பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்..!

* புற்றுநோய் பரவுவதை தடுக்கும்.
* மலச்சிக்கலைப் போக்கும்.
* பித்தத்தைக் குறைக்கும்
* அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.
* கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது. மற்றும் கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 5.5 மில்லிகிராமும், இருப்பு 10 மில்லிகிராமும், வைட்டசின் சி 10 மில்லிகிராமும் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்வர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.

பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு.

1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.
4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.
5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.
6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.
7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.
8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தலைவலி குணமாக

28 வகையான பாட்டி வைத்தியங்கள் :-
தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. தலைவலி என்ற உடன் பலர்மாத்திரையை சாப்பிடும் பழககம் கொண்டுள்ளனர். முடிந்தவரை தலைவலிக்கு மாத்திரைகளை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.

தலைவலி சரியாக சில பாட்டி வைத்தியங்கள் :-
1) கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விலகும்.
2) திருநீற்றுப பச்சிலைச் சாறு, தும்பைச்சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து நெற்றியில் தடவ தலைவலி தீரும்.
3) துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும்.
4) கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று போட தலைபாரம் குறையும்.
5) நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
6) துளசி இலைகளோடு ஒரு துண்டு சுக்கு, லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குறையும்.
7) கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.,
8) வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.
9) முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும்.
10) கீழாநெல்லிச்சாறு, குப்பைமேனி இலைச் சாறு இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி நெற்றியில் தடவி வர தலைவலிஎலுமிச்சைப் பழச் சாற்றை இரும்பு சட்டியில் விட்டு காய்ச்சி நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.
11) இஞ்சிச் சாறை நல்லெண்ணெயில் காய்ச்சி தினமும் தலையில் தேய்த்து வர தலைவலி குறையும்.
12) ஓமவல்லி இலைச் சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை கலந்து நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.
13) அகத்தி இலையை அரைத்து நெற்றியில் பற்று போட தலை வலி குறையும்.
14) மிளகாய் , மிளகு, செம்மண் முன்றையும் சம அளவு எடுத்துத் தண்ணீர் விட்டு மைப்போல அரைத்துக் கொதிக்க வைத்து இளஞ் சூடாகப் பற்றுப் போட தலைவலி குறையும்.
15) இஞ்சியைத் தட்டி வலி உள்ள இடத்தில் பற்றுப் போட தலை வலி குறையும்.
16) வெற்றிலை, நொச்சி இலை, குப்பைமேனி இலை, மிளகு, சுக்கு இவற்றின் சாறை எடுத்து காய்ச்சி தலையில் தேய்த்து குளிக்க தலைவலி குணமாகும்.
17) சுக்குப் பொடியை பாலில் குழைத்து நெற்றியில் தடவ தலை வலி குறையும்.
18) மிளகை அரைத்து பாலுடன் கலந்து தலையில் தேய்த்து குளிக்க தலை வலி குறையும்.
19) கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையை நெற்றியில் தடவினால் தலைவலி குறையும்.
20) அகத்தி இலைச் சாறெடுத்து நெற்றியில் தொடர்ந்து தடவி வர தலை வலி குறையும்.
21) எலுமிச்சைப்பழச் சாற்றில் மிளகை மைய அரைத்து நெற்றியில் போட தலைவலி குறையும் .
22) குங்குமப்பூவை மைய அரைத்து நெற்றிப்பொட்டில் தடவ தலைவலி குணமாகும்.
23) நெல்லிக்காயை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி நீங்கும்.
24) இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்று சேர்த்துக் காய்ச்சி சீசாவில் வைத்துக் கொள்ளவும். தைலத்தை தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின் குளிக்க
தலைவலி குணமாகும்.
25) ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி விலகும்.
26) ஜாதிக்காய் விதைகளை அரைத்து அடிக்கடி தலையில் தேய்த்தால் தலைவலி நீங்கும்.
27) மிளகு, துளசி இரண்டையும் வாயில் போட்டு கொண்டால் தலை வலி விரைவில் குறையும் .
28) உப்பு,மிளகு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விரைவில் நீங்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அல்சரால்_அவதியா‬ ..??

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் வாட்டி வதைக்கிறது “அல்சர்”.
ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கம், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளால் மக்கள் ஈர்க்கப்படுகின்றனர்.
‪#‎அல்சர்‬ என்பது ‪#‎என்ன‬..???
தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக ‘பெப்டிக் அல்சர்’ (Peptic ulcer) என்கிறோம்.
இரைப்பையில் புண் ஏற்பட்டால் ‘கேஸ்ட்ரிக் அல்சர்’ (Gastric ulcer) என்றும், முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் ‘டியோடினல் அல்சர்’ (Duodenal ulcer) என்றும் அழைக்கிறோம்.
இரைப்பையில் உணவு செரிப்பதற்காகச் சுரக்கப்படுகின்ற ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் எனும் என்சைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது, இரைப்பை, முன்சிறுகுடலின் சுவற்றில் உள்ள மியூகஸ் படலம் அழற்சியுற்று வீங்கிச் சிதைவடையும்.
காரணங்கள்
காரம் நிறைந்த, புளிப்பு மிகுந்த, மசாலா கலந்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது.
மது அருந்துதல், புகைபிடித்தல், மென் குளிர்பானம், காபி, தேநீர் பானங்களை அதிகமாகக் குடிப்பது.
ஸ்டீராய்டு மாத்திரைகள், ஆஸ்பிரின், புரூஃபென் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி சாப்பிடுவது.
உணவை நேரம் தவறிச் சாப்பிடுவது, அதிகச் சூடாகச் சாப்பிடுவது, பட்டினி கிடப்பது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள் இரைப்பைப் புண்ணுக்கு வரவேற்பாக அமைகின்றன.
தினமும் வேளை தவறிச் சாப்பிடுபவர்களுக்கும் காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கும் இரைப்பைப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதற்குக் காரணம், நமக்குப் பசி உணர்வு தோன்றியதுமே ஹைட்ரோகுளோரிக் அமிலமும், பெப்சின் என்சைமும் சுரக்கத் தொடங்கிவிடும்.
அப்போது நாம் உணவைச் சாப்பிடாவிட்டால் இந்த அமிலம் இரைப்பையின் மியூகஸ் படலத்தைத் தின்னத் தொடங்கும். இது நாளடைவில் இரைப்பைப் புண்ணுக்கு வழிவகுக்கும்.
இந்த நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான். இதைத் தொடர்ந்து அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லாமல் இருக்கும்.
குறைந்த அளவு உணவைச் சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உண்டாகும். பிறகு வயிற்றில் வலி தோன்றும்.
குறிப்பாக இரைப்பை காலியாக உள்ள நள்ளிரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி வரும், புண் உள்ள இடத்தில் அமிலம்படுவதால், இந்த வலி ஏற்படுகிறது.
அதுபோல் உணவைச் சாப்பிட்ட பின்பும் இதே வலி உண்டாகும். காரணம் புண்ணின் மீது உணவு படுவதால் இப்படி வலி ஏற்படுகிறது.
சிகிச்சை என்ன?
இரைப்பை புண்ணைக் குணப்படுத்த அமில எதிர்ப்பு மருந்துகள் (Antacids), ‘பிபிஐ’ (Proton pump inhibitor) மாத்திரைகள்/ஊசி மருந்துகள் உள்ளன.
இவற்றைச் சரியாக எடுத்துக்கொள்வதன் மூலமும் உணவுப் பழக்கத்தைச் சரிபடுத்தி கொள்வதன் மூலமும் 90 சதவிகித இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்திவிடலாம்.
ஒரு சிலருக்கு மட்டுமே மாத்திரை, மருந்துகள் பலன் தராது. அவர்களுக்கு மட்டும் அறுவைச் சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
1. குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். வயிற்றெரிச்சலை போக்கும்.
2. உங்கள் உணவில் நெய் சேர்த்துக் கொள்ளவும். நோயாளிக்கு நெய் ஜீரணமாகவிட்டால் வெந்நீருடன் சேர்த்து கொடுக்கவும்.
3. இரண்டு மூன்று வாழைப்பழங்கள் பாலுடன் கொடுத்தால் நல்லது. வாழைப்பழம் அதிக அமிலத்தை சரிப்படுத்தும். மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழம் சிறந்தது.
4. நெல்லிக்காய் சாறை சர்க்கரையுடன் சேர்த்து குடிக்க பலனளிக்கும்.
5. வில்வ இலைகள் / பழங்கள் – இவற்றை சேர்த்து கொண்டால் வயிற்றுப்புண்கள் குணமாகும்.
6. 250 கிராம் முட்டைக்கோசை 500 மி.லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியளவு ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கி குளிர வைக்கவும். இதை கேரட் சாறுடன் சேர்த்து பருகினால் அல்சர் குணமடையும்.
7. பாதாம் பால் (தோலுரிக்கப்பட்ட பாதாம் பருப்புகளால் செய்வது) அல்சருக்கு நல்லது.
8. உடைத்த அரிசியை, ஒரு பாகத்திற்கு 14 பாகம் தண்ணீர் சேர்த்து கஞ்சி தயாரிக்கவும். இது அல்சருக்கு நல்லது. பருப்பு, அரிசி தண்ணீர் சேர்த்து பொங்கல் போல் தயாரித்து உட்கொள்ளலாம்.
9. மாதுளம் பழச்சாறு அல்சருக்கும் நல்லது.
10. திரிபாலா சூரணம் (ஒரு தேக்கரண்டி) நெய் ஒரு தேக்கரண்டி மற்றும் தேன் 1/2 தேக்கரண்டி கலந்து எடுத்துக் கொண்டால் அல்சர் குணமாகும். 11. கொத்தமல்லி விதைகளை பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாகத்திற்கு 6 பாகம் தண்ணீர் என்ற அளவில் கலந்து கொதிக்க வைக்கவும். இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் இந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.
12. உங்களுக்கு அல்சர் இருந்தால் உளுந்து, கொள்ளு, மதுபானங்கள், சிகரெட், கத்திரிக்காய், மசாலா கலந்த காரசாரமான உணவு இவற்றை தவிர்க்கவும்.
13. உண்ணும் போது கோபம், தாபம், வருத்தங்களை தவிர்க்கவும்.
14. ஒரே வேளையாக அதிகம் உண்பதை தவிர்த்து, இடைவெளி விட்டு சிறிதாக உட்கொள்ளவும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புற்று நோய்க்கு இயற்கை மருத்துவம்

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும். சிங்கம் போல சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்றுநோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து, குணப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரைவிட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.


எனக்கு தெரிந்து, மிக நெருக்கமான வட்டத்தில் மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கிவிட்டது. அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை. அப்படிபட்ட புற்றுநோயை படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும், பாதிரியாருமாகிய ரோமனோ சகோ ஆவார்.

இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்றுநோயால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம். இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும்.

இதற்கென எடுத்து கொள்ளவேண்டிய மருத்துவ பொருட்கள். சோற்று கற்றாழை 400 கிராம். சுத்தமான தேன் 500 கிராம். விஸ்கி அல்லது பிராந்தி 50 மி.லி (மருந்தாகமட்டும் எடுத்து கொள்ளவேண்டும்).
தயாரிப்பு முறை:

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும். நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் விஸ்கி அல்லது பிராந்தியுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்கவேண்டும். அப்போது மருந்து தயாராகிவிடும்.
மருந்தை உட்கொள்ளும் விதம்:

இம்மருந்தை தினமும் மூன்று வேலை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 மி.லி வீதம் உண்ண வேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும். மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும்.

பத்து நாட்களுக்கு மேல் மருந்தை சேர்த்து வைக்ககூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும். சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது. இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது.

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும். சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக புகை பழக்கத்தை நிறுத்தி, இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.

ஒரே ஒரு நிமிஷம் உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுங்கோங்க… கண் முன்னாலே உங்கள் மனைவி, குழந்தைகள், வயசான அப்பா, அம்மா, எல்லோரும். நீங்க இல்லாம கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க அந்த கருமத்தை இதுக்கு மேலே தொடாதீங்க.

இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
இயற்கையோடு ஆரோக்கியமாக வாழ்வோம்..!
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் விழிப்புணர்வு செய்யுங்கள்..!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பேரீச்சம்பழத்தின் 10 நன்மைகள்

பேரீச்சம்பழத்தில் புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், மாங்கனீசு,பொட்டாசியம்,தாமிரம்,மக்னீசியம், இரும்புச்சத்து, விட்டமின் -A, விட்டமின் -B, விட்டமின் -E, விட்டமின் -B2 விட்டமின் -,B5 போன்ற அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் குளுக்கோஸ், பிரக்டோஸ்,சுக்ரோஸ் போன்ற சத்துகள் நிறைந்து காணப்படுகிறது.

மருத்துவ பயன்கள்

மாலைக்கண் நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான எல்லா சத்துகளும் கிடைத்து கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாத விலக்கை நிவர்த்தி செய்ய பேரீச்சம் பழம் நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.

ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உடலின் எடையை அதிகரிக்க தினமும் காலையில் பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருவதால்,அப்பழத்தில் இருக்கும் விட்டமின் மற்றும் புரதம் போன்றவை உடல் எடையினை அதிகரிக்கச் செய்கிறது.

தினமும் பேரீச்சம் பழத்தை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

பேரீச்சம் பழத்தில் நிறைய விட்டமின் A,B இருப்பதால், இவை சருமத்தை மிருதுவாக்கி,சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் தழும்புகள் மறைவதற்கு பயன்படுகிறது.

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை பேரீச்சம் பழத்தில் இருப்பதால்,இவை ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

பேரீச்சம் பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து மற்றும் விட்டமின் C,B6 போன்றவை ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்து ரத்த சோகை பிரச்சனையை தீர்க்கிறது.

முதியவர்களுக்கு உண்டாகும் கை,கால் மூட்டு வலி போன்றவற்றை இந்த பேரீச்சம் பழம் குணப்படுத்துகிறது.

சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு பேரீச்சம் பழத்தை பாலில் போட்டு காய்ச்சிய பின் அதை குடித்து வந்தால் குணமாகும். கர்ப்பிணிப் பெண்கள் இந்த பேரீச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் குழந்தை மற்றும் தாய் நல்ல ஆரோக்கியத்தை பெறலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எளிய மருத்துவக் குறிப்புகள்

தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.


வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தண்ணீர் விட்டான்" கிழங்கின் மகத்துவம்

சித்தர்கள் காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரை ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் மருந்துகளின் வசீகரம் குறைந்தபாடு இல்லை.

அது போலவே அனைத்து நோய்களையும் போக்கும் சர்வரோக நிவாரணிகளை கண்டு பிடிப்பதில் தான் சித்தர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதிகளை பயன்படுத்தினர்.


ஆண்மையை அதிகரிக்கச்செய்வதோடு சர்வரோக நிவாரணியாக அனைத்து நோய்களையும் தீர்க்கும் "தண்ணீர் விட்டான்" கிழங்கின் மகத்துவம் நம்முடைய சித்தர்கள் மட்டுமல்ல வடநாட்டு ஞானிகளும் அறிந்துள்ளனர்.

வளரியல்பு:

அல்லி குடும்ப (Lilliaceae) தாவரமான "தண்ணீர் விட்டான்" கிழங்கின் அறிவியல் பெயர் அஸ்பாரகஸ் ரெசிமோசஸ்(Asparagus Recemouses ) என்பதாகும்.

வேலிகளில் படர்ந்து வளரும் இலைகள் முட்களாகவும், நுனி கிளைகளே இலைகளாகவும் உருமாறியுள்ளன. முழுத்தாவரமும் அடர்த்தியான பச்சை நிறம் கொண்டவை.

வேர்கிழங்குகள் சதைப்பற்றும் அதிக நீர் தன்மையும் கொண்டவை. வேர்கிழங்குகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனப்பெருக்கம் அடைகின்றன. நிலத்தடியில் கொத்து அவரைக்காய்கள் போல வேர்கள் காணப்படுகிறது.

வடமொழியில் சதாவரி (Shatavari - A Woman's Best Friend) என்று அழைக்கப்படுகிறது.

தண்ணீர் விட்டான் கிழங்கின் இரசாயன அமைப்பு:-

தண்ணீர் விட்டான் கிழங்கின் மருத்துவ குணத்திற்கு காரணன் அவற்றில் காணப்படும் பாலிபீனல் மூலப்பொருள்களும் அசபராஜின் என்ற நைட்ரஜன் காரப்பொருளும் தான்.

மருத்துவக் குணங்கள்:-

பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் இரத்தப்போக்கை கட்டுபடுத்துகிறது.

தாய்பால் சுரத்தலை அதிகப்படுத்துகிறது.

உடலினை உறுதியாக்கி ஆண்மையை அதிகரிக்க செய்கிறது.

உடல் உள்ளுருப்புகளின் புண்களை ஆற்றுகிறது. முக்கியமாக அல்சர் எனப்படும் வயிற்று புண்களுக்கு மிகச்சிறந்த மருந்து தண்ணீர் விட்டான் கிழங்கு ஆகும்.

பல்வேறு நோய்களை தீர்க்கும் சக்தி இருப்பதால் தண்ணீர்விட்டாண் கிழங்கை வடநாட்டு ஞானிகள் நூறு நோய்களின் மருந்து எனப் பொருள்படும் சதாவரி (சதா= நூறு , வரி = நோய்களின் மருந்து ) என பெயரிட்டுள்ளனர்.

அழகு தாவரம் தண்ணீர் விட்டன் கிழங்கு.
தண்ணீர் விட்டான் கிழங்கின் வெண்மை நிற பூக்கள் மிகவும் வசீகரமானவை.

சில சிற்றினங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வீட்டிலும் பூங்காவிலும் அழகிற்காக வளர்க்கப்படுகிறது.

அழகிற்காக வளர்க்கப்படும் சிற்றினங்களில் வேர்கள் பெரியதாகக் காணப்படுவது இல்லை.

தண்ணீர் விட்டான் கிழங்கு ஆரோக்கிய பானம் தயாரிப்பு.

இந்த ஆரோக்கிய பானம் தயாரிப்பு முறை இந்திய மருத்துவ கழகம் வெளியிட்ட இந்திய மருத்துவ முறைகள் என்னும் நூலினில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.

பசுமையான தண்ணீர் விட்டான் கிழங்குகளை தோல் நீக்கி, இடித்து சாறு எடுக்க வேண்டும்.

ஒரு கோப்பை சாறுடன் ஒரு தேக்கரண்டி சர்க்கரை கலந்து காலையில் பருக வேண்டும்.

இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும்.
தண்ணீர் விட்டான் கிழங்குகள் பல்வேறு பகுதிகளில் பணப்பயிராக பயிரிடப்பட்டு வருகிறது.
நாட்டு மருந்து கடைகளில் எளிதாகக் கிடைக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS