RSS

WOOD APPLE - விளாம்பழம்

பழங்களில் பலவகை உண்டு, சில பழங்கள் ருசியை மட்டும் தரும், ஆனால் அதில் சத்து ஏதும் இருக்காது.

சிலவற்றில் உடலுக்கு சக்தி அளிக்கும் ஆற்றல் அதிகம் இருக்கும், அதுபோல் ஒரு பழம் தான் விளாம்பழம்.

விளாம்பழத்தை ஆங்கிலத்தில் WOOD APPLE என்று சொல்வார்கள். இதில் வைட்டமின்களும் தாதுபொருட்களும் அதிகம் உள்ளன.

ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த பழம் அதிகம் உபயோகப்படுகிறது. பழம் மட்டுமல்லாது இதன் வேரும், இலைகளும் கூட மருத்துவ குணங்கள் நிறைந்தவை.

இதன் இலைகளில் சபோரின், வைடெக்ஸின் காணப்படுகின்றன. பட்டையில் பெரோநோன், பெரோநோலைடு, டேரைகைன் போன்றவை காணப்படுகின்றன.

வலுவான எலும்புகளுக்கு

இதில் இரும்புசத்தும், சுண்ணாம்புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.

எனவே இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து எலும்புகள் வலுவடையும்.

ஜீரணமாக்கும் மருந்து

நீங்கள் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகவில்லை என்றால் ஒரு விளாம்பழத்தை சாப்பிடுங்கள்.

இதை தினந்தோறும் சாப்பிடுவதன் மூலம் செரிமான பிரச்சனை இருக்காது.

மேலும் சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட்டால், ஜீரண சக்தி அதிகரிக்கும்.

பித்தத்தை விரட்டும்

பித்தத்தால் வரும் தலைவலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வியர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம்பழம் குணப்படுத்தும்.

தினசரி ஒரு பழம் விதம் தொடர்ந்து 21 தினங்களுக்கு இப்பழத்தை சாப்பிட்டு வர எந்த விதமான பித்த வியாதிகளும் குணமடையும்.

ஆரோக்கியமான இதயத்திற்கு

இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை எவ்வித பிரச்சனையும் இன்றி இயங்க செய்வது விளாம்பழம்.

மேலும் இதயத்தை பாதுகாக்க வைக்கும் இப்பழம், மனசந்தோஷத்தையும், மனதைரியத்தையும் அளிக்கும்.

உறுதியான பற்களுக்கு

முதியவர்களுக்கு ஒரு வயதை கடந்து விட்டால் பற்கள் கொட்டிப்போவது இயல்பு.

ஆனால் விளாம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பல் செட்டை தேடி செல்ல வாய்ப்பில்லை.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பொடுகு தொல்லையா....

பொடுகு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் தலையில் போதிய எண்ணெய் இல்லாததால் தான்.
பொடுகு வந்து விட்டால் கூந்தல் உதிர்வது அதிகமாவதுடன், சருமத்திற்கும் பரவி விடும். எனவே உடனடியாக பொடுகை முற்றிலும் நீக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து தலையில் தடவி மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எலுமிச்சை சாறு
தலையில் இருந்து செதில் செதிலாக வருவதை தவிர்க்க வேண்டுமெனில் எலுமிச்சை தான் சிறந்த பொருள்.
அதற்கு எலுமிச்சை சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து குளித்து பின் ஸ்கால்ப்பில் சிறிது எண்ணெய் தடவினால், ஸ்கால்ப் வறட்சியடைவதை தவிர்க்கலாம்.
தேங்காய் பால்
தேங்காய் பாலும் பொடுகில் இருந்து நிவாரணம் தரக்கூடியவையே. அதற்கு தேங்காய் பாலை தலையில் தடவி மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.
கற்றாழை
கற்றாழை ஜெல் சருமத்திற்கு மட்டும் நல்ல பலனைத் தருவதில்லை, கூந்தலுக்கும் தான். அதிலும் கற்றாழையின் ஜெல்லை இரவில் படுக்கும் போது ஸ்கால்ப்பில் தடவி, கவர் கொண்டு மூடி, காலையில் எழுந்து குளிர்ச்சியான நீரில் அலச வேண்டும். இதனால் கற்றாழையில் உள்ள ஈரப்பதமானது, தலையில் இறங்கி வறட்சியைத் தடுக்கும்.
நல்லெண்ணெய்
வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு மசாஜ் செய்து குளித்து வந்தால், பொடுகு நீங்குவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக வளரும்.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலுக்கும் ஸ்கால்ப்பில் இருந்து வெளிவரும் செதிலை போக்கும் தன்மை உள்ளது. ஆகவே ஆலிவ் ஆயிலை தலையில் தடவி மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
வெங்காயம்
வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
தயிர்
தயிரில் சிறிது மிளகு தூள் சேர்த்து கலந்து, உச்சந்தலையில் படும்படி தேய்த்து, 20-30 நிமிடம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளித்தால் பொடுகு படிப்படியாக நீங்கும்.
பச்சை பயறு மாவு
பச்சை பயறு மாவில் தயிர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, ஸ்கால்ப்பில் படும்படியாக தேய்த்து ஊற வைத்து குளித்தால் பொடுகு மறைந்துவிடும்.
வசம்பு
வசம்பை நன்கு பொடி செய்து அந்த பொடியை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வைத்து, அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
மருதாணி இலை
மருதாணி இலையை அரைத்து அதில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தலைக்கு தடவி குளிக்க வேண்டும். இதனை வாரம் ஒரு முறை செய்து வந்தால், பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, நரைமுடியின் நிறமும் மாறும்.
முட்டை
முட்டையின் வெள்ளைக்கருவில் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கொசுக்களினால் ஏற்படும் நோய்கள் அதற்கான டிப்ஸ்...


மலேரியா: காய்ச்சல், நடுக்கம், தசை வலி மற்றும் சோர்வு ஆகியவைகள் மலேரியாவின் அறிகுறிகளாகும். மலேரியா காய்ச்சல் பெண் அனாஃபிலிஸ் என்ற கொசுக்களால் ஏற்படுகிறது. இவ்வகை கொசுக்கள் தண்ணீர் தேங்கியிருக்கும் இடத்தில் இனப்பெருக்கமாகும்.

டெங்கு: டெங்கு காய்ச்சலும் கொசுக்களால் ஏற்படுவதுதான். இக்காய்ச்சல் வந்தால் உடல் வலி, மூட்டு வலி மற்றும் தடிப்புகள் போன்றவை உண்டாகும். நோய் வருவதற்கான முக்கிய காரணம் டைகர் கொசுக்கள்தான். இந்த கொசுக்கள் வராமல் தடுப்பதற்கு பூச்சி விலக்கிகளைப் பயன்படுத்த வேண்டும்.

சிக்கன் குனியா: ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால் வருவது சிக்கன்குனியா. திடீரென வரும் காய்ச்சலோடு சேர்ந்து கடுமையான மூட்டு வலி இருக்கும். ஏடிஸ் கொசுக்கள் வீட்டில் வைத்திருக்கும் தண்ணீரில்தான் அதிகம் இனப்பெருக்கமாகும். இந்த கொசுக்கள் பகல் நேரத்தில் கடிக்கும். இதனை தடுக்க தண்ணீர் தொட்டிகளை சுத்தப்படுத்தி, கொசுக்களை அழிக்கும் பூச்சி மருத்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

டைபாய்டு: டைபாய்டு என்ற நோய், தண்ணீரினால் வருவதாகும். டைபாய்டு வர காரணமாக இருப்பது எஸ்.டைஃபி என்ற பாக்டீரியா. அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை உபயோகிப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற சீர்கேட்டினாலும் உருவாகும்.
அறிகுறிகள்: காய்ச்சல், தலைவலி, சோர்வு, வலி மற்றும் தொண்டைப்புண் ஆகியவைகள்தான்.

வயிற்றுப்போக்கு: எளிதில் தாக்கும் நோய்களில் வயிற்றுப்போக்கும் ஒன்று. வயிற்றுப்போக்கு ஏற்படும்போது நீராதாரம் அதிகளவு வெளியேறும். இதன்காரணமாக நடக்க முடியாமை, உடல் சோர்வு ஏற்படும். இந்நோய் ஏற்பட்டால் காலதாமதமின்றி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது அவசியம். வயிற்றுப்போக்கு பெரும்பாலும் சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீரால் ஏற்படுகிறது.

வயிற்றுப்போக்கில் இருவகைகள் உண்டு. கடுமையான வயிற்றுப்போக்கு (அக்யூட் டையரியா), தீவிரமான வயிற்றுப்போக்கு (குரோனிக் டையரியா). இவை இரண்டையுமே வரும் முன் தடுக்க முதலில் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன் கையை கழுவ வேண்டும். வெந்நீரைக் குடிப்பது நல்லது.
காலரா : காலரா இருந்தால், கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படும்.

மஞ்சள் காமாலை: மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் கிருமிகள், சுத்தமில்லாத உணவுகள் மற்றும் தண்ணீரின் மூலம் வருகிறது. அறிகுறிகள்: சோர்வு, மஞ்சள் நிற சிறுநீர், வாந்தி மற்றும் ஈரல் செயல் பிறழ்ச்சி. இவற்றை தடுக்க கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். சத்தான பானங்களை அதிகமாக குடிக்க வேண்டும்.

வைரஸ் காய்ச்சல் : வைரஸ் காய்ச்சல் அனைத்து காலங்களிலும் உருவாகும். மிதமான முதல் அதிகமான காய்ச்சல் தான் இதற்கான அறிகுறி. இக்காய்ச்சல் தொடர்ந்து 37 நாட்கள் வரை நீடிக்கும். மேலும் இதனுடன் சளியும் இருமலும் சேர்ந்து இருக்கும். நிலவேம்பு பொடியுடன் தண்ணீ­ர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தால் இந்நோயிலிருந்து விடுபடலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொள்ள...

ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப அனுபவங்களானது வேறுபட்ட வைகளாக இருக்கும். மேலும், ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்பமாக இருக்கும் போது அறிகுறிகளானது மாறுபடுகின்றன, மற்றும் ஒரு கர்பத்திற்கு பின்வரும் அடுத்த கர்ப்பத்திற்கும் அதே அறிகுறிகள் காணப்படலாம். மேலும், கர்பம் தரித்தலின் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் மாதவிடாய் முன் இருப்பது போலவே இருக்கும் என்பதால், அந்த அறிகுறிகள் எப்போதும் அங்கீகாரம் அளிப்பதாக இல்லை.
மார்பகங்களில் தினவு ஏற்படுதல், முதுகு வலி, உச்சபட்சமான வாசனை உணர்வு மற்றும் கர்பத்திற்கு இன்னும் பல ஆரம்ப அறிகுறிகள் உள்ளன. இதோடு வேறு வித்தியாசமான கர்ப அறிகுறிகள்கூட கண்டறியலாம். அதிலும் உறவுகொண்டு ஒரு ஜோடி வாரங்கள் ஆகிவிட்டது. ஆனால், மாதவிடாய் சுழற்சி நடைபெற வில்லை. ஆகவே இப்போது கர்பமாக இருக்கிறோமா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்போம்.
ஆனால், மாதவிடாய் சுழற்சி தள்ளிப் போனால் மட்டும் கர்பமாக இருக்கிறோம் என்று முடிவு செய்து விட முடியாது. இருப்பினும், மாதவிடாய் சுழற்சி தள்ளிப் போவதுடன், ஒருசில அறிகுறிகளும் தென்பட்டால், கர்பமாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளலாம். அதிலும் கீழே குறிப்பிட்டுள்ள 17 அறிகுறிகள் தென்பட்டால், கர்பம் அடைந்திருப்பதை சுலபமாக அறிந்து கொள்ள முடியும்.
1. மூச்சு திணறல்
மாடிப்படி ஏறும்போது திடீரென்று மூச்சு திணறல் ஏற்படுகிறதா? அப்படியானால் அது கர்பமாக இருப்பதால் இருக்கலாம். வளரும் கருவிற்கு ஆக்சிஜன் தேவை என்பதால், சுவாசத்திற்கு ஒரு சிறிய குறுகிய இடைவெளி ஏற்படலாம். ஏன் இந்த நிலைமையானது கர்ப காலம் வரையிலும் தொடரலாம். ஏனெனில் வளர்ந்து வரும் குழந்தை, தாயின் நுரையீரல் மற்றும் உதரவிதானம்மீது அழுத்தம் கொடுக்க ஆரம்பிப்பதன் விளைவாக ஏற்படுகிறது.
2. மார்பகங்களில் ஏற்படும் தளர்வு
உள்ளாடையை அணியும் போது லேசான சித்திரவதை ஏற்படுவதை போல் உணர்வது அல்லது மார்பகங்கள் கொஞ்சம் பெரியதாக உள்ளது போன்ற உணர்வு அல்லது மென்மையான மற்றும் கனத்த மார் பகங்களின் உணர்வு, மார்பக காம்பு கரு மையடைதல் மற்றும் மார்பு நரம்புகள் விறைப்படைதல் முதலியன கர்பமாக இருப்பதற்கு ஒரு முதல் அறிகுறியாக இருக்க முடியும். எனவே இந்த அசௌகரியத்தை தவிர்ப்பதற்கு, படுக்கைக்கு செல்லும் முன் மிகவும் எளிதான உள்ளாடையை அணியலாம்.
3. சோர்வு
புத்தகத்தில் ஒரு பக்கத்தை படித்து முடிப்பதற்கு முன்னதாகவே, தூக்கம் வந்து விட்டது என்றால் அல்லது திடீரென்று சோர்வடைந்தாலோ, அது உடலில் அதிகரிக்கும் ஹார்மோன்கள் காரணமாக இருக்கலாம். பல பெண்களுக்கு சோர்வு, முதல் மூன்று மாதங்கள் தொடர்ந்து இருக்கும். ஆனால், பின்னர் இது விட்டு விட்டு வரும்.
4. குமட்டல்
அநேக கர்பிணி பெண்களுக்கு கருவானது 6 வாரங்கள் சேர்ந்து இருக்கும் போது குமட்டல் ஏற்படுகிறது. ஆனால், சிலருக்கு காலை சுகவீனம் (துரதிர்ஷ்டவசமாக காலை, மதியம் மற்றும் இரவு ஏற்படலாம்) ஏற்படுவதை உணர முடியும். இது இரண்டாவது மூன்று மாத கால கட்டத்தில் நுழையும்போது பெரும்பாலும் குறைய வேண்டும். இடையிடையே வயிறு நிரம்பக் கூடிய நொறுக்கு தீனி மற்றும் இஞ்சி மிட்டாய் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
5. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
திடீரென்று சிறுநீர் கழிக்காமல் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை என்றால், கர்பம் ஏற்பட்டிருப்பதற்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். கர்பகாலத்தில் உடலான து கூடுதல் திரவங்களை உற்பத்தி செய்வதன் மூலமாக, சிறுநீர்ப்பைக்கு அதிக வேலை இருப்பதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
6. தலைவலி
கர்பமாக இருப்பதன் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று, ஹார்மோன் மாற்றங்கள் விளைவாக ஏற்படும் தலைவலியாகும்.
7. பின் முதுகு வலி
முதுகுவலி இல்லாத போது, பின் முதுகு லேசாக தளர்வாக காணப்பட்டால், அது தசைநார்கள் தளர்ந்து வருவதன் காரணமாக ஏற்படுகிறது. சொல்லப்போனால் இந்த வலியானது கர்பகாலம் முழுவதும் தொடர்ந்து இருக்கும். ஏனென்றால், கர்பத்தின் போது எடை அதிகரிப்பதால், ஈர்ப்பு மையம் விலகுவதன் காரணமாக இது ஏற் படுகிறது.
8. தசைப்பிடிப்பு
இது மாதவிலக்குக்கு முன் ஏற்படும் அறிகுறியா? அல்லது கர்ப்பமா? என்பதைச் சொல்ல கடினமாக இருக்கிறது. ஆனால், சுரண்டுவதை உணர்கிறீர்கள் என்றால், அது குழந்தை வளர்வதற்கு தயாராக கருப்பை நீட்சி அடைகிறது என்று அர்த்தம்.
9. பசி அல்லது உணவு தாகம்
திடீரென்று, வயிறு போதுமான சிட்ரஸ் பெறமுடியாத நிலை அடையும்போது அல் லது வயிற்றில் அஜீரண கோளாறு முதலியவை புதியதாக தோன்றும் பட்சத்தில் கர்பமாக இருக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ள முடியும்.
10. மலச்சிக்கல் மற்றும் வீக்கம்
கடந்த வாரம் தான் ஜீன்ஸ் பொருத்தமாக இருந்தது. ஆனால், இப்போது சற்று இறுக்கமாக மற்றும் உடல் பெரியதாக காணப்பட்டால் அது செரிமான அமைப்பு குறைவடைவதன் காரணமாக ஏற்படுகிறது. இது கர்ப்பத்தின் காரணமாக, கூடுதல் புரோஜெஸ்டி ரோன் உருவாவதன் மூலமாக ஏற்படுகிறது.
11. ஊசலாடும் மனம்
அடிக்கடி மனதில் சந்தோஷம், கஷ்டம் போன்ற மாற்றங்களை உணர்கிறீர்கள் என்றால், உடல் நலம், புதிய ஹார்மோன்களை அனுசரிக்க ஆரம்பித்து விட்டது என்று பொருள்.
12. அதிகரிக்கும் உடலின் அடிப்பகுதி
வெப்பநிலை தீவிரமாக கர்ப்பிணியாக முயற்சி செய்கிறீர்கள் என்றால், உடலின் அடிப்பகுதியின் வெப்ப நிலையை கருத்தரிப்புக்கு சாத்தியமாக உயர்த்தி கொண்டிருக்கிறீர்கள். இரண்டு வாரங்கள் வரை பொதுவாக இந்த வெப்பநிலை யானது கருத்தரிப்பதற்கு சாத்தியமாக உயர்ந்து கொண்டு இருக்கும். அதன் பிறகும் இந்த உயர்ந்த வெப்ப நிலையானது காணப்பட்டால், கருவுற்றிருப்பது உறுதி செய்யப்படுகிறது.
13. சூப்பர் வாசனை
குப்பையை அன்றாடம் வெளியேற்றும் கடமையில் இருந்து தவறி விட்டீர்கள் என்றால், குப்பையும் வாந்தியெடுக்க தூண்டிவிடும். ஒரு சில வாசனைகள் தூண்டு தலாக இருந்தால் அல்லது வாசனைகளுக்கு உணர்வுகள் தூண்டப்படுவது அதிகமானால், அதற்கு தங்களின் ஒவனில் ரொட்டி ஒன்று கிடைத்துவிட்டது என்று பொருள். அதாவது கர்பமாக இருப்பது உறுதியாகி விட்டது.
14. தலைச்சுற்றல் அல்லது மயக்கமுறுதல்
இது திரைப்படங்களில் பெரும்பாலாக காட்டப்படும் ஆரம்ப அறிகுறியாகும். ஆனால், உண்மையின் அடிப்படை என்னவென்றால், குறைந்த சர்க்கரை அளவு அல்லது இரத்த அழுத்தம் கூட ஒரு குழப்பமான அத்தியாயத்தை ஏற்படுத்தும். எனவே நன்கு சாப்பிட்டு, போதுமான நீரை எடுத்து கொள்ள வேண்டும். இதன் பின்னரும் தொடர்ந்தால், கர்பம் தான்.
15. ஸ்பாட்டிங்
மாதவிடாய் வரவில்லையா? அல்லது அது சாதாரணமாக வருவதை விட லேசாக இருந்தது என்றால் மற்றும் எதிர்பார்க்கும் நாட்களை விட சற்று முன்பாகவே வந்துவிட்டது என்றால், இப்போது இருப்பது முட்டை கருவுறுதலின் போது ஏற்படக்கூடிய இரத்தபோக்கு ஆகும். ஏனென்றால் கருவுற்ற முட்டை கருப்பையின் சுவர்களில் பொருந்தும் போது, சற்று இரத்தப்போக்கு ஏற்படும்.
16. மாதவிடாய் தாமதமாக ஏற்படுவது
கர்பம் உண்டாவதன் ஆரம்ப அறிகுறிகள் பெரும் பாலும் மாத விலக்கின் (PMS) ஆரம்ப அறிகுறிக ளாகவே இருக்கும். இவை இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை எப்படி சொல்வது? அதிகமாக சொல்லப்படும் தடயம் மாதவிடாய் தாமதமாவது.
17. நேர்மறையான கர்ப்ப சோதனை
அம்மா ஆகிவிட்டீர்களா இல்லையா என்று உறுதியாக அறிந்துகொள்ள முடியவில்லை என்றால், ப்பீ-ஸ்டிக் சோதனை (pee-stick test) செய்து கொள்ளும்வரை, அதை உறுதிசெய்து கொள்ள முடியாது. அந்த சோதனை முடிவு எதிர்மறையாக தங்களுக்கு கர்பம் இல்லை என்று தெரிய வந்தும் மாதவிடாய் தாமதமானால், ஒரு வேளை சற்று முன்னரே இந்த சோதனையை செய்துள்ளீர்கள் என்று அர்த்தம். ஆகவே சில நாட் கள் காத்திருந்து மீண்டும் முயற்சிக்க வேண்டும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆஸ்த்மா

ஆஸ்மா என்பது என்னெவென்று தெரியாதவர்கள் இருக்க முடியாது. இழுப்பு, தொய்வு, முட்டிழுப்பு எனப் பலவாறாக அழைப்பார்கள். இது சுவாசத் தொகுதியைத் தாக்கும் ஒரு நோயாகும்.
எந்த வயதினரையும் தாக்கக் கூடியது, நீண்ட காலத்திற்கு தொடரக் கூடிய தொல்லையாகும். தொடர்ச்சியாக இல்லாவிடினும் விட்டு விட்டு வரக் கூடிய நோய் இது. அடியோடு குணமாகியது போலிருக்கும். எங்கிருந்து வந்நது என அதிசயிக்கும் வண்ணம் திடீரென மீண்டும் பிரசன்னமாகும்.
அறிகுறிகள்: இருமல் இழுப்புமூச்சு எடுப்பதில் சிரமம்நெஞ்சு இறுக்கமாக இருப்பதாக உணர்தல்போன்றவை இதன் அறிகுறிகளாகும்
ஆஸ்த்மா தூண்டிகள் :
ஓவ்வாமையை ஏற்படுத்தும் பூ மகரந்தங்கள், புற்கள், பூஞ்சணங்கள்
தடிமன் போன்ற வைரஸ் நோய்கள் தொற்றாமல் தம்மைப் பாதுகாத்தல்.
சூழலில் உள்ள வளியை மாசுபடுத்தும் சிகரட் புகை, இரசாயனப் புகைகள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை தவிர்த்தல்.
விறகு எரித்தல். விறகு எரிக்கும்போது பல நச்சு வாயுக்களும், நுண்துகள்களும் வெளியேறுகின்றன. இவை சிலருக்கு தூண்டியாக அமையலாம்.
கரப்பன் பூச்சியும் அதன் எச்சங்களும்.
சைனஸ் தொற்று நோய்களுக்கு ஆளாகாதிருத்தல்.
நெஞ்செரிப்பு, வயிற்றெரிவு சாப்பாடு புளித்து மேலெழுதல் போன்ற அறிகுறிகள் குடலில் உள்ள அமிலம் மேலெழுவதைக் குறிக்கலாம். இதுவும் ஆஸ்த்மாவைத் தூண்டுவதுண்டு. இதைத் தடுக்க மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
கடும் குளிர் காற்றுகளும் நோயைத் தூண்டிவிடுவதுண்டு
கடுமையான உடற் பயிற்சிகள் தூண்டக் கூடும். ஆயினும் அதன் அர்த்தம் உடற்பயிற்சிகள் செய்யக் கூடாது என்பதல்ல. மருத்துவ ஆலோசனையுடன் இன்ஹேலர்களை உபயோகித்துக் கொண்டு செய்ய வேண்டும்.
கடுமையான மனஅழுத்தங்களும் உணர்ச்சிவசப்படலும் தீவிரமாக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆயில் புல்லிங் (Oil Pulling)

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் , (அ) சூரியகாந்தி (அ) வேர்க்கடலை (அ) ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய் என ஏதாவது ஒரு எண்ணெய் இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து கொப்பளிக்க வேண்டும். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விட வேண்டும்.....
ஆயில் புல்லிங் செய்வதால் பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்ட்ரியாவா போன்ற கிருமி தொற்று நோய்களிலிலருந்து முதலில் விடுதலை பெறலாம் ..... கண் காது மூக்கு சம்பந்தமான மற்றும் நுரையீரல் நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, மூட்டு வலி, முழங்கால் வலி, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது.
நம் உடலில் ஏற்படக்கூடிய எய்ட்ஸ், சர்க்கரை, இரத்த அழுத்தம், இதயநோய்கள், பார்க்கின்சன், கல்லீரல், நோய், ரத்தபுற்று (அ) எலும்புமஜ்ஜை புற்றுநோயையும், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், வயிறு சம்பந்தபட்ட பிரச்சனைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களையும் மிக எளிதான முறையில் குணப்படுத்தும் முறையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள்.


 ‘ஆயில் புல்லிங்' (oil pulling) மூலமாக மிக எளிமையான முறையில் குணமாக்கியும் இருக்கிறார்கள் .....

தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற கடுமையான வலியால் அவதிக்குள்ளாக்கும் நோய்கள் தாக்குவதில்லை என்று மருத்துவர்களே கூறுகின்றனர் .....

நோயின் தன்மைக்கு ஏற்ப ஒன்றிலிருந்து மூன்று முறை செய்தால் நோயின் தீவிரம் குறையும்.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சிறுநீரக கல் உருவாகாமல் தடுக்க

‘சிறுநீரகத்தில், சிறுநீரிலுள்ள உப்புகள் ஒன்று திரண்டு பல்வேறு காரணங்களினால் சிறுநீர்ப்பாதையில் பல்வேறு அளவுள்ள கற்கள் உருவாகக்கூடும். முக்கியமாக கால்சியம், மக்னீசியம் ஆகியவற்றின் ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால் இவை உருவாகின்றன. யூரேட் அல்லது அபூர்வமாக சிஸ்டீன் கற்கள் தோன்றலாம்.

நோயாளிகளில் நான்கில் ஒருவருக்கு பரம்பரையாக வருகிறது. சிறுநீரகக் கல் மிகச்சிறிய துகள் அளவில் இருந்து மிகப்பெரியளவு அதாவது பிறந்த குழந்தையின் தலையளவு கூட வளரும். இவை சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படுத்தாதவரை, வெளியில் அறிகுறிகள் தென்படாது. கற்களின் வெளிபரப்பு முட்கள் போல் இருந்தால் நீர் பாதையின் உள்வரிப்படலமான சவ்வுப்படலத்தில் உராய்ந்து சிறுநீரில் ரத்தம் வெளிவரும். கண்ணுக்குத் தெரியும் அளவில் சிறுநீர் ரத்த சிவப்பாக இருக்கும் அல்லது சிறுநீரை பரிசோதனை செய்யும் போது ரத்தச் சிவப்பணுக்கள் மிகுதியாகக் தென்படும். வயிற்று வலியோடு இந்த அறிகுறியும் இருந்தால் சிறுநீரக கல் உருவாகி உள்ளதை அறிந்து கொள்ளலாம்.

சிறுநீர் தொற்றும் ஏற்படும். கீழ்புற நீர்ப்பாதையில் தொற்று காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வும், எரிச்சலும், அடிவயிற்று வலி, காய்ச்சல் ஏற்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது அவசியம். மேலும் கற்கள் நீர்பாதையை அடைக்கும் போது சிறுநீரகத்தில் நீர் வீக்கம் உண்டாகும். அப்போது வயிற்றில் கட்டி இருப்பது போல் உணரலாம். அறிகுறி இல்லாத நாள்பட்ட சிறுநீரக கற்கள் இருந்தால் சிறுநீரகத்தில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீரின்மை உருவாகும்.

சிகிச்சை முறை: சிறுநீர் குழாயில் கீழ்ப்பகுதியில் காணப்படும் 4 மி.மீ. அளவை விட சிறிய கற்களில் 90 சதவீதம் தானாக வெளியேறி விடுகின்றன. அளவு 6 மி.மீ.க்கு மேல் இருந்தால் 20 சதவீதம் மட்டுமே தானாக வெளியேறும். நோயாளிகள் தாராளமாக தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீர் வெளியேறி, அதன் மூலம் கற்களும் வெளியேறி விடும். வாழைத்தண்டு அல்லது மாற்று மருந்துகள் சிறுநீர் பெருக்கியாக செயல்படுகின்றன. வலி மிகுதியாக இருப்பின் டாக்டரின் ஆலோசனைப்படி வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்ளலாம்.

பெரிய கற்கள் சிறுநீர்ப்பாதையில் அடைப்பு ஏற்படுத்தும் போது அறுவை சிகிச்சை தேவைப்படும். தொற்று ஏற்பட்டு சிறுநீரகம் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தால் சிறுநீரக நீக்கம் தேவைப்படும். பகுதியளவு பாதிக்கப்பட்டிருந்தால் பகுதி நீக்கம் செய்ய வேண்டும். சிறுநீர்ப்பாதையில் அடைப்பு இல்லாதவர்களுக்கு லேப்ராஸ்கோபி முறையில் கற்கள் மட்டும் பொடியாக்கப்பட்டு சிறுநீரில் வெளியேற்றப்படும். இந்த கற்களை பரிசோதித்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

பாட்டி வைத்தியம்

பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம்.

வெயில் காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு 2 முறையாவது குடிப்பது நலம்.

அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.

முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும்.

வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம் சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து.

புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.

பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

டயட்

சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க சாப்பிட மற்றும் குறைக்க வேண்டிய உணவுகள் பற்றி உணவு ஆலோசகர் ஜெயந்தி கூறியதாவது: பால், பால்பொருட்களை குறைந்தது ஒரு நாளைக்கு 300 மி.லி கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். தானியங்களில் கம்பு தவிர மற்ற தானியங்கள், பருப்பு வகைகளில் கடலைப்பருப்பு, உளுந்து, பாசிப்பயறு, பாசிபருப்பு, உலர்ந்த பட்டாணி சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட், வெங்காயம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெள்ளை முள்ளங்கி, பாகற்காய், அவரைக்காய், சவ்சவ், கொத்தவரங்காய், பீன்ஸ், வெண்டைக்காய், மாங்காய், பூசணி, சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், அன்னாசிப்பழம், ஆப்பிள், பப்பாளி, பிளம்ஸ், வாழைப்பழம், எலுமிச்சை, தர்பூசணி, பேரிக்காய் போன்ற காய்கறி, கிழங்கு மற்றும் பழ வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். பகலில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டு டம்ளர் வீதம் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு படுக்க செல்லும் முன்னரும் தூக்கத்தில் எழுந்தும் அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆட்டு இறைச்சியை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். கோழி மற்றும் மீன் கொஞ்சம் சாப்பிடலாம். இரவில் ஒருமுறையாவது சிறுநீர் கழிக்க வேண்டும்.

குறைத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்: காலிபிளவர், முட்டைக்கோஸ், தக்காளி, கத்தரிக்காய், பசலைக்கீரை, வெள்ளரி, முருங்கைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, உருளைக்கிழங்கு, பீட்ரூட், கருணைக்கிழங்கு, சிவப்பு முள்ளங்கி, மரவள்ளிக்கிழங்கு, திராட்சை, கொய்யா, நெல்லி, பலா, நாவற்பழம், சீதாப்பழம், மாதுளை, மாம்பழம். சமையல் சோடா, சோடியம் பை&கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் தவிர்க்க வேண்டும். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வேப்பிலை

வேம்பின் இலை, காய் கனி என அனைத்தும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது.. வேப்பந்தழையின் இலை கோழையகற்றுதல்,
சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது.
வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை போல கொடுத்து வர அம்மை நோய் தணியும். வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும்.
வேப்பங்கொழுந்து 20 கிராம், ஈர்க்கு 10, 4 கடுக்காய் தோல்,
பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும். வேம்பின் சாறில் 10 அரிசி ,நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்துலும் கட்டுப் படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டி படும், நரை திரை மாறும்.
வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும். உந்தாமணி இலையை வேப்பெண்ணையில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்து, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு, கண்ட மாலை கீல் வாதம் குணமாகும்.
வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும். வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு ஒரு வருடம் கழித்து இந்தப் பூவைக் கொண்டு ரசம் வைப்பார்கள். இந்த வேப்பம் பூ ரசம் பித்த சம்பத்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.
வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும். நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வர மாத்திரை எதுவும் இன்றிக் குணமாகும்.
கார்த்திகை மாதம் விடுகின்ற கொழுந்தை இருபத்தேழு நாள் சாப்பிட பாம்பு விடம் நீங்கும். பாம்பு கடித்தாலும் விடம் ஏறாது. ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் பதினெட்டு வகையான குட்டமும் குணமாகும். நூற்றாண்டு வேம்பின் பூ, தளிர், பட்டை, வேர், காய் உலர்த்திய சூரணத்தை ஆறு மாதம் சாப்பிட்டு வந்தால் நிச்சையம் குட்டம் முதலான தோல் நோய் அனைத்தும் குணமாகும். புளி நீக்கி பத்தியம் இருத்தல் வேண்டும்.
வேப்பிலை, எலுமிச்சம் பழச் சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்க்க, பித்த மயக்கம், குடிவேறி குணமாகும். வேப்பிலைமஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச பித்த வெடிப்பு கால் பாத எரிச்சல் குணமாகும். நகச்சுத்திக்கு பற்றிட குணமாகும்.
வேப்பிலையை பச்சையாகவும் வேக வைத்தும் அல்லது கசாயம் செய்தும் சாப்பிட்டு வந்தால் தீராத நோய் அனைத்தும் தீர்ந்து விடும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ரத்த அழுத்தத்தை விரட்டும் வழி

ரத்த அழுத்தத்தை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விடும்போது இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய் சுருங்கி மாரடைப்பு உண்டாகிறது. மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் சுருங்கி மூளைக்கு போகும் ரத்தம் குறைந்தால் பக்கவாதம் ஏற்படுகிறது. மேலும் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் வெடித்து மரணம் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாக உயர்வது, குறைவது இரண்டுமே பிரச்னைதான். வழக்கமாக மாரடைப்புக்கு பிறகு இதயம் ரத்தத்தை பம்பிங் செய்வது குறையும். அப்போது ரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. இதயம் வீங்கும் பட்சத்திலும் குறைந்த ரத்த அழுத்தம் வரலாம்.
குறைந்த ரத்த அழுத்தத்தால் அடிக்கடி மயக்கம் ஏற்படலாம். அட்ரீனல் சுரப்பி எனப்படும் ஹார்மோன் சுரப்பியில் டியூமர் வரலாம். இதனாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இயல்பாகவே அதிகளவு டென்ஷன், கோபம் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்னை தோன்றும். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு கிட்னி கெட்டுப் போகவும் வாய்ப்புள்ளது. சிறு வயதில் உடலை வருத்தி வேலை செய்யாமல் இருப்பது, அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் சேரும் கொழுப்பு, தவறான உணவு முறை, அடிக்கடி குளிர்பானங்களை உட்கொள்வதால் ரத்தத்தில் அதிகரிக்கும் உப்பின் அளவு, மது மற்றும் போதைப் பழக்கங்கள், அதிக உடல் எடை போன்ற காரணங்களால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. ரத்த அழுத்த அறிகுறி உள்ளவர்கள், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதுடன் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
பாதுகாப்பு முறை :-
முதலில் உங்கள் உடல் எடை, உயரத்துக்கு ஏற்றதுதானா என்பதை சோதித்து சரி செய்யவும். தினமும் சில மணி நேரம் வாக்கிங் அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சியை கட்டாயம் செய்யவும். உணவில் நிறைய காய்கறிகள், பழ வகைகள் சேர்க்கவும். சாப்பாட்டில் உப்பு குறைவாக பயன்படுத்த வேண்டியது அவசியம். மருத்துவரின் ஆலோசனையுடன் அதிக உடல் எடையை குறைக்கவும். புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அது ரத்தக் குழாயை சுருங்க செய்யும். உடனடியாக புகைபிடிக்கும் பழக்கத்தை விடவும். இதேபோல் மிகை ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மதுப்பழக்கத்தையும் விட வேண்டும். மதுவை விட முடியாதவர்கள் மதுவின் அளவை படிப்படியாக குறைத்துக் கொள்ளவும்.
ரெசிபி:-
ஓட்ஸ் உப்புமா: ஓட்ஸ் ஒரு கப், மோர் 20 மி.லி. அரைப்பதற்கு இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் ஒரு கட்டு கொத்தமல்லி. இவற்றை எண்ணெயில் வதக்கி அரைத்து வைக்கவும். ஓட்ஸை தனியாக மிக்சியில் அரைத்து மோரில் கலந்து வைக்கவும். இத்துடன் அரைத்த கலவையை சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து தேவையான உப்பு சேர்த்து கலந்து வைத்துள்ள ஓட்ஸ் கலவையை சேர்த்து உப்புமா பதத்துக்கு கிளறி இறக்கவும். இதில் தேவையான அளவு நார்ச்சத்து உள்ளதால் எச்.டி.எல். எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.
முருங்கைக்காய் வடை:
பத்து முருங்கைக்காய்களை வேக வைத்து, உள் பகுதி சதையை சேகரிக்கவும். கடலைப்பருப்பு இரண்டு கப் ஊற வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காய் சதைப்பகுதியை அரைத்த மாவில் சேர்க்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சிறிதளவு, அரிசி மாவு 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்து வடைக்கு தேவையான பதத்தில் பிசைந்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும். இதில் தேவையான இரும்புச் சத்து உள்ளதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வெஜிடபிள் மசாலா கறி:
காலி பிளவர் - 1 கப், பச்சை பட்டாணி - 1 கப், பீன்ஸ், கேரட் தேவையான அளவு, குடைமிளகாய் - ஒரு கப், பட்டை, கிராம்பு, சோம்பு, வரமிளகாய், கொத்தமல்லி, ஏலக்காய், சுக்கு சிறிதளவு ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்கறி வகைகளை பாதியளவு வெந்தபின் இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கருவேப்பிலை, வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்த்து வதக்கவும். மசாலா பொருட்களையும் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். இதில் போதுமான அளவு நார்ச்சத்து இருப்பதால் உடலில் கெட்ட கொழுப்பு சேருவதை தடுக்கும்.
டயட்:
தவறான உணவு முறை காரணமாக உடலில் சேரும் கெட்ட கொழுப்பு, உடல் எடை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தப் பிரச்னை தோன்றுகிறது. மன உளைச்சல், டென்ஷன் மற்றும் அதிகபட்ச கோபமும் ரத்த அழுத்த பிரச்னையை உருவாக்குகிறது. நீண்ட நாள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் ரத்த அழுத்தம் வரலாம். இதன் தொடர்ச்சியாக மாரடைப்பு, பக்கவாதம்கூட ஏற்படக் கூடும். இதுபோன்ற பிரச்னைகளை துவக்கத்திலேயே தடுக்க அதிக உடல் எடையை குறைக்க வேண்டும். அதற்கு டயட்டில் கவனம் செலுத்தவும். உடலில் நல்ல கொழுப்பு சேருவதற்கான உணவுகளை கண்டறிந்து சேர்த்துக் கொள்ளவும்.
உப்பு அதிகமாக சேர்க்கப்படும் ஊறுகாய், வத்தல், வடகம் ஆகியவற்றை தவிர்க்கவும். உணவு தயாரிப்பில் பயன்படுத்தும் எண்ணெயின் அளவை குறைக்கவும். அசைவ உணவு அடிக்கடி எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்தவும். எண்ணெயில் பொறித்த உணவுகளையும் தவிர்ப்பது அவசியம். பால் மற்றும் பால் பொருட்களின் அளவையும் குறைப்பது நல்லது. தினமும் குறைந்தபட்சம் 1 மணி நேரம் வாக்கிங் அவசியம்.
கீரை மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பு கரைந்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். பழங்கள் நிறைய எடுத்துக் கொள்ளவும். பீசா, பர்கர் உள்ளிட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
பாட்டி வைத்தியம்:-
அரை கிலோ அசோக மரப்பட்டை, சீரகம் 50 கிராம் எடுத்து இரண்டையும் பொடி செய்து கொள்ளவும். தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குணமாகும்.
அமுக்காராவை பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சரியாகும்.
ஆடாதொடா இலையை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட ரத்தக் கொதிப்பு குணமாகும்.
ஆரைக் கீரை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
இஞ்சிச் சாற்றில் சீரகத்தை ஊற வைத்து காய வைத்துக் கொள்ளவும். இதில் 2 கிராம் அளவுக்கு எடுத்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிடலாம்.
இஞ்சிச் சாற்றில் தேன் கலந்து இரண்டு வேளையும் குடித்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.
எலுமிச்சம் பழச்சாறு, பேரீச்சம்பழம், சீரகம் சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பு சரியாகிவிடும். கடுக்காய், சுக்கு, தாமரைப்பூ, ஏலக்காய் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். இதில் தினமும் இரண்டு கிராம் அளவு பொடியை சாப்பிட்டு வந்தால் இதய நோய், ரத்த அழுத்தம் வராது.
கல்யாண முருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சரியாகும்.
சர்ப்பகபந்தா வேரை பொடி செய்து தினமும் அரை கிராம் அளவுக்கு சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சீராகும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தழும்புகள்

முகப்பரு வருவது இயற்கை, அதனால் ஏற்படும் தழும்புகளும் இயற்கை. அது என்னதான் மேக்-அப் போட்டாலும் போகாத தழும்புகள் என்பது ஏறக்குறைய மருத்துவ உண்மை!


ஆனால் அதனை போக்க சில இயற்கை வழிமுறைகள் உள்ளன.

வெந்தயம் - முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளை ஒழித்துக் கட்ட சிறந்த மருந்தாகும். வெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல நீவி தடவவேண்டும். பிறகு தண்ணீரில் அலம்ப வேண்டும் இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் உங்கள் முகத்தில் நிச்சயம் மாற்றம் தெரியும்.

எலுமிச்சை சாறை எடுத்துக்கொள்ளவும், பஞ்சை அதில் நனைத்து பருக்கள் தழும்புகள் மீது தடவவும். சிறிது நேரம் கழித்து மிதமான கொதிநீரில் முகத்தை அலம்பவும். எலுமிச்சை கரும்புள்ளிகளை போக்கவும் சிறந்த மருந்தாகும்.

சந்தனம் மற்றும் பன்னீரைக் கலந்து பேஸ்ட் போன்று செய்து முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளலாம். ஒரு மணிநேரம் கழித்து பிறகு அலம்பவும்.

ஆலிவ் எண்ணெயை ரெகுலராக முகத்தில் தடவி வந்தால் ஏற்கனவே உள்ள பரு தழும்புகள் மறைவதோடு பருக்கள் உருவாவதையே தடுத்தாலும் தடுத்து விடும்.

வெள்ளரிப்பிஞ்சு முகத்தை மென்மையாக வைக்க உதவும் மற்றொரு இயற்கைப் பொருளாகும். இதனையும் ரெகுலராக பயன்படுத்தலாம்.

தக்காளி : இதை சாறு எடுத்து தடவி வந்தாலும் கரும்புள்ளி மறையும்.

மேலும் தழும்புகள் இயற்கையானவை .

ஓரளவு அதை வெளியே தெரியாமல் மறைக்கலாம் .அழகான வெண்ணிலவிலும் உண்டு மேடு பள்ளம். ஆனால் நிலவு அழகில்லை என யாரும் சொல்வது இல்லை... அதனால் ஒருபோதும் தழும்புகளை நினைத்து வருந்தாமல் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் தன்னம்பிக்கையோடு வாழ்கையை எதிர்கொள்ளுங்கள்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மூல நோய்க்கு தீர்வு

* புங்கம் பட்டையை கஷாயமாக்கி குடிக்க மூலம் குணமாகும்.

* சிவதை, கருமச்சிவதை, திப்பிலி ஆகியவற்றை வறுத்து பட்டு போல் பொடி செய்து ஆசனவாயில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

* பருப்புடன் துத்தி இலையை வேகவைத்து சாப்பிட மூலம் சரியாகும்.

* வாழைச்சாற்றுடன் கடுக்காய் பொடி கலந்து சாப்பிட மூலம் குணமாகும்.

* கண்டங்கத்தரி பூ, நல்லெண்ணை, வேப்ப எண்ணை கலந்து காய்ச்சி மூலத்தில் தடவி வரலாம்.

* ரத்த மூலம் சரியாக பசும்பால் 400, பசுநெய் 50, வெங்காய சாறு 100 மில்லி, அதிமதுரம் 20 கிராம் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சி நல்ல  பதத்தில் இறக்கி ஆறவைத்து இதனை தினமும் ஒரு வேளை ஒரு கரண்டி வீதம் 10 நாட்கள் சாப்பிட குணம் கிடைக்கும்.

* நாய்க்கடி விஷம் நீங்க நாய் கடித்த இடத்தில் எருக்கன்பால் வைத்தால் விஷம் ஏறாது.

* எலிக்கடி விஷம் நீங்க குப்பை மேனி இலையை அரைத்து கடிவாயில் பற்று போட வேண்டும்.

* பாம்பு கடி விஷம் நீங்க பிரமதண்டு மூலம் 30 கிராம் உள்ளுக்கு கொடுத்து கடி வாயில் கட்ட விஷம் பேதியாகும்.

* மற்றொரு முறை : ஆடுதின்னாபாளை வேர் கஷாயம் செய்து குடிக்க விஷம் இறங்கும்.

* ஆடுதின்னாபாளை இலைகளை கஷாயம் செய்து குடிக்க வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும்.

* விஷக்கடி சரியாக கரிசலாங்கண்ணி இலையை மசித்து ஆட்டுப்பாலில் கலந்து கொடுக்க வேண்டும்.

* குப்பை மேனி இலையை மையாக அரைத்து சுண்ணாம்பு சேர்த்து தடவ எல்லா விஷக்கடிகளும் நீங்கும்.

விஷ முறிவுக்கு...

* பற்கள் ஆடும்போது ஆலம்பாலையை பற்கள் மீது தடவினால் பற்கள் கெட்டிப்படும்.

* பாக்குக் கொட்டையை சுட்டு சாம்பல் ஆக்கி பொடி செய்து அத்துடன் காசுகட்டி இலவங்கபட்டை சேர்த்து பல்துலக்கி வந்தால் பல்நோய் வராது. பல்  ஒளி வீசும்.

* துத்திஇலை, வேர் கஷாயம் செய்து வாய்கொப்பளித்து வந்தால் பல்வலி, பல்கூச்சம், பல் ஆட்டம் தீரும்.

* புங்கம்பட்டையை இடித்து தூளாக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து பாதியாக நீர்சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். அதன்பின் 250 மில்லி  நல்லெண்ணை, 10 கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்ச வேண்டும். மெழுகு பதத்திற்கு வரும்போது புங்கன் கஷாயத்தை கலந்து சூடாக்கி இறக்கி  விடவும். இந்த எண்ணையை தினசரி இருவேளை ஒரு கரண்டி வாயில் விட்டு 2 நிமிடங்களுக்கு பின் கொப்பளிக்க பல்சொத்தை நீங்கி பல் எனாமல்  ஏற்பட்டு பிரகாசம் ஏற்படும்.

* மகிழம் மரத்தின் பட்டையை பொடியாக்கி பல் துலக்கினால் எவ்வளவு கடுமையான பல்வலியும் குறையும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தக்காளி

தக்காளி இல்லாத சமையலா, அது ருசிக்காது என்பது பலரது கருத்து. தக்காளி இல்லாமல் பெரும்பாலான பெண்கள் சமையல் செய்வது இல்லை என்பதும் உண்மை. சமையலில் காயாகவும் பழமாகவும் பயன்படுகிறது இந்த தக்காளி. இது ஒரு காய்கறி செடியினமாகும். இது கத்தரிக்காய், கொடை மிளகாய் போன்றே சோலானேசியெ அல்லது நிழல்சேர் செடிக் குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும். இது அறிவியலில் சோலானம் லைக்கோபெர்சிக்கம் என்று அழைக்கப்படுகிறது. இதன் தாயகம் தென் அமெரிக்கா. குறிப்பாக பெரு, மெக்சிகோவில் இருந்து அர்ஜெண்டினா வரையான பகுதியில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

மெக்சிகோவில், அஸ்டெக் இனத்தவர் உணவுக்காக தக்காளியை பயிரிட்டனர். அந்நாட்டைக் கைப்பற்றிய ஸ்பானிய வெற்றி வீரர்கள் 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதை ஸ்பெயினுக்கு கொண்டு வந்தனர். நாவாட்டில் என்ற மொழியில் டாமாட்டில் எனப்படும் வார்த்தையைக் கடன் வாங்கி இதை டாமாடே என்று அழைத்தனர். விரைவில், இத்தாலி, வட ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் இருந்த ஸ்பானிய குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த புதிய சுவையை ருசிக்க ஆரம்பித்தனர்.

அந்த நூற்றாண்டின் பிற்பகுதியில், வட ஐரோப்பாவிற்கு தக்காளி அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் அது நச்சுத்தன்மையுள்ளதென்று கருதப்பட்டதால், தோட்டத்தில் அலங்கார செடியாக வளர்க்கப்பட்டது. இரவில் மலர்கிற ஒரு செடியாக, அதிக வாசனையுள்ள இலைகளையும் நச்சுத்தன்மையுள்ள தண்டுகளையும் கொண்ட ஒரு செடியாக இது இருந்தது. என்றாலும், அதன் பழத்தில் எவ்வித ஆபத்தும் இல்லைஎன்பது நிரூபிக்கப்பட்டது. ஐரோப்பாவுக்கு முதன்முதலில் கொண்டுவரப்பட்ட தக்காளிகள் மஞ்சள் நிறத்தில் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் இத்தாலியர்கள் அதை போமோடோரோ (தங்க ஆப்பிள்) என்றழைத்தனர்.

ஆங்கிலேயர் முதலில் அதை டொமாட்டே என்றும் பின்னர் அதை டொமாட்டோ என்றும் அழைத்தனர். ஆனால் லவ் ஆப்பிள் என்ற பெயரும் அதிக பிரபலமானது. ஐரோப்பாவிலிருந்து அட்லாண்டிக் வழியாகத் திரும்பவும் வட அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட தக்காளி, 19ம் நூற்றாண்டில் அவ்விடத்தின் முக்கிய உணவாக ஆனது.

தக்காளியின் பயன்கள்

தக்காளியில் வைட்டமின் ஏ, சி, ஈ மட்டுமல்லாமல், பொட்டாசியம், கால்சியம் மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளன. புற்றுநோய், இருதய நோய் போன்ற வியாதிகளால் தாக்கப்படுவதைக் குறைப்பதற்காகப் பரிந்துரைக்கப்படும் லைகோபீன் என்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் தக்காளியில் நிறைய உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தக்காளியில் 93 முதல் 95 சதவீதம் வரை தண்ணீரே உள்ளது. தங்கள் எடையைக் குறித்து அக்கறையுள்ளவர்கள் தக்காளியில் கலோரிகள் மிகக் குறைவு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

தக்காளி சாறு

நன்கு பழுத்த தக்காளிப் பழத்தை சாறாக மாற்றி உடனே அருந்த வேண்டும். பழுத்த பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. சிறுநீர் எரிச்சல், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றை குணமாக்கவும் தக்காளி சாறு சிறந்ததாகும். இந்நோய் உள்ளவர்கள் 5, 6 பழங்களை சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸி மூலம் சாறாக மாற்றி அருந்தினால் போதும். நாக்கு வறட்சியும் அகலும்; உடலும் மினுமினுப்பாய் மாறும்.

உடல் பருமன் குறையும்

100 கிராம் தக்காளிப் பழத்தில் 20 கலோரி தான் உள்ளது. எனவே, எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது. பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் ஏ முதலியவை அதிக அளவில் உள்ளன. இதனால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கும். உடல் பருமனை குறைக்க விரும்புகிறவர்கள் காலையில் பழுத்த இரு தக்காளிப் பழங்களை சாப்பிட்டால் போதும். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இப்படி சாப்பிட்டால் கொழுத்த சரீரம் கட்டுப்படும். இதற்கு முக்கிய காரணம், அதில் மாவு சத்து குறைவாய் இருப்ப துதான். அத்துடன் உடலுக்கு தேவையான தாது உப்புகளும், வைட்டமின்களும் கிடைத்துவிடுகிறது. இதனால் உடல் நலக்குறைவு ஏற்படாமல் உடல் பருமனை குறைக்கலாம். தக்காளி உடலில் உள்ள நோய்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது. அதனால்தான் உலகம் முழுவதும் தற்போது விரும்பி பருகப்படும் பானங்களுள் தக்காளி சாறும் ஒன்றாய் இருக்கிறது. தக்காளிச்சாறு நீரிழிவுக்காரர்களின் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

பார்வை கோளாறு நீங்கும்

இரவு நேரத்தில் பார்வை சரியாக தெரியாதவர்கள் தக்காளிச்சாறு சாப்பிடவேண்டும். தக்காளி செடியின் இலைகளை பறித்த உடன் 15 நிமிடங்கள் சுடுதண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மட்டும் சாப்பிடவும். செடியின் தண்டை அரைத்து, அதில் வினிகர் கலந்து மார்பு மீது வைத்துக் கட்டி வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

காய்ச்சல், பித்த வாந்தியை போக்கும்

காய்ச்சல், பித்த வாந்தி, கல்லீரல் ஆகியவை தொடர்பாக ஏற்படும் மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், உணவு செரியாமை, வாயுத்தொந்தரவு, நெஞ்செரிச்சல் முதலியவை குணமாக ஒரு டம்ளர் தக்காளிச்சாறு போதும். காலையில் வெறும் வயிற்றில் தலா ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து தக்காளிச் சாற்றை அருந்த வேண்டும்.

ஆஸ்துமாவை குணமாக்கும்

காச நோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா போன்ற மூச்சுக்குழல் நோய்களும் இச்சாறால் குணமாகின்றன. இரவில் படுக்க போகும்போது ஒரு டம்ளர் தக்காளி சாறுடன் அதில் தலா ஒரு தேக்கரண்டி தேனும், ஏலக்காய்த் தூளும் கலக்க வேண்டும். முதலில் மூன்று உரித்த வெள்ளைப்பூண்டுகளை (மூன்று பற்கள்) மாத்திரை போல தண்ணீர் மூலம் விழுங்க வேண்டும். பிறகு தக்காளி சாற்றை அருந்த வேண்டும். மேற்கண்ட மூன்று வகை நோயாளிகளுக்கும் மிக உயர்ந்த பயனை அளிக்கும் சிகிச்சை முறையாகும்.

சளி முற்றிலும் அகன்றுவிடும். அதனால் இவர்கள் குணமாகி வருவதும் கண்கூடாய்த் தெரியும். தக்காளியைப் பழமாக சாப்பிட்டாலும் சாறாக சாப்பிட்டாலும் உடனே உடலில் கலந்துவிடும். இதனால் சக்தியும் கிடைக்கும்; சாப்பிட்ட மற்ற உணவுகளும் உடனே செரிமானம் ஆகிவிடும். இந்தக் காரணத்தால்தான் பெரிய ஓட்டல்களில் முதலில் தக்காளி சூப் தருகிறார்கள். பலமான விருந்தை ருசித்து சாப்பிட, ஏற்கனவே வயிற்றில் உள்ளதையும் இது ஜீரணிக்க செய்துவிடும். அத்துடன் இது உடனே உடலால் கிரகித்துக் கொள்ளப்படுவதால் வயிறு நிரம்பிவிடும்.

எனவே உணவைக் குறவாகவே உண்ணுவார்கள். அதாவது வயிற்றில் பாதியை தக்காளி ரசம் அடைத்துக் கொள்வதால் மிகுதியாக சாப்பிட முடியாது. பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நல்லெண்ணெயில் தக்காளி சூப்பாகவும் அருந்தலாம். இந்த முறையும் உடலுக்கு நல்லது. நோயின் போது ஏற்படும் நாக்கு வறட்சிக்கு தக்காளி சூப் மிகவும் நல்லது. தக்காளியில் உள்ள இரும்பு சத்து எளிதில் ஜீரணமாகிறது. அத்துடன் முழுமையாக உடலில் கலந்து விடுகிறது. இதனால் ரத்த சோகை நோயாளிகள் விரைவில் குணமாவார்கள். இவர்கள் தக்காளி சாறு இரண்டு அல்லது மூன்று முறை தினமும் அருந்த வேண்டும். ஒரு வேளைக்கு ஒரு டம்ளர் சாறு போதும்.

பார்வை நரம்புகள் பலம் பெறும்

வெண்ணெயில் உள்ளதைவிட அதிக அளவு விட்டமின் ஏ தக்காளிப் பழங்களில் இருக்கிறது. அதனால் கண் பார்வை கோளாறுகளுக்கும், உடல் பலவீனத்துக்கும் தக்காளி பழத்தையும், தக்காளி சாற்றையும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வெங்காயம்

* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறுது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.
* வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
* வெங்காய சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால்
பல்வலி, ஈறுவலி குறையும்.

* வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் பலமாகும்.
* வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
* படை, தேமல் மேல் வெங்காயம் சாற்றை தடவினால் மறைந்துவிடும்.
* வெங்காய ரசத்தை நீர் கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும்.
* வெங்காயம் குறைவான கொழுப்பு சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தை பயன்படுத்தலாம்.
* மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
* வெங்காயத்தை தினமும் சாப்பிட்டால் டி.பி நோய் குணமாகும்.

கண் உஷ்ணம் குறைய

வெள்ளை நந்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் உஷ்ணம் குறையும்.

கண் நோய்கள் குறைய

புளியம் பூவை அம்மியில் வைத்து அரைத்துக் தலையில் பற்றுப் போட்டு வந்தால் கண் நோய்கள் குறையும்.

மூக்கடைப்பு குறைய

லவங்கப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS