RSS

தழும்புகள்

முகப்பரு வருவது இயற்கை, அதனால் ஏற்படும் தழும்புகளும் இயற்கை. அது என்னதான் மேக்-அப் போட்டாலும் போகாத தழும்புகள் என்பது ஏறக்குறைய மருத்துவ உண்மை!


ஆனால் அதனை போக்க சில இயற்கை வழிமுறைகள் உள்ளன.

வெந்தயம் - முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளை ஒழித்துக் கட்ட சிறந்த மருந்தாகும். வெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல நீவி தடவவேண்டும். பிறகு தண்ணீரில் அலம்ப வேண்டும் இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் உங்கள் முகத்தில் நிச்சயம் மாற்றம் தெரியும்.

எலுமிச்சை சாறை எடுத்துக்கொள்ளவும், பஞ்சை அதில் நனைத்து பருக்கள் தழும்புகள் மீது தடவவும். சிறிது நேரம் கழித்து மிதமான கொதிநீரில் முகத்தை அலம்பவும். எலுமிச்சை கரும்புள்ளிகளை போக்கவும் சிறந்த மருந்தாகும்.

சந்தனம் மற்றும் பன்னீரைக் கலந்து பேஸ்ட் போன்று செய்து முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளலாம். ஒரு மணிநேரம் கழித்து பிறகு அலம்பவும்.

ஆலிவ் எண்ணெயை ரெகுலராக முகத்தில் தடவி வந்தால் ஏற்கனவே உள்ள பரு தழும்புகள் மறைவதோடு பருக்கள் உருவாவதையே தடுத்தாலும் தடுத்து விடும்.

வெள்ளரிப்பிஞ்சு முகத்தை மென்மையாக வைக்க உதவும் மற்றொரு இயற்கைப் பொருளாகும். இதனையும் ரெகுலராக பயன்படுத்தலாம்.

தக்காளி : இதை சாறு எடுத்து தடவி வந்தாலும் கரும்புள்ளி மறையும்.

மேலும் தழும்புகள் இயற்கையானவை .

ஓரளவு அதை வெளியே தெரியாமல் மறைக்கலாம் .அழகான வெண்ணிலவிலும் உண்டு மேடு பள்ளம். ஆனால் நிலவு அழகில்லை என யாரும் சொல்வது இல்லை... அதனால் ஒருபோதும் தழும்புகளை நினைத்து வருந்தாமல் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் தன்னம்பிக்கையோடு வாழ்கையை எதிர்கொள்ளுங்கள்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment