காற்று மூலம் வீட்டுத் தூசி, ஒட்டடை, பஞ்சுத் துகள்கள், சிகைக்காய்த்தூள், பூனை, நாய், முயல் போன்ற வீட்டு விலங்குகளின் முடிகள், பறவைகளின் இறகு, அரிசி, கோதுமை போன்ற தானியங்களின் மாவு முதலியன உடலுள் புகுகின்ற ஒவ்வான்களாகும். முட்டை, மீன், நண்டு, தக்காளி, அன்னாசி, சிலவகைக் கிழங்குகள், காய்கறிகள், ஆகியவற்றாலும் ஒவ்வாமை ஏற்படலாம். பெனிசிலின் விட்டமின் ‘b’ ஆஸ்ப்பிரின், அயோடின், டெட்டனஸ் தடுப்பூசி, நுண்ணுயிர் எதிர் மருந்துகள் (Antibiotics) சருமத்தில் தடவப்படும் சில களிம்புகள், மருந்துப்பொடி, சாயப்பொடி, ரப்பர் கையுறைகள், காலணிகள், நைலான் உடைகள், வாசனைப் பொருள்கள் போன்றவற்றாலும் சில நேரம் மன அழுத்தத்தாலும்..ஒவ்வாமை வரலாம்.
தவிர்ப்பது எப்படி...?
கத்தரிகாய், நல்லெண்ணெய், தயிர், புலால் உணவு, புளிப்பான ஊறுகாய் போன்றவற்றை உணவில் தவிர்ப்பது நலம்.
பகல் தூக்கம் அரிப்பை அதிகப்படுத்தும் என்பதால் அதைத் தவிர்க்கவும்.
நம்ம வீட்டுல இருக்கிற கற்றாழை இலையை 1 பறிச்சி அதை நீள் வாட்டத்தில் பாதியை வெட்டி அதில் வரும் ஜெல்லியை அரிக்கிற இடத்தில தடவலாம் இது அரிப்பை கட்டு படுத்தும்.
எலுமிச்சை சாரை தடவினாலும் அரிப்பு குறையும்.
.
துளசியை நாலு மென்னு தின்னலாம்.பாலில்லாத டீ யில நான்கு துளசியை போட்டு..கொதிக்க வைத்து பருகலாம்.
.
துளசியை நாலு மென்னு தின்னலாம்.பாலில்லாத டீ யில நான்கு துளசியை போட்டு..கொதிக்க வைத்து பருகலாம்.
நாம் உதட்டில் தடவும் Petroleum Jelly யை கூட அரிக்கும் இடத்தில தடவலாம்..
கல் உப்பை தூளாக்கி சிறிது வெண்ணீர் சேர்த்து, பாதிக்கப்பட்ட இடத்தில் லேசாக தடவுங்கள். அரிப்பிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும். ஒருவேளை கடற்கரைக்கு அருகில் இருந்தால், உப்பு நீரில் நீச்சலடியுங்கள், சிறந்த பலனைப் பெறுவீர்கள்.
வேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்த நீரில் குளியுங்கள்.உங்கள் பிரச்சினை தீரும்.
0 comments:
Post a Comment