரத்தம் போய்ச் சேராமல் ‘பி.பி’ இறங்கும். அதனால் தலைசுற்றி மயக்கம் வரும்.
இடது பக்கமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்க்கும், சேய்க்கும் நலம்.
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்குமா?
குழந்தைக்கு நிறம் தரும் சக்தியெல்லாம் குங்குமப் பூவிடம் இல்லை. இதுதான் உண்மை.
சிலருக்கு பாலின் வாடை பிடிக்காது. மசக்கை சமயத்தில் அது இன்னும் அதிகமாக வயிற்றைப் புரட்டும்.
அதனால்தான் மாறுதலான மணம் மற்றும் சுவைக்காக குங்குமப்பூவை பாலில் கரைத்துக் குடிக்கும் பழக்கம் வந்தது.
அதையும் குடிக்கமறுக்கும் பெண்களுக்கு என்ன செய்வது? அதனால்தான் குழந்தையின் கலர் என்ற சொக்கவைக்கும் வார்த்தையைச் சொல்லி கொடுத்திருக்கிறார்கள்.
குழந்தைகளின் நிறத்துக்கு காரணம் பரம்பரையாக வரும் மரபணுக்கள்தான்!
சாப்பாட்டு விஷயத்தைப் பொறுத்தவரைக்கும் கர்ப்பிணிகள் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?
கர்ப்பிணிகள் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்க வேண்டியது சாப்பாட்டு விஷயத்தில்தான். சும்மா இல்லை. இரண்டு உயிர்களுக்கும் சேர்த்து சாப்பிட்டாக வேண்டுமே.
கால்சியமும் இரும்புச் சத்தும் மிகமிக அவசியம். தினமும் ஒரு வகை கீரை, பருப்பு, பால், தயிர் இவை தவறாமல் இருக்க வேண்டும்.
தினம் ஒரு ஆப்பிள், வாழைப்பழம் சாப்பிடலாம். இதனால் மலச்சிக்கல் வராமல் இருக்கும்.
அசைவம் சாப்பிடுபவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு முட்டை, சிக்கன் சூப் சாப்பிடலாம்.
மட்டன், சிக்கன், மீன் வகைகளை சாப்பிடுவதில் தவறில்லை, ஆனால் இரவில் வேண்டாம்.
சாப்பாட்டில் மட்டுமல்ல.. குடிநீர் விஷயத்திலும் கவனம் தேவை. சுத்தமான குடிநீர் என்றாலும் ஒரு முறை நன்றாக காய்ச்சி வடிகட்டி குடிப்பது நல்லது. இல்லாவிட்டால் அசுத்தமான நீரால் மஞ்சள் காமாலை போன்ற பிரச்னைகள் வரலாம்.
சாப்பிட்டதும் படுக்கக்கூடாது. அப்படிப் படுத்தால் நெஞ்சை அடைப்பதுபோல் அவஸ்தையாக இருக்கும்.
இரண்டு பேருக்குச் சாப்பிட வேண்டுமே என்று ஊட்டமாகச் சாப்பிட்டு அதனால் உடல்எடை அதிகரித்தால்?
அதிலும் கவனமாக இருக்க வேண்டும். நல்ல உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடும் அதே சமயம் முடிந்த அளவுக்கு வேலைகள் செய்தும், நடை பயிற்சியின் மூலமும் உடல் எடை அதிகரித்துவிடாதபடி பார்த்துக் 
கொள்ளலாம். 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS