RSS

கொசுக்களினால் ஏற்படும் நோய்கள் அதற்கான டிப்ஸ்...


மலேரியா: காய்ச்சல், நடுக்கம், தசை வலி மற்றும் சோர்வு ஆகியவைகள் மலேரியாவின் அறிகுறிகளாகும். மலேரியா காய்ச்சல் பெண் அனாஃபிலிஸ் என்ற கொசுக்களால் ஏற்படுகிறது. இவ்வகை கொசுக்கள் தண்ணீர் தேங்கியிருக்கும் இடத்தில் இனப்பெருக்கமாகும்.

டெங்கு: டெங்கு காய்ச்சலும் கொசுக்களால் ஏற்படுவதுதான். இக்காய்ச்சல் வந்தால் உடல் வலி, மூட்டு வலி மற்றும் தடிப்புகள் போன்றவை உண்டாகும். நோய் வருவதற்கான முக்கிய காரணம் டைகர் கொசுக்கள்தான். இந்த கொசுக்கள் வராமல் தடுப்பதற்கு பூச்சி விலக்கிகளைப் பயன்படுத்த வேண்டும்.

சிக்கன் குனியா: ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால் வருவது சிக்கன்குனியா. திடீரென வரும் காய்ச்சலோடு சேர்ந்து கடுமையான மூட்டு வலி இருக்கும். ஏடிஸ் கொசுக்கள் வீட்டில் வைத்திருக்கும் தண்ணீரில்தான் அதிகம் இனப்பெருக்கமாகும். இந்த கொசுக்கள் பகல் நேரத்தில் கடிக்கும். இதனை தடுக்க தண்ணீர் தொட்டிகளை சுத்தப்படுத்தி, கொசுக்களை அழிக்கும் பூச்சி மருத்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

டைபாய்டு: டைபாய்டு என்ற நோய், தண்ணீரினால் வருவதாகும். டைபாய்டு வர காரணமாக இருப்பது எஸ்.டைஃபி என்ற பாக்டீரியா. அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை உபயோகிப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற சீர்கேட்டினாலும் உருவாகும்.
அறிகுறிகள்: காய்ச்சல், தலைவலி, சோர்வு, வலி மற்றும் தொண்டைப்புண் ஆகியவைகள்தான்.

வயிற்றுப்போக்கு: எளிதில் தாக்கும் நோய்களில் வயிற்றுப்போக்கும் ஒன்று. வயிற்றுப்போக்கு ஏற்படும்போது நீராதாரம் அதிகளவு வெளியேறும். இதன்காரணமாக நடக்க முடியாமை, உடல் சோர்வு ஏற்படும். இந்நோய் ஏற்பட்டால் காலதாமதமின்றி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது அவசியம். வயிற்றுப்போக்கு பெரும்பாலும் சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீரால் ஏற்படுகிறது.

வயிற்றுப்போக்கில் இருவகைகள் உண்டு. கடுமையான வயிற்றுப்போக்கு (அக்யூட் டையரியா), தீவிரமான வயிற்றுப்போக்கு (குரோனிக் டையரியா). இவை இரண்டையுமே வரும் முன் தடுக்க முதலில் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன் கையை கழுவ வேண்டும். வெந்நீரைக் குடிப்பது நல்லது.
காலரா : காலரா இருந்தால், கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படும்.

மஞ்சள் காமாலை: மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் கிருமிகள், சுத்தமில்லாத உணவுகள் மற்றும் தண்ணீரின் மூலம் வருகிறது. அறிகுறிகள்: சோர்வு, மஞ்சள் நிற சிறுநீர், வாந்தி மற்றும் ஈரல் செயல் பிறழ்ச்சி. இவற்றை தடுக்க கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். சத்தான பானங்களை அதிகமாக குடிக்க வேண்டும்.

வைரஸ் காய்ச்சல் : வைரஸ் காய்ச்சல் அனைத்து காலங்களிலும் உருவாகும். மிதமான முதல் அதிகமான காய்ச்சல் தான் இதற்கான அறிகுறி. இக்காய்ச்சல் தொடர்ந்து 37 நாட்கள் வரை நீடிக்கும். மேலும் இதனுடன் சளியும் இருமலும் சேர்ந்து இருக்கும். நிலவேம்பு பொடியுடன் தண்ணீ­ர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தால் இந்நோயிலிருந்து விடுபடலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment